Thursday, 13 November 2014

இசை ராட்சஷன் - 4                                         இசை ராட்சஷன் - 4

                              ( The Musical Legend )

               பதினாறு வயதினிலே படப்  பாடல்களின் தாக்கம் பல நாட்கள் நீடித்தது .  பிறகு 'அவர் எனக்கே சொந்தம்'  என்ற படத்தில் வந்த 'தேவன் திருச்சபை மலர்களே' பாடல் சிலோன் வானொலியில் அடிக்கடி போடப்பட்டதைக் கேட்டுவிட்டு மிகவும் ரசித்திருக்கிறேன் . இதயத்தை இறகால்  வருடும் கானம்.  இப்போது இசைக்கப்பட்டாலும் பால்ய காலத்தில் சர்ச் பாடகற்குழுவில் நான் சேர்ந்து பாடியது ஞாபகத்தில் வரும் . கன்னியர்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில் படித்தபோது எனது 'பாட்டு பாடும்' திறமைக்காக  ஒரு சிஸ்டர்  என்னை பாடகற்குழுவில் சேர்த்துவிட்டார்கள். எட்டு வயதில் அந்தக் குழுவில் நான் கானக்குயிலாக வலம்  வந்தேன் . குரல் பெண் குரலாக இருக்கும் . பதினைந்து வயதுவரை குரல் உடையவேயில்லை.


                    சர்ச்சில் சொல்லித்தரப்படும் எல்லா பாடல்களையும் எளிதாக மனப்பாடம் செய்து பாடிவிடுவேன் . பெண்கள் பாடும்போதுதான் பாடவேண்டும் என்பது கட்டளை . இல்லாவிடில் 'குட்டு' விழும். கிறித்தவப் பாடல்களுக்கென்று தனித்த இசை ஒன்று இருந்ததை அப்போது உணர்ந்தேன் . மேல்நாட்டு இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களும் மெல்லிசைப் பாடல்களும்  நிறைய இருந்தன .அவையெல்லாம் மனதை கொள்ளை கொள்ளும் இசையாக அமைந்தன. ஆனால் இப்போது வரும் கிறித்தவப் பாடல்களில் சினிமாவின் இசை ஏறிக்கொண்டதை பார்க்க முடிகிறது. ரசிக்க முடிவதில்லை . பக்திப் பாடல்களும் நிறம் மாறும் யதார்த்தம் கொஞ்சம் வருத்தப்பட வைக்கிறது .


                                                               

               

                          தேவன் திருச்சபை மலர்களே என்ற பாடல் ஒரு கிறித்துவப் பாடல் போலவே ஒலிக்கும் . சினிமாவிற்கான இசை அதில் மாறாது . கிடார் ஒலியின்  கார்ட்ஸ் ஆரம்பித்து பல இசைக்கருவிகளும் சேர்ந்து பல்லவி ஆரம்பிக்கும் அழகு பிரமாதம் . பாடகற்குழுவில் இருந்ததாலோ என்னவோ கேட்ட மாத்திரத்தில் மனதை ஆக்ரமித்தது . புதிது புதிதான இசைக் கருவிகளின் சங்கமம் ஆச்சரியப்பட வைக்கும். இப்போது பல கருவிகள் வந்துவிட்ட போதிலும் அந்த நேரத்தில் இளையராஜா பயன்படுத்திய இசைக்கருவிகளின் இசையொலி , நயம், ஓசை  எல்லாமே வினோதமானவை.  ஆரம்பத்தில் இளையராஜா ஒரு கிறித்தவராக வளர்ந்தபோது  சர்ச்சுகளில்  இசை கேட்ட பாதிப்போ என்னவோ இந்தப் பாடல் மட்டுமல்ல . அவர் இசைத்த கிறித்தவப் பாடல்கள் எல்லாமே கேட்பதற்கு இனிமையாகவும் சுகமாகவும் இருக்கும் . 'மாதா  உன் கோயிலில்',   'தேவனின் கோயிலிலே ' ,  'கடவுள் உள்ளமே கருணை இல்லமே ' , ' ஸ்தோத்திரம் பாடியே ' , போன்ற பாடல்கள் எல்லாமே அருமையான பாடல்கள் . அத்தனையும்  சூப்பர் ஹிட் !  
                                                          'தேவன் திருச்சபை மலர்களே ' போன்ற பாடல்களை அப்போது மனப்பாடமாய் பாடுவேன் . இப்போதுள்ள புதுப்பாடல்களில் ஒரு பாட்டு கூட  மனப்பாடம் ஆவதில்லை . பிள்ளைகள் கேலியாக 'எங்கே இரு வரிகள் தவறில்லாமல் பாடிக் காட்டுங்கள் '  என்று எனக்கு சவால் விடுகிறார்கள் . நான் கவனித்துக் கேட்டாலும் கவனம் அதில் போவதில்லை.  மனப்பாட சக்தி போய்விட்டதா?  மனசுக்குள் போகாமலே போய்விட்டதா?  ' பாட்டு என்றால் '  இதயம் நுழைந்து உணர்வில் கலந்து உயிரைத் தொடுவதாக இருக்கவேண்டும் '   என்று தத்துவமாகச் சொன்னால்  ' பாட்டு கேட்கிற மாதிரி இருக்கணும் ...ஏன் இவ்வளவு யோசிக்கறீங்க ' என்கிறார்கள் பிள்ளைகள். நமக்குப் புரிவது அவர்களுக்குப் புரிவதில்லை . நாம் ரசிப்பது அவர்கள் ரசிப்பதில்லை. நாம் ஏற்றுக்கொண்டதை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை . தலைமுறை இடைவெளி இதுதானோ ?  ' அப்பாவிற்கு என்ன பெரிதாகத் தெரியும்' என்று நான் என் தந்தையைப் பற்றிக்  கொண்டிருந்த  கணிப்பை பிள்ளைகள் எனக்கும் கணிக்கிறார்கள். உலகம் உருண்டை.  கிளம்பியவன் கிளம்பிய  இடத்திற்கே வந்து சேரவேண்டும் .


                                      முதன்முதலாக நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தீபம் திரைப்படத்திற்கு இசையமைத்தார்  இளையராஜா. அதுவரை எம்.எஸ்.வி. அவர்களே அதிகமாய் சிவாஜி படத்திற்கு இசையமைத்து வந்தார் . அதனால் அந்தப் படத்தின் பாடல்கள் எம்.எஸ்.வி இசையின் சாயல் கொண்ட பாடல்களாகவே  அமைந்தன.  திரைப்படக் கர்த்தாக்களின் நிர்ப்பந்தமோ என்னவோ சிவாஜிக்கென்று தனது பாணியை மாற்றிக் கொள்ளாமல் முன்னோர் வகுத்த பாணியிலேயே இளையராஜா இசையமைத்திருந்தார் . ஆரம்பத்தில் ஒரு சூழல் கொடுக்கப்பட்டால் பல டியூன்கள்  போடப்பட்டு இயக்குனரின் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்டதாக இளையராஜாவே  சொல்லியிருக்கிறார். எனவே தீபம் படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. காரணம் இயக்குனரா இசையமைப்பாளரா என்ற பட்டிமன்றம் நடத்தினால் வாதங்கள் முடிவுறாது. ஆரம்பத்தில் சுய வளர்ச்சிக்காகவும் வணிகரீதியாகவும் இளையராஜா வளைந்து கொடுத்துதான் போயிருக்க முடியும் .

       
                            ' அந்தப்புரத்தில் ஒரு மகராணி ' என்ற பாடலில் எம்.எஸ்.வி.தான் அதிகம் தெரிவார்.  'ராஜா யுவர் ராஜா ' , 'பேசாதே வாயுள்ள ஊமை நீ '  என்ற மற்ற இரு பாடல்களிலும் கூட இளையராஜாவின் முன்னோர்களே  தெரிவார்கள். பின்னணி இசையிலும் இளையராஜாவின் முத்திரை குறைவாக இருக்கும் . ' பூவிழி வாசலில் யாரடி வந்தது ' என்ற பாடலில் மட்டும் இளையராஜா முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். ஜேசுதாஸ் ,ஜானகி டூயட்டில் பாடல் கேட்க  சுகமானது .  நானும் அந்தப் பாடலை விரும்பிக் கேட்பேன்.


                              கவிக்குயில்  படத்தின் பாடல்கள் மனதைத் தாலாட்டின . 'குயிலே கவிக் குயிலே' என்று ஜானகி அவர்கள் தன்  குயில் குரலில் பாடுவதை  கண்ணை மூடிக் கொண்டு கேட்டால்  விடிந்தும் விடியாத காலையும் கதிரவன் மெதுவாய் எட்டிப் பார்க்கும் வேளையும் தோப்புக்குள் இரு குயில்கள் கேள்வி பதிலாய் மாறி மாறி கூவிக் கொள்ளும் இனிய பொழுதும் கற்பனைக்கு வரும் . சில பாட்டுக்கள் கேட்கும்போது நாம் சந்தித்த சில இடங்களையும் சில மனிதர்களையும் ,சில சூழல்களையும் நம் எண்ணச் சிறைக்குள்ளிருந்து இதயத்தின் அறைக்குக் கொண்டு வருகிறோமே அந்த விஞ்ஞானத்தை விளக்க யாரால் முடியும் ? குயில் சப்தத்திற்கு இணையான குழலின் நாதத்தை பாடல் முழுவதும் இழையோடவிட்டு இசைக்கப்பட்ட பாட்டு !  குயில் என்ற வார்த்தை பாடலில் இருந்தாலே புல்லாங்குழல் இசைப்பது எல்லா இசையமைப்பாளருக்கும் மரபே! இளையராஜா அதை கனக்கச்சிதமாகக் கையாண்டிருப்பார் .


                             ' சின்னக்கண்ணன் அழைக்கிறான் ' ....ஆகா என்ன ஒரு ஆனந்தமயமான பாடல் ! இசைப்பண்டிதர்  பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் தேமதுரக் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடலைக் கேட்டால் மனசு எங்கோ பறக்கும் . பெண் குரலிலும் அதே பாடல் பாடப்பட்டிருந்தாலும் பாலமுரளி அவர்களின்  குரலில் அந்தப் பாடலுக்கு தனி மகத்துவம் இருக்கும். இரு ஆண்டுகளுக்கு முன்பு   'என்றென்றும் ராஜா ' என்ற தலைப்பில்  இளையராஜாவின் இசைக்கச்சேரி ஆர்ப்பாட்டமாக நடந்தது . ஜெயா  டிவியில் ஒளிபரப்பப்பட்டது .


                நாதகலாஜோதி பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருக்க இளையராஜா அன்னாரைப் பார்த்து , 'அண்ணா ...மேடைக்கு வர்றேளா ' என்று பவ்வியமாக அழைத்தார் . நிகழ்ச்சி வழிநடத்தும் பிரகாஷ்ராஜ் பெரியவரை அழைத்து வந்தார் .  ' உங்களுக்காகவே இந்தப் பாடலை அண்ணா பாடணும்னு சொல்லி நான்  கேட்டப்போ ...' என்று கூடியிருந்த மக்களைப் பார்த்துப்  பேசிய இளையராஜா சற்று நிறுத்தியவுடன் மக்களின் ஆரவாரம்.  '.....நான் கேட்டப்போ ...என்ன பாடல் பாடப் போகிறார் என்று உங்களுக்கு நல்லா தெரியும் . நான் சொல்ல வேண்டியதில்லை . அவரை நான் அழைத்தேன் . ஏனா நான் இளையராஜா சின்ன கண்ணன் ...' என்று தொடர்ந்து பேசி அவருக்கு முன்னால் தனது  சங்கீத ஞானம் குறைவு என்பதை பணிந்து ஏற்றுக்கொண்டார் .


                      தொடர்ந்து ' பாலமுரளி கிருஷ்ணா என்றாலும் சின்னக் கண்ணன் என்றுதான் அர்த்தம் ' என்று இளையராஜா முடிக்க பாலமுரளி அவர்கள் ' புதுமை, இனிமை, இளமைக்கு ராஜா ..இளையராஜா ...ராஜா பாட வரச் சொன்னப்போ எனக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது . பெரியவா பாடுற மேடையில எப்படி நான் பாடுறதுனு ...  சரி ஏதோ சின்னக் கண்ணன்தானே பாடலாம் '  என்று அவர் பதிலுக்கு சொல்லும்போதே பாட்டிற்கான இசை ஆரம்பித்தது . அற்புதமாக பாடல் சென்றது . அவரும்  அற்புதமாக பாடினார் . பின்னணி இசை துளியும் மாறவில்லை .  பொதுவாக இசை மேடைகளில் துல்லியம் காட்டுவது அரிதான ஒன்று. இளையராஜா perfectionist என்பதை அங்கும் நிரூபித்தார். இசைக் கருவிகள் அச்சுப் பிசகாமல் வாசிக்கப்பட்டன .
                                                   

                                                                                        
                     

                               இளையராஜா யாரையும் மதிப்பதில்லை . தலைக்கணம் பிடித்தவர். கர்வம் கொண்டவர் என்று சிலருடைய தவறான எண்ணங்களுக்குச் சாட்டையடி கொடுக்கக்கூடியதாயிருந்தது அந்த சந்திப்பு.  இளையராஜா எப்போதும் தன்னுடைய இசை முன்னோர்களை பெருமிதமாகவும் மரியாதையாகவும் வியந்துமே பேசுவார் .  சமீபத்தில் எம்.எஸ்.வி பற்றிச் சொல்ல வரும்போது , 'அவர் துப்பிய எச்சில் எங்களுக்கு சாப்பாடு  ' என்று அவர் இசை கேட்டு வளர்ந்து, அவர் பாதையில் இசைக்க ஆரம்பித்து , அவரிசையை  அகத்தூண்டலாகக்  கொண்டு தனித்துவம் அடைந்ததை பூடகமாகச் சொன்னவர் இளையராஜா . தன் முன்னோர்களை மதிக்கத் தெரிந்தவர் .


                            இளையராஜா என்ற இசைக் கலைஞனின் பாதிப்பு தாக்கம் எந்த அளவிற்கு மக்களுடைய வாழ்க்கையில்  புகுந்திருக்கிறது  , அவருடைய இசை எப்படி காற்றோடு காற்றாக கலந்திருக்கிறது , வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் சந்திக்கும் சம்பவங்களோடு எப்படிப் பின்னியிருக்கிறது என்பதை கீழே உள்ள கானொளியில் காணுங்கள்.
                             


               எப்போதோ  எங்கோ யாருக்கோ கொடுத்த பேட்டியில் தான் செய்த சாதனையை சுட்டிக் காட்டி  'என்னைப் போல் முடியுமா? ' என்று அவர் சவாலுக்கு விடுத்ததை  'தலைக்கணம் ' என்றால் இருந்துவிட்டு போகட்டுமே !
தவறென்ன இருக்கிறது? பதிலுக்கு யாரும் 'முடியும்' என்று சொல்ல முடியவில்லை. இல்லாதவரே  இருப்பது போல் ஆடுகிறார்.  இருப்பவர் இருப்பதைச் சுட்டிக் காட்டக் கூடாதா ? இளையராஜாவை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்காமல் போனவர்கள் சொன்ன கர்வம், திமிர் , செருக்கு என்பதெல்லாம் எல்லா மனிதருக்குள்ளும் உண்டு.  சாதித்தவருக்கு அது கலைச்செருக்கு.  திறமையுள்ளோருக்கு  அழகு  அவர்களின்  ஞானச்செருக்கு !


                      இறந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையே பயணிக்கும் சிந்தனையில் மீண்டும் 77 க்கு வந்தால் காயத்ரி என்றொரு திரைப்படம் .
 சுஜாதாவின் குரலில் ஒரு பாடல் . ' காலைப் பனியில்  ஆடும் மலர்கள் ' கேட்க இனிமையான பாடல் . பால்ய காலத்தில் நான் கூர்ந்து நோக்காத பாடல்களின் வரிசையில் இதைச் சேர்க்கலாம் . நான் கவனித்திருக்காவிட்டாலும் சிலோன்வானொலி நல்ல பாடல் எதையும் ஒதுக்குவதேயில்லை.  இளையராஜாவின் கானங்கள் காற்றில் கலந்து கொண்டுதான் இருந்தன. 

               
                                                                அதே வருடத்தில் மற்ற படங்களில் வந்த பாடல்கள் பெரிதான வரவேற்பைப் பெறவில்லை . அந்தப் படங்களின் பாடல்களை இணையத்தின் உதவியுடன் கேட்டுப் பார்த்தபோது இளையராஜாவின் கைவண்ணம் தெரிந்தாலும் மனம் கவராத சில பாடல்கள் இருந்தன. அவற்றை மக்கள் ஏற்காததால்  ' அத்திப்பூ'  வரிசையில் இடம் பெற்றன. சிலோன் ரேடியோவில்    ' அத்திப்பூ'   என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள்.  சிறிதும் பிரபலம் அடையாத பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பப்படும் . அதிலும் சில பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும் ஏன் அந்தக்  கதிக்கு ஆளாயின என்பது புதிர் !   


.............................தொடர்வேன் ......................................


179 comments:

 1. சால்ஸ்,

  எதைச் சொல்ல வருகிறீர்கள் என்றே புரியவில்லை. இசை ராட்சஷன் பற்றி எழுதுவதை விட்டு விட்டு எங்கெங்கோ செல்கிறது உங்கள் எழுத்து. உங்களின் முந்தைய பதிவுகளில் இருந்த எதோ ஒன்று குறைந்தது போலிருக்கிறது.
  ஒரே உருப்படியான விஷயம் சர்ச் இசைக் குழுக்களை குறிக்கும் அந்த கார்ட்டூன் படம் தான். அமர்களமாக இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று படங்களை போட்டிருக்கலாம். அதாவது கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும்.

  புதிதாக காணொளி இணைப்பெல்லாம் வேறு.. நல்ல முன்னேற்றம்தான்.. எல்லாமே பாலைவனத்தில் பெய்யும் மழை போல இருக்கிறதே. என்ன செய்ய? நீங்கள் கூறியபடி தீபம் படப் பாடல்கள் வெற்றிபெறவில்லை என்பது உண்மையல்ல. தீபம் படத்திற்கு இளையராஜா இசை அமைத்த பின்னரே அவருக்கு வணிக ரீதியாக ஏறுமுகம் உண்டானது. கீழே உள்ளது நான் நண்பர் ஆல்பி தளத்தில் தீபம் பாடல் குறித்து சொன்ன கருத்து.

  ---இளையராஜாவுக்கு சீனியர்களான சங்கர் கணேஷ் எம் ஜி ஆரின் இரண்டு படங்களுக்கு இசை அமைத்த பிறகும் கூட சிவாஜி படத்திற்கு இசை அமைக்க வாய்ப்பு கிடைக்காத சமயத்தில் இசை அமைக்க வந்த அடுத்த ஆண்டே (77) இளையராஜாவுக்கு சிவாஜியின் தீபம் பட வாய்ப்பு கிடைத்தது அவருக்கு வணிக அளவில் மிகப் பெரிய அந்தஸ்தை அளித்தது. தீபம் படத்திற்குப் பிறகே பல தயாரிப்பாளர்கள் இளையராஜாவை நோக்கி நகர ஆரம்பித்தார்கள் என முரளி ஸ்ரீனிவாஸ் என்பவர் (தமிழ்த் திரைப்படங்களைப் பற்றித் துல்லியமாகத் தகவல்கள் சொல்பவர்) குறிப்பிடுகிறார். அது உண்மையே. நீங்கள் கூறியது போல சிவாஜிக்கு இறங்கு முகம் இளையராஜாவுக்கு ஏறு முகம் அப்போது. சிவாஜி கூட இந்த காலகட்டத்தில் தனக்குப் பிடித்த பாடலாக செந்தூரப்பூவே பாடலைக் குறிப்பிடுவது உண்டு.--

  உங்களைவிட எனக்கு இளையராஜாவை சற்று அதிகம் தெரிவது போல இருக்கிறது. இதுதான் முரண். அப்பறம் அந்த சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலை நீங்கள் தொடாமலே எதோ ஒரு ஜெயா டி வி நிகழ்ச்சியை விவரித்தது ஒரு நெருடல். (நீங்கள் ஜெயா டி வீயெல்லாம் பார்ப்பீர்களா? உங்கள் கொள்கைக்கு அது சரிப்பட்டு வராதே) மேடைகளில் ஒருவரை ஒருவர் புகழ்ந்துகொள்வதையெல்லாம் எடுத்துப் போட்டு உங்கள் தலைவருக்கு மாலை அணிவிக்க வேண்டிய கட்டாயம் பாவம் உங்களுக்கு! வருத்தப்படுகிறேன். இதுவெல்லாம் ஒரு சம்பிரதாயமான சங்கதிகள்.. இதே நாதகலாஜோதி பால முரளி கிருஷ்ணா எம் எஸ் வி பற்றியும் புகழ்ந்து சொல்லியிருக்கிறார். இதுபோன்ற மேடை சம்பவங்களை உங்கள் எழுத்துக்கு ஆதாரமாக இழுத்துக்கொண்டு வருவது அதிகமாக சூப்பர் சிங்கர் நிகழ்சிகளைப் பார்ப்பதால் வரும் விபரீதம். நான் அந்தப் பக்கமே போவதில்லை.

  பிறகு அந்த ஞானச் செருக்குக்கு வருவோம்.. திமிர், மண்டைக் கணம், அகம்பாவம், ஏளனம் இதற்க்கெல்லாம் இப்படி ஒரு பெயரைச் சூட்டிவிடலாம் போல தெரிகிறது. வேறுவழி! இப்படி எதையாவது சொல்லித்தானே உங்களால் உங்கள் இசைமேதையின் கறுப்புப் பக்கத்தை சமாளிக்கமுடியும்? இன்னும் கூட எதிர்பார்த்தேன்..

  காயத்ரி படத்தில் வாழ்வே மாயமா என்றொரு பாடல் நன்றாக இருக்கும். எனக்குப் பிடித்த பாடல்.

  ReplyDelete
 2. 'சமீபத்தில் எம்.எஸ்.வி பற்றிச் சொல்ல வரும்போது , 'அவர் துப்பிய எச்சில் எங்களுக்கு சாப்பாடு ' என்று அவர் இசை கேட்டு வளர்ந்து, அவர் பாதையில் இசைக்க ஆரம்பித்து , அவரிசையை அகத்தூண்டலாகக் கொண்டு தனித்துவம் அடைந்ததை பூடகமாகச் சொன்னவர் இளையராஜா . '

  ஹா ஹா ஹா ... நீங்கள் உண்மையிலேயே இளையராஜாவைப் புகழ்கிறீர்களா அல்லது இது வஞ்சப் புகழ்ச்சியா? எதோ ராஜாவை .......ரேஞ்சுக்கு சொல்லிஇருகிறீர்கள். அவர் என்ன சொன்னார் எனபதை தெரிந்துகொண்டு எழுதுங்கள்.

  ReplyDelete
 3. வாங்க காரிகன்

  மற்றவர்கள் எழுதுவது உங்களுக்கு அப்படிதான் இருக்கும் . நீங்கள் எழுதினால் எல்லோருக்கும் புரிந்துவிடும் . இளையராஜா பற்றி எழுதுபவர்கள் எல்லாம் அவரைப் புரியாமலே எழுதுகிறார்கள். நீங்கள் அவர்களை விட அதிகம் புரிந்தவர் . ம் ... நகைச்சுவை! இசைஞானி ரசிகர்கள் படித்துவிட்டு சிரித்துக் கொண்டிருப்பார்கள் . மேடைகளில் பாலமுரளி கிருஷ்ணா எம்.எஸ்.வி அவர்களையும் புகழ்ந்தவர்தான். நானும் ஏற்றுக் கொள்வேன் . என்ன சொல்ல வருகிறீர்கள் ? புகழ்ச்சி தவறு என்றா? பாலமுரளி புகழ்ந்தது தவறு என்றா? ஓ....மேடைகளில் புகழ்வது சும்மா பொழுது போவதற்காக என்று சொல்கிறீர்களா? இளையராஜாவை புகழ்ந்தால் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என நினைத்துப் புகழ்கிறார்களோ? எம். எஸ்.வி யை புகழ்ந்தால் ?

  சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்ற பாடல் உங்களுக்கு ரொம்ப கேவலமாகத் தெரிகிறதா? இளையராஜா பாடல்கள் எடுத்துப் போட்டு அவருக்கு மாலை அணிவிக்க நான் நினைப்பது போல் எம்.எஸ்.வி மற்றும் பெரும்பான்மை தமிழர்களுக்குத் தெரியாத குமார் வெங்கடேஷ் , விஜய பாஸ்கர் இவர்களுக்கு மாலை அணிவித்துக் கொண்டிருக்கிறீர்களே அதை நான் என்னவென்று சொல்வது?

  காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரவேண்டிய இசை அமைப்பாளார்களின் பாடல்களை எல்லாம் எடுத்துப் போட்டு கைதட்டல் வாங்க நினைக்கும் உங்களுக்கு ஏன் இந்த அவல நிலை?
  கடைசியில் ' கை தட்டிய அந்த நாலு பேருக்கு நன்றி ' என்று சொல்லும் பரிதாபமான நிலைமையில் இருக்கும் உங்களுக்கு வெட்டி ஜம்பம் தேவையா?

  சிவாஜி படம் இசையமைத்த பிறகுதான் இளையராஜா எழுந்தாரா? சிரிப்பு காட்டாதீங்க . முதல் படத்திலேயே எழுந்து விட்டார் . முதல் படமே விஸ்வரூப வெற்றி என்பது முதன் முதலாக இளையராஜா ஒருவரையேச் சாரும் . அவருக்குப் பின் வந்தவர் அப்புறம்தான்!

  காயத்ரி படத்தில் காதலென்னும் ஓவியம் என்ற பாடலும் நன்றாகத்தான் இருக்கும் . ஹிட் லிஸ்டில் இரண்டும் வரவில்லை.

  ReplyDelete
 4. ஹலோ அனானி

  பேர் சொல்ல முடியாமல் ஒளிந்து மறைந்து பேசாமல் பேசும் நண்பரே! பதிவைத் தெளிவாக வாசியுங்கள் . தன இசை முன்னோர்களை மதிக்கத் தெரிந்த இளையராஜா கீழிறங்கி பேசிய வார்த்தைகளாக சொல்லி இருக்கிறேன் . இது எப்படி வஞ்சப் புகழ்ச்சி ?
  அது என்ன .......ரேஞ்ச் ? சரி எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என்ன சொன்னார் என்று தெளிவாகத் தெரிவியுங்கள் பார்ப்போம்.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. சால்ஸ்,

  உங்கள் பதில் சூடாக இருக்கிறது ஆனால் சத்தாக இல்லை -துரித உணவு போல. சற்று பொறுமையுடன் நிதானமாக உங்கள் கருத்தை எழுதியிருக்கலாம் என்பது எனது தாழ்மையான எண்ணம். அதை விடுங்கள்.

  நான் உங்கள் எழுத்தைக் குறை சொல்லவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி பாணி உண்டு. அதை கிண்டல் செய்வது பாமரத்தனம். அதுசரி, விஷயத்திற்கு வருவோம். மேடைப் புகழாரங்கள் ஒரு அலங்காரமான ஆடம்பரங்கள். அவைகள் மட்டுமே உண்மையாகிவிடாது என்பதே எனது கருத்து. இதில் எம் எஸ் வி என்ன இளையராஜா என்ன எ ஆர் ரஹ்மான் என்ன? ஒரு சாதாரணன் தன் மன ஆழத்திலிருந்து என்ன சொல்கிறான் என்பதைத்தான் நான் அதிகம் மதிக்கிறேன். எனவேதான் அதுபோன்ற சம்பவங்களை என் பதிவுகளில் குறிப்பிடுகிறேன்.

  சின்னக் கண்ணன் அழைக்கிறான் பாடலை நான் ரசிப்பவன்தான். பால முரளி கிருஷ்ணாவின் ஊஞ்சல் குரலில் அதைக் கேட்க ஆனந்தமாக இருக்கும். இந்தப் பாடல் உருவான ராகம் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலே இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் கூட கண்கள் இரண்டால் என்று சின்னக் கண்ணனை அப்படியே நகல் எடுத்து இன்றைய தலைமுறையினரிடம் பாராட்டு வாங்கியிருக்கிறார். எனக்கு அந்தப் பாடல் சற்றும் பிடிக்காது.

  ----- எம்.எஸ்.வி மற்றும் பெரும்பான்மை தமிழர்களுக்குத் தெரியாத குமார் வெங்கடேஷ் , விஜய பாஸ்கர் இவர்களுக்கு மாலை அணிவித்துக் கொண்டிருக்கிறீர்களே அதை நான் என்னவென்று சொல்வது?
  காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் வரவேண்டிய இசை அமைப்பாளார்களின் பாடல்களை எல்லாம் எடுத்துப் போட்டு கைதட்டல் வாங்க நினைக்கும் உங்களுக்கு ஏன் இந்த அவல நிலை? -----------

  நான் கைதட்டல்களை வரவேற்கும் அதற்காக ஆவல் கொள்ளும் பட்சத்தில் எதற்காக நீங்கள் கூறுவது போல காணமல் போனவர்களைப் பற்றி எழுதி அதை அடைய வேண்டும்? எல்லோருக்கும் தெரிந்திருக்கும் இளையராஜாவையோ எ ஆர் ரஹ்மானையோ புகழ்ந்து எழுதினால் எனக்கு இன்னும் அதிக கைதட்டல் கிடைக்குமே? நான் அங்கீகாரங்களையும் ஆர்ப்பரிப்புகளையும் நோக்கி நகர்பவனல்ல. உண்மைகளைப் பதிவு செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே எனக்குண்டு.

  அன்னக்கிளி பெரிய வெற்றி பெற்றது உண்மைதான். இருந்தும் அதன் பிறகு இளையராஜாவுக்கு ஒரு சரியான இடம் தமிழில் அமையவில்லை என்பதே உண்மை. பத்ரகாளி படம் வெற்றி பெற்றது கூட அந்த நடிகை திடீரென இறந்தது ஒரு காரணமாக அமைந்தது. பதினாறு வயதினிலே படம் முழுதும் புதிய படைப்பாளிகளால் உருவானது. ஆனால் தமிழ்த் திரையில் ஆட்சி செலுத்தும் சம்பிரதாயங்கள், சில கேளிக்கை நம்பிக்கைகள், அப்போது இளையராஜாவுக்கு சாதகமாக இல்லை. சிவாஜி என்ற மாபெரும் ஆளுமையுடன் அவர் இணைந்ததே அவருடைய வணிக வெற்றிக்கான முதல் பச்சை விளக்கு. "அட சிவாஜிக்கே மியுசிக் போட்டுட்டாண்டா இந்த சின்னப் பயல்" என பல தயாரிப்பாளர்கள் அதன் பிறகே இளையராஜாவை நாடினார்கள். இது திரைக்குப் பின் நடந்த மாற்றம். திறமை மட்டுமே திரையுலகில் வெற்றியை ஊர்ஜிதப்படுத்துவதில்லை. இதை ஒரு குற்றமாக பார்க்காமல் ஒரு அறியாத தகவலாக அணுகினால் உண்மையை புரிந்துகொள்ளலாம். தொடர்ந்து எழுதுங்கள் நிறைய விவாதிக்கலாம்..

  ReplyDelete
 7. ஹலோ காரிகன்

  நான் எப்போதும் சூடாவதில்லை . உங்களுக்கு அப்படி தெரிந்திருக்கலாம். இளையராஜாவிற்கு முதன் முதலாக சிவாஜிக்கு மட்டுமல்ல எம்.ஜி .ஆர். படத்திற்கும் இசையமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு பின்னர் படம் எடுப்பதே நிராகரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆருக்காக வாசித்திருந்தாலும் வாசித்திருக்காவிட்டாலும் இளையராஜாவின் graph ஏறிக்கொண்டேதான் போயிருக்கும் . திறமைக்கான மக்களின் அங்கீகாரத்தை யாரும் தடுத்து விட முடியாது.

  மேடைப் புகழாரங்கள் உண்மையில்லை என்றால் தனியாக பேட்டி கொடுப்பதும் உண்மையில்லையா? எத்தனையோ இசை விற்பன்னர்கள் இளையராஜாவின் இசைத் திறமையை மெச்சவில்லையா ? அதுவும் உங்களுக்குப் பொய்தானா ?

  ///அன்னக்கிளி பெரிய வெற்றி பெற்றது உண்மைதான். இருந்தும் அதன் பிறகு இளையராஜாவுக்கு ஒரு சரியான இடம் தமிழில் அமையவில்லை என்பதே உண்மை. பத்ரகாளி படம் வெற்றி பெற்றது கூட அந்த நடிகை திடீரென இறந்தது ஒரு காரணமாக அமைந்தது///


  இது புதுக் கதை . பத்ரகாளி படத்தின் வெற்றி அதன் கதை , திரைக்கதை மற்றும் இசைக்காகதானே ஒழிய ஹீரோயின் செத்துப் போனதால் அல்ல! இப்படி யாரும் சொல்லி நான் கேட்டதேயில்லை.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் கேட்டிராத உண்மைகள் இருக்கவே முடியாதா? இது என்ன பூனை குணம்? (பூனை கண்களை மூடிக்கொண்டால் என்று ஒரு பழமொழி உண்டு. உங்களுக்கு பதில் எழுதும்போது அதுபாட்டுக்கு பழமொழிகள் வருகின்றன. எல்லாம் உங்களின் பாதிப்புதான்.)

   Delete
  2. பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதியதை வாசித்து விஷயத்தை எழுதினேன்.

   Delete
 8. //....அவர் சவாலுக்கு விடுத்ததை 'தலைக்கனம் ' என்றால் இருந்துவிட்டு போகட்டுமே !//

  சரியோ தவறோ .. எனக்கு கண்ணதாசன், ஜெயகாந்தன், இளையராஜா - இந்த மூவரின் தலைக்கனம்/ஞானச் செருக்கு எனக்கு மிகவும் பிடிக்கும். ஜெ.மோ, சாரு போன்றவர்களின் செருக்கு பிடிப்பதேயில்லை.

  சிவாஜி, எம்.எஸ்.வி., ரஹ்மான் - இவர்களிடம் இந்த செருக்கைக் கண்டதில்லை. அதுவும் பிடித்தது. (என் கேரக்டர் எனக்கே புரியவில்லை)

  காணொளிகளுக்கு நன்றியும் பாராட்டும்.

  உங்கள் ;ஞான விவாதங்களுக்கு’ நடுவில் இராட்சஷனும் தொடர்ந்து நீண்டு வளரட்டும்.

  ReplyDelete
  Replies
  1. தருமி சார்

   நாம் பணியாற்றும் நிறுவனங்களில் ஒரு திறமையும் இல்லாத ஆட்கள் அலட்டிக் கொண்டும் தலைமையோடு ஒட்டிக் கொண்டும் செருக்குடன் பேசிக்கொண்டும் திரிவதை சகித்துக் கொண்டுதான் செல்கிறோம் . திறமையுள்ளவர்களிடம் சரியான கேள்வியைக் கேட்கத் தெரியாமல் அவர் திறமைக்கு சவால் விடுவது போன்ற கேள்விகளுக்கு அப்படிதான் சொல்வார்கள்.

   ஒருமுறை நான் படித்த கல்லூரியில் ஜெயகாந்தன் அவர்கள் வந்திருந்தார் . ஒரு மாணவன், " மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலி பத்தினியா அல்லது பரத்தையா? " என்று கேள்வி கேட்டான் . சிறிய மௌனத்திற்குப் பிறகு அமைதியாகச் சொன்னார் , " பத்தினியின் மகனுக்கு பத்தினி . பரத்தையின் மகனுக்கு பரத்தை " சிறிய சலசலப்பு . கேட்ட நிறைய பேருக்கு கடுகடுப்பு. இதில் யார் சரி? அவர் எழுதிய எழுத்தைப் பற்றிக் கேட்காமல் வேண்டாத கேள்வியை கேட்டவனா அல்லது ஜெயகாந்தனா?

   இதைவிடவா மோசமாக இளையராஜா பதில் சொன்னார் ? அவரிடம் கேட்ட கேள்வி தவறு .

   உங்கள் பாராட்டுக்கு நன்றி . உங்களின் வேண்டுகோளின்படி காணொளிகளும் தொடரும் . நாங்கள் செய்வது ஞான விவாதங்களா? எம்.எஸ்.வி. , இளையராஜா வாசித்தால் சிரித்துவிட்டுப் போவார்கள்.

   Delete
 9. கொஞ்சம் மாற்றிக் கொள்கிறேன்: என் உயரத்திற்கு எட்டாத, உங்கள் ;ஞான விவாதங்களுக்கு’ நடுவில் இராட்சஷனும் தொடர்ந்து நீண்டு வளரட்டும்.

  ReplyDelete
 10. சிறப்பான பதிவு சார்ல்ஸ் அவர்களே ! வாழ்த்துக்கள்.
  அழகான நடையில் அமைந்திருக்கிறது .

  தமிழில் புது அர்த்தங்களை காரிகன் அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்.அதில் ஒன்று தான் பாலமுரளியின் குரலை " ஊஞ்சல் குரல் ".என்பது .
  இது என்ன கோமாளித்தனம் !!

  நீங்கள் கேட்டிராத உண்மைகள் இருக்கவே முடியாதா? இது என்ன பூனை குணம்? என்கிறார் காரிகன்.

  காரிகனுக்கும் ,அமுதவனுக்கும் தான் திரைக்கு பின்னால் நடந்த சங்கதிகள் எல்லாம் தெரியும்.இவர்கள் அடிக்கடி சொல்லும் வாசகம் " இது கூட ராஜா ரசிகர்களுக்கு தெரியவில்லை " என்பது.

  நீங்கள் சொல்ல வருவது புரிந்தும் ,வேண்டுமென்றே விசையங்களை திரிப்பது தான் அவர்களின் நோக்கம்.ஏனென்றால் அவர்கள் தான் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடாத்தி விசயங்களைப் பேசுபவர்களாச்சே !!

  காரிகனின் பின்னூட்டத்தை ஏன் நீக்கினீர்கள்.அவரின் நாகரீக வார்த்தைகளை நாமும் ரசிக்கலாம் அல்லவா ?!

  Vimal

  ReplyDelete
  Replies
  1. வாங்க விமல்

   ' ஊஞ்சல் குரல்' பற்றி நானும் காரிகனிடம் கேட்க நினைத்தேன் . நீங்களே கேட்டுவிட்டீர்கள். நெருடலான வார்த்தை . சரிதானா?

   Delete
 11. விமல்,

  எதோ ஒப்புக்கு சால்சை பாராட்டிவிட்டு உடனே அடுத்த கணமே என் மீது நீங்கள் பாய்வதிலிருந்தே உங்களின் நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. உங்களைப் போன்ற Metaphor புரியாதவர்கள் விளக்கெண்ணை விளக்கங்களும் வியாக்கியானங்களும் விமர்சனங்களும் செய்வது ஒரு கருப்பு நகைச்சுவை. எழுதப் பட்ட கட்டுரையைப் பற்றி எந்த கருத்தையும் காணவில்லை. புரளி பேச புதிய காற்று தளம் வசதியாக இருக்கிறது போலும். கவலையே வேண்டாம். திருவாளர் சால்ஸ் வந்து உங்களுடைய ஆர்வத்திற்கு இன்னும் நிறைய தீனி போடுவார்.

  இணையத்தில் எழுதுகிறீர்கள். This comment has been removed by the author என்பதற்கும் This comment has been removed by the administrator என்பதற்குமான வித்தியாசம் கூட அறியாமல் என் நாகரீகத்தை எடை போடுகிறீர்கள். இதைப் போலத்தான் உங்களது "இசை ஞானம் பிரகாசமாக" ஒளிர்கிறது. ஏன்? இங்கே வந்து உங்களின் வழக்கமான விளம்பரத்தை செய்யவில்லையா? அதுதான் இனிஒரு டாட் காம்.. (சவுந்தரின் கட்டுரைகளை முழுதும் படிக்காமலே நல்ல பதிவு பாராட்டுகள் என்று பின்னூட்டம் போடுபவராயிற்றே நீங்கள்.)

  ReplyDelete
 12. சால்ஸ். தங்கள் இசை இராட்சசன் -4,காணொளியுடன் கூடிய புதிய அணுகுமுறைக்கு எனது பாராட்டுக்கள் .வயிற்றெரிச்சல்கொண்ட சிலர் இதை பாலைவனத்தில் பெய்த மழை என்கிறார்கள் .நேற்று பெய்த அடைமழையில் முளைத்த காளான்கள் போல சொற்ப படங்களுக்கு மட்டுமே இசையமைத்த இசையமைப்பாளர்களெல்லாம் இவர்களின் ரசனையில் உச்சத்தில் இருக்கும்போது எண்ணிலடங்கா அற்புதமான பாடல்களைத் தந்த இசை ஞானியைப் பழிப்பதிலிருந்தே இவர்களது இசை ஞானம் புலப்படுகிறது .ஆயிரக்கணக்கான பாடல்கள் இசைக்கப்பட்டுள்ளபோதும் நிலா காயுது ,பொன்மேனி உருகுதே போன்ற பாடல்களிலேயே இருக்கிறது .காரியசெவிடு என்பார்களே அது போல இவர்கள் காதுகள் நல்ல பாடல்களைக் (இளையராஜாவின் )கேட்கும் திறனை இழந்துவிட்டன போலும் . காரிகனின் பின்னூட்டத்தில் யாருமே கேள்வி பட்டிராத ஓர் அதிசய செய்தியைக் கண்டேன் .பத்ரகாளி என்ற படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் கதாநாயகி திடீரென இறந்ததுதான் காரணமாம் .இவர் பழமைவாதிகள் என்று பிறரைக் கூறுகிறார் . இவரின் இக்கூற்று எனக்கு ஒரு பாடலை நினைவூட்டுகிறது .(சிரிப்பு வருது ,சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது .சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்த்து சிரிப்பு வருது .) இதில் இசையறிவு கொண்டோரே இசையை ரசிக்க முடியும் என்ற வியாக்கியானம் வேறு .எம் .எஸ் .வி .அவர்களது அற்புதமான பாடல்களுக்கு நாங்களும் சிறந்த ரசிகர்களே .இசைஞானியை மட்டுமே புகழவேண்டுமென்றோ ,அவர் பாடல்களை மட்டுமே கேட்க வேண்டுமென்றோ எங்கே யாரை வற்புறுத்தினோம் ?அவரின் அபிமானிகளான தங்களைப் போன்றவர்கள் இசைஞானியின் புகழ் பரப்புவதில் பெருமிதமே கொள்ள வேண்டும் .போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் பின்னடைவு கொள்ளாமல் இசைஞானி குறித்த தங்கள் பதிவை இன்னும் மெருகேற்றுங்கள் .காய்த்த மரத்தில் கல்லடி படத்தான் செய்யும் .இசைஞானியின் அற்புத படைப்புகளைக் கேட்க மறந்தோருக்கும் வாய்ப்பற்றோருக்கும் வாரி வழங்குங்கள் .வளரட்டும் தங்கள் பதிவு .

  ReplyDelete
 13. \\இது புதுக் கதை . பத்ரகாளி படத்தின் வெற்றி அதன் கதை , திரைக்கதை மற்றும் இசைக்காகதானே ஒழிய ஹீரோயின் செத்துப் போனதால் அல்ல! இப்படி யாரும் சொல்லி நான் கேட்டதேயில்லை.\\

  சார்லஸ், உங்களிடம் இருக்கும் பெரிய பிரச்சினையே இதுதான். பல விஷயங்கள் உங்களுக்குத் தெரிவதில்லை. பல விஷயங்களை நீங்கள் படிப்பதில்லை, அல்லது கேள்விப்படுவதில்லை. இவையெல்லாம் தவறுகளோ குறைபாடுகளோ அல்ல. ஆனால் இல்லாத விஷயங்களை வைத்துக்கொண்டு நீங்கள் பாட்டுக்கு கோட்டைக் கட்டிக்கொண்டு போய்விடுகிறீர்கள்.

  அதைக் குறிப்பிட்டுச் சொன்னால் சொல்கிறவர்களை வசைபாடுகிறீர்கள். கேலி பேசுகிறீர்கள்.
  இவர்களுக்குத்தான் எல்லாம் தெரியுமா? என்ற எகத்தாளம் வேறு.

  நான் திரும்பத் திரும்பச் சொல்வதே இதுதான். உங்கள் கருத்துக்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்களைப் பொறுத்தவரையிலும், உங்கள் கருத்தோடு ஒட்டியவரைப் பொறுத்தவரையிலும் இருந்துவிட்டுப் போகட்டும். அதனைப் பொதுவெளியில் பரப்ப வரும்போதுதான் சரியான கருத்துக்களை எழுதுங்கள் என்கிறோம்.

  பத்ரகாளி விஷயத்திலும் இதுதான். அந்தப் படத்தின் கதாநாயகி ராணிசந்திரா விமானவிபத்தில் அகால மரணமடைந்துபோய் எத்தனைப் பெரிய தாக்கம் ஏற்பட்டது என்பதையோ, அந்தப் படம் ரிலீசானபோது எத்தனை வரவேற்புக்கிடையே பரபரப்புக்கிடையே ரிலீசானது என்பதுபற்றியோ உங்களிடம் தகவல் இல்லை. அதுபற்றி "ஒரு எம்ஜிஆர் பட வெளியீடு அளவுக்குத் தியேட்டர்களில் கூட்டம் இருந்தது" என்பதாக அந்தப் படத்தில் கதாநாயகராக நடித்த சிவகுமார் அளித்த பேட்டி அப்போதே வந்திருந்தது. இதுபற்றி படத்தின் இயக்குனரான ஏ.சி.திருலோகசந்தரும் அந்தப் படம் ஓடிக்கொண்டிருந்த நாட்களில் நிறைய பேட்டிகள் அளித்திருக்கிறார். எல்லாம் ராணிசந்திராவைப் பற்றியதுதான். சமீபத்தில் தினத்தந்தியில் ஆரூர்தாஸூம் அதுபற்றியெல்லாம் நிறைய எழுதியிருந்தார்.

  ஆனால் நீங்கள் படத்தின் வெற்றிக்கான காரணத்தைத் தூக்கி வேறொருவர் மீது போடுகிறீர்கள்.(அந்தப் படத்தின் பாடல்கள் ஹிட் ஆகவில்லையா? பட வெற்றிக்குப் பாடல்கள் காரணமில்லையா? என்ற மொக்கைக் கேள்விகளுடன் யாரும் ஓடிவரவேண்டாம், இங்கே இப்போது பேசுவது ராணிசந்திரா பற்றி.)

  அதனால் எழுதும்போது வெறும் அபிமானங்களைக் கடந்து கொஞ்சம் தெளிவுகளும் இருக்கட்டும் என்றுதான் சொல்கிறோம்.

  ReplyDelete
 14. அருள் ஜீவா,

  பதிவைப் பாராட்டுவது இருக்கட்டும். அதைக் கூட ஒப்புக்கென செய்வதுபோல தெரிகிறது. அதன் பின் விமல் வகையறாக்கள் வழக்கம் போல் என் மீது பாய்வதையே நீங்களும் செய்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்தது இதுதான் போல. பரிதாபப்படுகிறேன்.

  -------அவரின் அபிமானிகளான தங்களைப் போன்றவர்கள் இசைஞானியின் புகழ் பரப்புவதில் பெருமிதமே கொள்ள வேண்டும் .போற்றுவார் போற்றினும் தூற்றுவார் தூற்றினும் பின்னடைவு கொள்ளாமல் இசைஞானி குறித்த தங்கள் பதிவை இன்னும் மெருகேற்றுங்கள் -----------

  எதோ இளையராஜா விவேகானந்தர், பெரியார் போல சமூக சீர்திருத்தவாதி ரேஞ்சுக்கு நீங்கள் எழுதியிருக்கும் மனோகரா பாணி வசனங்களைப் படித்ததும் பொங்கி வந்தது சிரிப்பு. நீங்கள் என்ன நாடகத்துக்கு வசன ஒத்திகை செய்துகொண்டிருக்கிறீர்களா? இதில் எனக்கு வயிற்றெரிச்சலாம்.. நல்ல கதைதான்.. சகிக்கவில்லை என்பது வேண்டுமானால் பொருத்தமான சொல்லாக இருக்கும். என்னை ஏளனம் செய்யக்கூட உங்களுக்கு ஒரு ராஜா பாடல் அகப்படவில்லையே என வருத்தமாக இருக்கிறது. அதற்கும் எம் எஸ் விஸ்வநாதன் - ராமூர்த்தி இரட்டையர்கள் அமைத்த ஒரு பழைய பாடல்தான் (சிரிப்பு வருது -ஆண்டவன் கட்டளை) உதவிக்கு வருகிறது. அந்த அளவிற்கு எம் எஸ் வி நம்மை ஆட்சி செய்கிறார். இதை நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக்கொள்கிறேன்.

  ----நேற்று பெய்த அடைமழையில் முளைத்த காளான்கள் போல சொற்ப படங்களுக்கு மட்டுமே இசையமைத்த இசையமைப்பாளர்களெல்லாம் இவர்களின் ரசனையில் உச்சத்தில் இருக்கும்போது எண்ணிலடங்கா அற்புதமான பாடல்களைத் தந்த இசை ஞானியைப் பழிப்பதிலிருந்தே இவர்களது இசை ஞானம் புலப்படுகிறது-----

  இதுதான் ராஜா ரசிகர்களின் உண்மையான நிறம். அவரைத் தவிர மற்றவர்களை காலில் போட்டு மிதிப்பது ஒன்றுதான் உங்களின் நாகரீகம். அப்படியெல்லாம் இல்லை என்று ஒரு புறம் வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டே அதைத்தான் செய்கிறீர்கள். அதுவும் ரொம்ப முனைப்பாக. இளையராஜா எண்ணிலடங்கா பாடல்கள் வதவதவென்று கொடுத்திருப்பது உண்மைதான். அதில் எத்தனை தேறும் என்பதுதானே இங்கே முக்கியம். வெறும் எண்ணிக்கையை வைத்து நீங்கள் தரத்தை எடை போட்டால் என்ன மிஞ்சும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 15. அமுதவன் சார்

  நீங்கள் சொல்வது முழுக்க உண்மை இல்லை . ராணிச்சந்திரா என்ற நடிகை நடித்துக் கொண்டிருக்கும்போது விபத்தில் இறந்துபோன விஷயம் நானும் அந்த நேரத்தில் அறிந்திருந்ததே! அந்தப் படத்திற்கு நானும் சென்று பார்த்து பயந்து எனக்குக் காய்ச்சல் வந்த கதையெல்லாம் தனி ! இறுதிக் காட்சிகள் பயமுறுத்தும் . ராணிச்சந்திரா அதைவிட பயமுறுத்துவார் . எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கிறது .

  ஆனால் மக்களின் கூட்டம் அந்தப் படத்திற்கு அதிகமானதற்கு த்ரில்லிங் திரைக்கதையும் இசையும் அப்போது பெரியவர்களால் பேசப்பட்டதை நான் கேட்டிருக்கிறேன் . கதாநாயகி இறந்து போனதைப் பற்றி பரிதாபப்பட்டார்கள். அவ்வளவுதான் ! படத்தின் வெற்றிக்கு ஒரு சாவு எப்படி காரணமாகும்? கதாநாயகிக்கு அதுதான் முதல் படம் . பிரபலமான நடிகை என்றாலும் நம்பலாம் . திருலோகச்சந்தர் பல வெற்றிப் படங்கள் கொடுத்தார் . வெற்றிகள் எல்லாம் கதை திரைக்கதை இசையால்தான்!

  பத்ரகாளி படப் பாடல்கள் அமோக வெற்றியடைந்தன . அது இளையராஜாவால் மட்டுமே ...ராணிச்சந்திராவால் அல்ல!

  ReplyDelete
 16. காரிகன் சார்

  /// இதுதான் ராஜா ரசிகர்களின் உண்மையான நிறம். அவரைத் தவிர மற்றவர்களை காலில் போட்டு மிதிப்பது ஒன்றுதான் உங்களின் நாகரீகம். அப்படியெல்லாம் இல்லை என்று ஒரு புறம் வெற்றுப் பேச்சு பேசிக்கொண்டே அதைத்தான் செய்கிறீர்கள். அதுவும் ரொம்ப முனைப்பாக. இளையராஜா எண்ணிலடங்கா பாடல்கள் வதவதவென்று கொடுத்திருப்பது உண்மைதான். அதில் எத்தனை தேறும் என்பதுதானே இங்கே முக்கியம். ///

  மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ளதில் இளையராஜா என்ற வார்த்தையை எடுத்துவிட்டு எம்.எஸ்.வி என்று போட்டு பார்த்தாலும் பொருந்தும் . இல்லையா? ஏனென்றால் எம்.எஸ்.வி இளையராஜாவை விட வத வதவென ...நான் கொஞ்சம் நாகரீகமாவே சொல்கிறேன்.. ... அளவுக்கதிகமாக பாடல்களைக் கொடுத்திருக்கிறார் . எத்தனை தேறும்?

  ReplyDelete
 17. சால்ஸ்,

  அமுதவன் கூறியதுபோல உங்களுக்கு சில உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது. பத்ரகாளி படம் பெற்ற வெற்றிக்கு ஒரு மிக முக்கிய காரணம் அதன் நடிகை திடீரென அகால மரணமடைந்ததுதான். மக்கள் அப்போது அதைப் பற்றியே பேசினார்களே தவிர இளையராஜாவின் இசையைப் பற்றி யாரும் விவாதித்ததாக நானறியவில்லை. அது உங்களின் கற்பனை. அப்போது இளையராஜா மிகப் பெரிய ஆளுமையாக அடையாளம் காணப்படாதவராகவே இருந்தார். உங்களின் ஆசை அவர் வந்தது முதலே பெரிய இடத்தை அடைந்துவிட்டதாக இருக்கலாம். ஆனால் அது நாம் அறிந்த வரலாறு அல்ல.இதை நான் மட்டுமல்ல அமுதவன் முதற்கொண்டு தமிழ்த் திரையைப் பற்றி அறிந்த பலரும் கூறிய கருத்தேயாகும். இதனால் இளையராஜாவின் பெருமை குறைந்துபோகும் என்று நீங்கள் பயப்படுவது யதார்த்தைதை மீறியது. உங்களுக்கு நிறைய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லை அல்லது அதைப் பற்றியே எண்ணமில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் மக்கள் பூமியைச் சுற்றியே சூரியன் மற்ற எல்லா கோள்களும் சுற்றி வந்ததாக நம்பினார்கள் - கோபர்நிகஸ் ப்ருனோ கலிலியோ போன்ற உண்மை விரும்பிகள் வரும்வரை. இந்த methaphor ராவது உங்களுக்குப் புரிகிறதா என்று பார்க்கலாம். இல்லாத உண்மையை நியாயப்படுத்தாதீர்கள். மேலும் கோமாளியாகக் காட்சியளிக்க வேண்டாம்.

  அடுத்து வதவத வென்ற பதம் குறித்து.

  நான் இதைச் சொல்லவில்லை. சொன்னது உங்களின் பார்ட்னர் அருள் ஜீவா. பாய்வதாக இருந்தால் அவர் மீது பாயுங்கள். ஒரு படத்தில் அர்ஜுன் சொல்வதுபோல "சிங்கம் தனியாத்தான் வரும். பண்ணிக தான் கூட்டமா வரும்". எண்ணிக்கையை குறிப்பிட்டு அவர்தான் இந்த விவாதத்தை துவக்கினார். எம் எஸ் வி யின் பல பாடல்கள் இன்னும் தரமாகத்தான் இருக்கின்றன. எல்லோரும் ரசித்துக் கேட்கும்படி. உங்கள் ராஜாவின் இசையில்தான் கேட்கச் சகிக்காத அருவருப்பான ஓசைகள் மெட்டுகள் குரல்கள் வரிகள் எல்லாமே உண்டு.. ஒவ்வொருவரின் ரசனை அப்படி. இந்தக் கண்றாவிகளையெல்லாம் பாடல்களாக மாற்றிய இசை மேதமையை என்னவென்பது! The perfect porn music director of the Tamil film music industry..

  ReplyDelete
 18. காரிகன்

  இளையராஜாவை ஒரு 'The perfect porn music director of the Tamil film music industry.. ' என்று உங்களைத் தவிர எந்த புத்திசாலியும் சொன்னதில்லை என்றே நினைக்கிறேன். உங்களின் கூற்றுப்படி 'இதழே இதழே தேன் வேண்டும் ' என்று இதயகனிக்காக பாட்டு போட்ட எம். எஸ். வி யையும் porn music டைரக்டர் என்று சொல்லலாமே! நான் சொல்ல மாட்டேன். நான் அவருக்கும் ரசிகரே! நீங்க சொல்வீர்கள். ஏனென்றால் அதிலும் முக்கல் முனகல் நிறைய இருக்கும் . வத வதன்னு பாட்டுப் போட்ட ....... யாரு? தைரியமாகச் சொல்லுங்கள் .

  ReplyDelete
 19. \\பத்ரகாளி படம் பெற்ற வெற்றிக்கு ஒரு மிக முக்கிய காரணம் அதன் நடிகை திடீரென அகால மரணமடைந்ததுதான். மக்கள் அப்போது அதைப் பற்றியே பேசினார்களே தவிர இளையராஜாவின் இசையைப் பற்றி யாரும் விவாதித்ததாக நானறியவில்லை. அது உங்களின் கற்பனை. அப்போது இளையராஜா மிகப் பெரிய ஆளுமையாக அடையாளம் காணப்படாதவராகவே இருந்தார். உங்களின் ஆசை அவர் வந்தது முதலே பெரிய இடத்தை அடைந்துவிட்டதாக இருக்கலாம். ஆனால் அது நாம் அறிந்த வரலாறு அல்ல\\

  காரிகன் உங்களுடைய இந்தப் பின்னூட்டத்திற்குப் பிறகுதான் நான் இதுபற்றி மறுபடியும் பேச வந்திருக்கிறேன். இல்லாவிட்டால் 'இவர்களிடமெல்லாம் எதுபற்றிப் பேசியும் பிரயோசனமில்லை. பேசாமல் இருந்துவிடுவோம்' என்ற முடிவுக்குத்தான் வந்திருந்தேன்.
  பத்ரகாளி படத்தின் படப்பிடிப்புக்கெல்லாம் போய் வந்தவன் நான். ஒருநாள் ராணிசந்திராவின் படப்பிடிப்பின்போதும் இருந்திருக்கிறேன். அவர் மரணம் எத்தனைத் தாக்கத்தை ஏற்படுத்தியது, அவர் இறந்தபிறகு நடைபெற்ற வியாபாரப் பரிவர்த்தனைகள் என்ன என்பதெல்லாம் நிறைய இருக்கிறது. அந்தப் படம் வெளியான மறுநாள் தினத்தந்தியில் 'விமான விபத்தில் மரணமடைந்த ராணிசந்திரா நடித்த பத்ரகாளி படம்- தமிழகம் முழுக்க வெளியானது. தியேட்டர்களில் கட்டுக்கடங்காத கூட்டம்' என்று படத்துடன் செய்தியே வெளியாகியிருந்தது. கவனிக்கவும், விளம்பரம் அல்ல, செய்தி. இதுபற்றியெல்லாம் ஒன்றுமே தெரியாமல் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார். சரி சொல்லிவிட்டுப் போகட்டும் என்றுதான் இருந்தேன்.

  நீங்கள் சொல்லியிருப்பது உண்மையே. அந்தச் சமயங்களிலெல்லாம் இளையராஜா ஒரு ஆளுமையாக உயர்ந்திருக்கவே இல்லை. அவரும் கமலஹாசன் போலத்தான். ஒரு அறுபது எழுபது படங்களுக்குப் பின்னால்தான் விநியோகஸ்தர்கள் பேசப்படும் இசையமைப்பாளராகவே வந்தார். அவரை முன்னிறுத்த பஞ்சுஅருணாசலமும், தேவராஜ்மோகனும் எத்தனைச் சிரம்பபட்டிருக்கிறார்கள் என்ற தகவல்களெல்லாம் பேசப்படாமலேயே இருக்கின்றன. 'ஏதோ பாட்டுப்போட்டார். அந்தப் பாட்டு இதுவரை தமிழ்த்திரையிலேயே இல்லாத பாட்டு. உலகிலேயே இவரைப்போல இசையமைப்பாளர் யாரும் பிறந்ததும் இல்லை. பிறக்கப்போவதும் இல்லை' என்பது மட்டுமே இவர்களின் ஒற்றைச் சிந்தனை. மற்றும் நம்பிக்கை.

  அதைத் தகர்க்கிறோம் என்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

  ReplyDelete
 20. //இளையராஜா எண்ணிலடங்கா பாடல்கள் வதவதவென்று கொடுத்திருப்பது உண்மைதான். அதில் எத்தனை தேறும் என்பதுதானே இங்கே முக்கியம்//

  இது கொஞ்சம் tooooo muchஆக தெரிகிறதே!? இப்போது வரும் பாடல்களைச் சொல்லுங்கள். சரி.. ஆனால் 80-90களில் ....?

  ReplyDelete
 21. //உலகிலேயே இவரைப்போல இசையமைப்பாளர் யாரும் பிறந்ததும் இல்லை. பிறக்கப்போவதும் இல்லை' என்பது மட்டுமே இவர்களின் ஒற்றைச் சிந்தனை. மற்றும் நம்பிக்கை. //

  அப்படியா சொல்கிறார்கள்? தெரியவில்லை.

  அப்படிச் சொன்னால் அது ஒற்றைச் சிந்தனையை விட மோசமல்லவா?

  ReplyDelete
 22. இன்னொன்றும் எனக்குப் புரியவில்லை.
  எனக்கு இவரின் இசை பிடிக்கிறது என்று ஒருவரைக் கை காண்பிப்பது தவறா? அவர் மற்றவரின் இசையைக் குறைத்துப் பேசினால் அவரைக் “குதறலாம்” ... இல்லாவிடில் அவர் போக்கில் விட்டு விடுவதுதானே சரி. உன்க்குப் பிடிக்குதா ... சரி..சரி... வச்சுக்கோ...என்று விட்டுவிடலாமே!

  ReplyDelete
  Replies
  1. சார் ரொம்ப சரியாகச் சொன்னீர்கள். இளையராஜாவின் இசையை பொதுவில் வைப்பதே தவறு என்ற கண்ணோட்டத்தில் பலர் பேசுகிறார்கள் . இசை இன்பத்தை நான் அனுபவமாகப் பகிர்ந்தால் அது சரியில்லை, இது சரியில்லை என்று வம்பும் வீம்பும் செய்வதற்கு வரிந்து கொண்டு வருகிறார்கள் . அபத்தமான கதையும் விளக்கமும் (ராணிச்சந்திரா கதை ) சொல்கிறார்கள் . உண்மை என்று நம்ப வைக்க போராடுகிறார்கள் . சரி... எதையும் சந்திக்கலாம் இவர்களையும் சந்திக்கலாம் . பதிவு ஒவ்வொன்றும் சூடு பிடிக்கட்டும் .

   Delete
  2. தருமி அவர்களே

   இங்கே எப்படியாவது இளையராஜாவை மட்டம் தட்ட வேண்டும் என்பதே நோக்கம்.இவர்களுக்கு ஒரு புண்ணாக்கும் புரியவில்லை என்பது வெள்ளிடை மலை.

   விமல்

   Delete
 23. பத்ரகாளி படத்தின் முடிவில் அந்த நாயகி (ராணி சந்திரா) திடீர் மரணமடைந்ததால் வேறு ஒரு நடிகையை வைத்து படத்தின் கிளைமாக்சை எடுத்திருப்பார்கள். அதனால்தான் இறுதிக் காட்சியில் அவரது முழு முகமும் தெரியாமல் வெறும் கண்கள், தலைவிரி கோலம், தூரமான கோணம் போன்றவைகள் இறுதிக் காட்சியில் அதிகம் இருக்கும். இது கூட படத்திற்கு ஒரு பெரிய விளம்பரத்தைக் கொடுத்தது. சால்ஸ் இந்த டூப் நடிகையின் நடிப்பைப் பார்த்துவிட்டுதான் காய்ச்சலில் விழுந்திருப்பார். அதை ராணி சந்திரா என்று தவறாக சொல்கிறார்.

  ReplyDelete
 24. தருமி சார்,

  இணையத்தில் நீங்கள் இளையராஜா பதிவுகளைப் படிப்பதில்லை என்று தெரிகிறது. நான் ஏகத்துப் படித்து ஏராளமாக வெறுப்படைந்துபோய் அதன் பின்னர்தான் காலமும் கானமும் என்ற என்னுடைய முதல் இசைப் பதிவை எழுதினேன். கீழ்க்கண்டவாறு அவர்களின் கருத்து இருக்கும்.

  1.ராஜா ராஜாதான். அவை மிஞ்ச இந்த உலகத்திலேயே வேறு யாரும் இல்லை.

  2. எம் எஸ் வி போன்றவர்கள் நல்ல சிறப்பான இசையை கொடுத்திருந்தாலும் ராஜா அவர்களைவிட மேலானாவர். அவரைப் போல ஒருவர் இதுவரை பிறக்கவில்லை.

  3.குருக்களை மிஞ்சிய சிஷயர்.

  4.இசையின் சுயம்பு. இவரன்றி இசையே கிடையாது.

  5. மேல் நாட்டினர் எல்லாம் இவரது இசையைக் கேட்டதும் உச்சி முதல் உள்ளங்கால் வரை வியர்த்து இவரைப் போன்றருவர் இதுவரை இந்த உலகில் இல்லை என்று பெருமைப்படார்கள்.

  இன்னும் நிறைய இருக்கிறது. படித்தால் சிரிப்பல்ல எரிச்சல்தான் ஏற்படும்.

  ReplyDelete
 25. சார்லஸ்

  தங்கள் பதிவில் காரிகனின் பின்னூட்டம் படித்தேன் . இளையராஜாவின் ரசிகர்களை தேய்ந்த ரெகார்ட் போன்றவர்கள் , கிணற்றுத் தவளைகள் என்று பற்பல வார்த்தைகள் மூலம் வசை பாடுகிறார். இதில் தான் ஒரு நடுநிலை இசை ரசிகன் என்ற தம்பட்டம் வேறு.

  பத்ரகாளி பட வெற்றிக்கு அப்பட கதாநாயகி இறந்ததே காரணம் என்ற இவரின் கூற்றுக்கு அமுதவன் நன்றாக ஒத்து ஊதுகிறார். காரிகன்தான் வம்புக்கு வாதிடுகிறார் என்றால் அமுதவன் இளையராஜாவால் பாதிப்பு அடைந்திருக்கிறாரா என்று புரியவில்லை.

  அமுதவன், காரிகன், பரத் போன்றவர்கள் எம். எஸ். வி புகழ் பாடினால் அது சந்தனம். சார்லஸ், அருள் ஜீவா, விமல் போன்றோர் இளையராஜா பற்றி எழுதினால் அது சாக்கடையா? இது அவர்களுக்கே அதிகமென தோன்றவில்லையா?

  இதுவரை இவர்கள் இளையராஜா இசை மட்டமானது என்று தெரிவிக்க நிலாகாயுது , பொன்மேனி உருகுதே போன்ற பாடல்களை உதாரணமாகக் கூறிக் கொண்டிருந்தார்கள். காரிகனின் பதிவில் ஒருவர் மௌன ராகம் படத்தில் வெளிவந்த மன்றம் வந்த தென்றலுக்கு பாடல் கேட்டு வாந்தி வருகிறது என்று சொல்லியிருக்கிறார். வாந்தி வரும் அளவிற்கு அவர் எந்த நிலையில் இருந்தார் என புரியவில்லை.

  இளையராஜா என்றாலே சிற்சில பாடல்களைக் கூறி அவரின் இசை மட்டமானது என்று வாதிடுபவர்கள் அவருடைய ரசிகர்களை கிணற்றுத் தவளைகள் பறக்க முடியாது என்று ஏளனம் செய்கிறார்கள் . கிளாசிக் பாடல்கள் இளையராஜாவால் இசைக்கப்படவில்லை என்ற சித்தாந்தம் வேறு.

  வேண்டாத மனைவி கை பட்டால் குற்றம் என்பார்களே அதுபோல குறை காணும் நோக்கோடு பாடல்களைக் கேட்காமல் கலை நயத்தோடு ஆர்வத்தோடு கேட்டால் இளையராஜா அற்புதப் படைப்புகள் அவர்களுக்கே புரியும் .

  ReplyDelete
 26. கீழே உள்ளது எனது எழுத்து அல்ல. குட்டிப் பிசாசு என்பவர் உங்கள் இளையராஜாவின் பிரபலமான பாடல் ஒன்றைப் பற்றி சொன்னது.

  ---இளையராஜாவுடைய எவ்வளவோ நல்ல பாடல்கள் இருக்கும்போது, நிலா காயுது பாடலும் பாடப்பட்டது. இதுபோன்ற ஒரு கேவலம் எந்த மொழிக்கும் கிடைக்காது. இப்பாடலை பொதுவில் வயதுக்கு வராத பசங்களோட கேட்டு ரசிக்கும் நம்ம சமூகம் ஒரு புரட்சிகரமான சமூகம். வெட்கக்கேடு. இளையராஜாவுக்கு முந்தைய இசையமைப்பாளர்கள் பெரியவர்களுக்கு மட்டும் விளங்கும்படி இலைமறைவு காய்மறைவாக பாடல்களை உருவாகிக் கொண்டிருந்தார்கள். அதை வெளிப்படையாக விருந்து படைத்த பெருமை இளையராஜாவையே சேரும். அவருக்கு பின்னாடி வந்தவர்கள் பற்றி சொல்லவும் வேண்டுமா? பிரித்து மேய்ந்துவிட்டார்கள். கருமம். எப்படியோ போய் ஒழிங்க.---

  மேலும் படிக்க...

  http://kuttipisasu.blogspot.in/2014/02/09022014.html?

  ReplyDelete
 27. ஒருவருடைய இசை எனக்குப் பிடிக்கிறது என்று சொல்ல எனக்கு உரிமை இருப்பது போல மற்றவருக்கும் உரிமையுண்டு.

  இங்கே இளையராஜா பிடிக்கிறது என்பது கட்டுரையாளரின் கருத்து.ராஜாவின் இசையை தான் ரசித்த கோணத்தில் சார்ல்ஸ் வெளிப்படுத்துகிறார்.ஆனால் எம் எஸ் வீ போன்றவர்களின் இசையையும் ரசிப்பதாக சொல்கிறார்.

  ஆனால் காரிகன் இங்கே இளையராஜாவை மட்டம் தட்டுகிறார் , கேவலப்படுத்துகிறார்.அதற்க்கு அமுதவர் பின்பாட்டு பாடுகிறார்.நாமும் பல இணைய தளங்கள் பார்க்கின்றோம் அங்கே ராஜா ரசிகர்கள் யாரும் எம் எஸ் வீயையையோ ,ஏனைய இசையமைப்பாலர்கலையோ கீழ் தரமாக எழுதுவதில்லை.
  காரிகனின் தளத்தில் ஏராளமான வசைகள் கிடைக்கின்றன.

  அமுதவர் பட சூட்டிங் பார்த்தாராம் ,,,ஆகவே அவருக்குத் தான் எல்லாம் தெரியும்.!!!

  ##உலகிலேயே இவரைப்போல இசையமைப்பாளர் யாரும் பிறந்ததும் இல்லை. பிறக்கப்போவதும் இல்லை'//
  என்கிறார் காரிகன்.
  இந்த கட்டுரையில் எங்கே சார்ல்ஸ் அவ்வாறு எழுதியுள்ளார் என்று நமக்கு தெரியவில்லை.எங்கேயோ ஒரு தளத்தில் யாராவது எழுதினால் காரிகன் அங்கே சென்று தனது இசையறிவை காட்ட வேண்டும் .அந்த லட்சணத்தில் தருமி அவர்களுக்கு லெக்சர் அடிக்கிறார். தான் ஒரு உத்தமனாம்.


  குட்டிப்பிசாசு என்பரை கை காட்டும் காரிகனின் நகைசுவையை என்னவென்பது ..?குட்டிப்பிசாசு ஒழுங்காக கேட்கவில்லை என்றால் காரீகனும் பாடல் கேட்கவில்லை போலும் !
  இதழே இதழே தென் வேண்டும் - பாடலில் ஆ ...ஆ ..மெல்ல மெல்ல தொடுங்கள் என்று எம் எஸ் வீ இசையமைத்தது

  எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது .பாடலில் உதட்டுக் கணிக்குள் இருக்கும் சிவப்பு ஆ ,,ஆ இதுவும் எம் எஸ் வீ இசையமைத்தது. இதனை யாரும் Porn music. என்று சொல்லவில்லை.அல்லது பாடிய பாலசுப்ரமணித்தையும் Porn singer. என்று யாரும் இகழ்ந்ததாகத் தெரியவில்லை.
  இது போன்ற " இசைவிமர்சனங்கள் "காரிகனிடமிருந்தே வரும்.ஏனென்றால் அவருக்குத்தான் எல்லாமே தெரியுமே !!! ராஜா ரசிகர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை !

  விமல்

  ReplyDelete
 28. வாங்க விமல்

  சரியாகச் சொன்னீர்கள் . இளையராஜாவை குறித்துப் பேசுவதிலும் குறைத்துப் பேசுவதிலும் ஒருவேளை காரிகன் டாக்டர் பட்டம் வாங்கினாலும் வாங்குவார் .

  இளையராஜாவிடம் எத்தனை குறைகள் சொன்னாலும் அத்தனையும் அவருக்கு முன்னர் வந்த இசை அமைப்பாளர்களிடமும் இருக்கிறது என்பதை நாம்தான் எடுத்துச் சொல்ல முடியும் .

  ' கிளாசிக் பாடல்கள் இளையராஜாவால் இசைக்கப்படவில்லை' என்ற காரிகனின் கருத்து எவ்வளவு பொய்யானது . இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் classic round . 60 களில் வந்த கிளாசிக் பாடல்கள் ரவுண்டில் ஜி. ராமநாதன் , சுப்பையா நாயுடு , விஸ்வநாதன் ராமமூர்த்தி , மகாதேவன் அவர்களின் இசையில் வந்த பாடல்களும் 70 களில் எம். எஸ். வி அவர்களின் இசையில் வந்த பாடல்களும் பாடப்பட்டன . மூன்றாவது நாள் 80 களில் வந்த கிளாசிக் பாடல்கள் முழுவதும் இளையராஜாவால் இசை அமைக்கப்பட்டவையே . நடுவர்கள் அனைவரும் கர்னாடக இசை வித்வான்கள் . குழந்தைகள் அழகாக பாடப் பாட குழந்தைகளையும் இசை அமைத்த அத்தனை இசை அமைப்பாளர்களையும் புகழ்ந்து பேசினார்கள். இளையராஜாவின் கிளாசிக் பாடல்கள் இரண்டு நாட்கள் நீடித்தன .

  காரிகனின் கணிப்பை நினைத்துச் சிரித்துக் கொண்டேன் . உண்மையில் அவர் ராஜாவின் பாடல்கள் முழுவதும் கேட்டிருக்கிறாரா என்று சந்தேகமாக இருக்கிறது . ஆனால் அவர் குறிப்பிடும் அத்தனை பாடல்களையும் நாம் கேட்டிருக்கிறோம்.


  ReplyDelete
 29. சார்ல்ஸ் அவர்களே

  கிளாசிக்கல் பாடல்கள் என்றால் காரிகனுக்கு என்னவென்று தெரியாது போலே.

  அவர் எழுதும் பாடல் பத்திகளை பொறுமையோடு வாசித்ததில் கிடைத்தது ஏமாற்றமே.அவரைப் போல ஒவ்வொரு பாடலையும் அது அருமை ,இது அருமை என்கிற வேற்று கோசம் தான் மிஞ்சி நிற்கிறது.இது போன்ற பாடல்களின் வரிசையை யாரும் இலகுவாக எழுதி சென்று விடலாம்.

  இணையத்திலிருந்து பழைய பாடல்களைக் கேட்டு [ முன்பெல்லாம் அந்த பாடல்களை அவரே உதாசீனம் செய்திருப்பார் ] இப்போ ராஜா ரசிகர்களை " மடக்கும் " நோக்கத்தில் தானே விரும்பாத அந்த பாடல்களை பார்த்து வியக்கிறராம்,,நம்புங்கள் ! அவர் பாவிக்கும் சொற்கள் சிரிப்பாக இருக்கும்.

  காரிகன் இப்போ தான் 60,70 களின் பாடல்களை கேட்க தொடங்கியுள்ளார்.அந்த வளர்ச்சி ராஜாவின் பாடல்களில் கொண்டு வந்து சேர்க்கும்.

  ரானை சந்திராவால் பத்திரகாளி பாடல்கள் புகழடைந்ததாம்..சிவகுமார் எங்கே போனார் ? நல்ல சப்பைக்கட்டு.அதற்க்கு பிறகு வந்த ராஜாவின் பாடலகளின் வெற்றிக்கு எம் ஜி ஆறும் ,சிவாஜியுமா காரணம் ?

  இந்த காரிகனோடு நல்ல ஜோக் போங்க ...

  விமல்

  ReplyDelete
 30. "அவர் எழுதும் பாடல் பத்திகளை பொறுமையோடு வாசித்ததில் கிடைத்தது ஏமாற்றமே.அவரைப் போல ஒவ்வொரு பாடலையும் அது அருமை ,இது அருமை என்கிற வேற்று கோசம் தான் மிஞ்சி நிற்கிறது.இது போன்ற பாடல்களின் வரிசையை யாரும் இலகுவாக எழுதி சென்று விடலாம்."
  விமல் சார், நீங்க எப்ப ஒரு பதிவு எழுதப் போறீங்க? அதான் ரொம்ப சுலபமா இருக்கே? கிண்டல் செய்வது ஈஸி. உங்களுக்கு காரிகன் மற்றும் அமுதவன் ரெண்டு பேர் மேலயும் ஏகத்துக்கு காண்டு. வரிக்கு வரி விடாம அவங்க ரெண்டு பேரையும் வசவு பாடாம இருக்க முடியல உங்களால.

  ReplyDelete
 31. பசுபதி ராம் அவர்களே

  உங்கள் கணணியை காரிகன் பக்கம் சொடுக்கி நிதானமாகப் படியுங்கள்.ஒரு வசைச் சொல்லகராதியே கிடைக்கும்.அதை அமுதவன் காப்பற்றும் எழுத்து வன்மையையும் பாருங்க. பார்த்திட்டு வாங்க ,பேசலாம்.

  நாம் ஏற்கனவே இது குறித்து நிறைய பேசியாயிற்று.அவர்கள் திருந்துவதாக தெரியவில்லை.நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியும்? நீங்கள் முடிந்தால் முயற்சி செய்யுங்கள்!

  விமல்

  ReplyDelete
 32. சால்ஸ். . விமல் அவர்களுக்கான தங்கள் பின்னூட்டத்தில் இளையராஜாவின் இசையை மறுத்துரைப்பதில் டாக்டர் பட்டம் பெற்றுவிடுவார் என்று கூறியிருக்கிறீர்கள் .தவறான கருத்து என்றே நினைக்கிறேன் .நக்கீரர் பட்டமே சரியெனப்படுகிறது .அளவற்ற அற்புதமான பாடல்களை இளையராஜா தந்துள்ள போதும் மீண்டும் மீண்டும் சிற்சில பாடல்களையே உதாரணமாக கூறி குறைபட்டுக்கொள்கிறார் .குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்க நினைக்கும் காரிகனுக்கு இசைஞானியின் அபிமானி கள் ஒன்றினைந்து நக்கீரன் பட்டம் வழங்கி மகிழ்வோம் .

  ReplyDelete
  Replies
  1. எனக்கு நக்கீரர் பட்டமா? நக்கீரர் என்பவர் திருவிளையாடல் படத்தில் சிவனையே குற்றம் சொல்லி தன் நேர்மையை நிரூபித்தவர். அந்த அளவுக்கு உண்மையை நிலைநாட்ட உறுதி கொண்டவர். எப்படி இந்த விளக்கம்?

   Delete
 33. --Great minds discuss ideas; average minds discuss events; small minds discuss people.
  Eleanor Roosevelt---

  விமல்,சால்ஸ், அருள் ஜீவா வகையறாக்களுக்கு நான் மேற்கண்ட பொன்மொழியை சமர்ப்பிக்கிறேன்.

  ReplyDelete
 34. மன்னிக்கவும். ஒருவேளை சரியாக புரிந்திரா விட்டால்

  பெரிய மனிதர்கள் கருத்துக்களை விவாதிக்கிறார்கள். சாதாரண மனிதர்கள் நிகழ்சிகளை விவாதிக்கிறார்கள். முட்டாள்களோ (சிறிய மனிதர்களின் சரியான தமிழாக்கம்) மனிதர்களை விவாதிக்கிறார்கள்.

  ReplyDelete
 35. small minds discuss people . முட்டாள்கள் மனிதனை விமர்சிக்கிறார்கள் .அப்படியெனில் இளையராஜா என்னும் மனிதனை மட்டமாக விமர்சனம் செய்யும் காரிகன் ,அமுதவன் ,பரத் ,பசுபதிராம் போன்றவர்களின் நிலையை உணரவைத்த காரிகனுக்கு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 36. ம்...ஆங்கில மோகி காரிகனுக்கு ஆங்கில அறிவு இருப்பதாக எடுத்துக்கொள்வதா அல்லது ஆங்கிலத் திமிர் இருப்பதாக எடுத்துக் கொள்வதா என தெரியவில்லை .

  Pride goeth before a fall.

  Empty vessels make the greatest sound.

  The pot calls the kettle black.

  ஆணவத்தால் அழியாதே

  குறை குடம் கூத்தாடும் .

  ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.  ReplyDelete
  Replies
  1. சார்லஸ், இதோ என் பங்கு.
   look before you leap, ஆழம் தெரியாமல் காலை விடாதே,
   do or die, செய் அல்லது செத்து மடி
   the sun never rises in the west, கதிரவன் ஒருபோதும் மேற்கில் உதிப்பதில்லை,
   knowledge is power, அறிவே பலம்,
   action speaks louder than words செயல்பாடுகள் வார்த்தைகளைவிட அதிகம் பேசும்.

   இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

   Delete
 37. காரிகன் அவர்களே !

  பொன் மொழிகள் ,பழமொழிகள் எல்லாம் சமர்ப்பணம் செய்வது இருக்கட்டும்.Porn.music.என்ற உங்கள் புரளிக்கு உங்கள் பொன் மொழிகளிலிருந்து ஏதாவது ஒன்றை எடுத்து விடுங்க பார்ப்போம்.கீழே உள்ள பாடல்கள் இசையில் எந்த ரகத்தில் சேர்ப்பீர்கள் ? ...பார்ப்போம்.

  இதழே இதழே தென் வேண்டும் - பாடலில்

  ஆ ...ஆ ..மெல்ல மெல்ல தொடுங்கள் ....ம் ..ம் .

  எம் எஸ் வீ இசையமைத்தது.

  எத்தனை அழகு கொட்டிக் கிடக்குது .பாடலில்

  உதட்டுக் கனிக்குள் இருக்கும் சிவப்பு ஆ ,,,,ஆ ..ஆஆஆஆ

  இதுவும் எம் எஸ் வீ இசையமைத்ததே !!

  சார்ல்ஸ் அவர்களே!
  ஆங்கில மோகம் ...அது அவரது கோபத்தை மறைக்கும் ஆயுதம் !!
  அது வேறொன்றுமில்லை அவரால் நிதானமாக பதிலளிக்க முடியவில்லை.வடிவேல் போல் கோபித்துக் கொள்கிறார்.

  நரியின் சாயம் வெளுத்து விட்டது....டும் ,,,டும் ,,டும் ...
  அறிவாளி வேஷம் கலைஞ்சு போச்சு ,,,டும் ..டும் ..டும்

  விமல்

  ReplyDelete
 38. சார்லஸ்21 November 2014 09:41
  \\இந்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் classic round . 60 களில் வந்த கிளாசிக் பாடல்கள் ரவுண்டில் ஜி. ராமநாதன் , சுப்பையா நாயுடு , விஸ்வநாதன் ராமமூர்த்தி , மகாதேவன் அவர்களின் இசையில் வந்த பாடல்களும் 70 களில் எம். எஸ். வி அவர்களின் இசையில் வந்த பாடல்களும் பாடப்பட்டன . மூன்றாவது நாள் 80 களில் வந்த கிளாசிக் பாடல்கள் முழுவதும் இளையராஜாவால் இசை அமைக்கப்பட்டவையே . நடுவர்கள் அனைவரும் கர்னாடக இசை வித்வான்கள் . குழந்தைகள் அழகாக பாடப் பாட குழந்தைகளையும் இசை அமைத்த அத்தனை இசை அமைப்பாளர்களையும் புகழ்ந்து பேசினார்கள். இளையராஜாவின் கிளாசிக் பாடல்கள் இரண்டு நாட்கள் நீடித்தன . \\
  சார்லஸ், இம்மாதிரி இசை நிகழ்ச்சிகளை காரிகன் முற்றாக நிராகரிக்கிறார். அவருடைய இந்தக் கருத்தில் எனக்கு மாறுபாடுகள் உண்டு. நான் இந்த நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பார்ப்பவன் இல்லையென்றபோதும் ஏ.ஆர்.ரகுமான் வந்ததுமுதல் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் சொல்வது உண்மைதான். கர்நாடக சங்கீத வித்வான்கள் நிறையப்பேர் பார்வையாளராகவும், நீதிபதிகளாகவும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் முன்னோர்களின் பாடல்களும் எண்பதுகள் என்று வந்தபோது இளையராஜா பாடல்களும் பாடப்பட்டன. அதைப் பார்த்தே நீங்கள் அளவுக்கதிக புளகாங்கிதம் அடைந்துவிட்டிருப்பது உங்கள் வார்த்தைகளிலிருந்தே தெரிகிறது. மகிழ்ச்சி.
  ஒன்று தெரியுமா? அந்த முன்னோர்களின் பாடல்களெல்லாமே எல்லோருக்கும் தெரிந்த பாடல்கள். மக்கள் மத்தியில் பிரபலமாகி பல நூற்றுக்கணக்கான வித்வான்களால் ஆயிரக்கணக்கான முறைகள் மேடைகளில் பாடப்பட்டு, வானொலியில் இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் ஆண்டுகள் கடந்து இதயத்திலும் உதடுகளிலும் உட்கார்ந்திருக்கும் பாடல்கள்.........அவையெல்லாம் அந்த அளவு சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்.
  இளையராஜா பாடல்கள் என்று பாடப்பட்ட பாடல்களில் ஜனனி ஜனனி ஒன்றைத்தவிர வேறு எந்தப் பாடலாவது யாருக்காவது தெரியுமா? மக்கள் மத்தியில் பிரபலமான பாடல்களா அவை? ஏதோ தேவை கருதி அவர் அந்தப் படங்களில் அந்தப் பாடலைப் போட, இவர்களும் வேறு வழியில்லாமல் அந்தப் பாடல்களைத் தேடிப்பிடித்து பிராக்டிஸ் செய்து இசைக்க, அந்த 'நீதிபதிகளும்' அதை ஒப்புக்குப் பாராட்டிவிட்டுப் போனார்கள்.
  மக்கள் மத்தியில் நிலைபெறும் பாடல்கள் என்றால் அவை எவை என்கிற புரிதலே உங்களுக்கு இல்லை போலும்.
  ஜனனி ஜனனி பிரபலமான பாடல்.(அந்த நிகழ்ச்சியில் அந்தப் பையன் அதனைச் சரியாகப் பாடவில்லை என்பது விஷயம்) மற்றும் சிந்துபைரவியில் சில பாடல்கள் என எல்லாப் படங்களிலுமாகச் சேர்த்து ஒரு நாற்பது ஐம்பது கர்நாடக இசை சார்ந்த பாடல்களை இளையராஜா போட்டிருக்கக்கூடும். அவற்றில் ஒரு நான்கோ அல்லது ஐந்து பாடல்களோ மக்கள் மத்தியில் பிரபலமாகியிருக்கும். பிரபலம் என்பது அந்தப் படங்களைப் பார்க்காத மக்களையும் சென்று அடையும் பாடல்தான் பிரபலமான பாடல். கோழி அடைகாப்பதுபோல் சில காசெட்டுக்களை வாங்கிவைத்துக்கொண்டு நாம் மட்டுமே பார்த்து சிலாகித்துக்கொண்டிருக்கும் பல பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள்.

  ReplyDelete
 39. இதை விமல் என்ற எல்லாம் தெரிந்த அதி மேதாவிக்கு எழுதவேண்டும் என்றுதான் துவங்கினேன். ஆனால் அதற்குள் ராஜா ரசிக மணிகளெல்லாம் ஒரே சுருதியில் அபஸ்வரம் வாசிப்பதைக் கேட்டபிறகு சரி இது அது போன்ற எல்லா மரமண்டைகளுக்கும் போய்ச் சேரட்டும் என்று எழுதுகிறேன்.

  பேராசிரியர் தருமிக்கு நான் பாடம் எடுக்கிறேன் என்று சொல்லும் விமலுக்கு வழக்கம் போலவே ராஜாவின் இசை என்ற ஒரு வஸ்துவைத் தவிர வேறு எதுவும் தெரியாது. அதை கூட முழுமையாக கேட்டிருப்பாரா என்றே சந்தேகமாக இருக்கிறது. அவருக்கு ராஜாவைப் புகழ்வதைக் காட்டிலும் அமுதவனையும் என்னையும் வசை பாடுவதே ஆனந்தமாக இருக்கிறது . அது நன்றாகவே தெரிகிறது. இந்த கன்றாவிக் குப்பைக் கருத்துக்களுக்கு ஒரு தளம் வேறு அமைத்துக் கொடுத்துவிட்டார் சால்ஸ். வாழ்க. நீங்கள் செய்வது கருத்து மோதல்களா அல்லது குடுமிப் பிடி சண்டையா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

  இது தனிப்பட்ட ஒருவரின் சொந்த விருப்பங்களை சொல்லும் ஒரு தளம்- நான் எழுதுவதைப் போன்றே சால்ஸ் பதிவுகள் எழுதுகிறார். . என்னை எவ்வாறு ஒரு அன்னியர் எதை எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்க முடியாதோ அதே போல என்னாலும் திரு சால்ஸ் அவர்களை கட்டாயப் படுத்தமுடியாது. தருமி சார் சொல்வதைப் போல அவர் எழுத்து அவருக்கு. நான் எங்கே இதில் குறுக்கே வந்தேன்? பத்ரகாளி படம் வெற்றி பெற்றதின் பின்னே இருந்த ஒரு முக்கியமான காரணியை - அது உண்மையும் கூட- தெரிவித்தேன். உடனே பற்றிக்கொண்டு வருகிறது சிலருக்கு. முதலில் கொஞ்சம் விஷயம் அறிந்திருக்க வேண்டும். அல்லது தெரியாததை தெரிந்துகொள்ளும் ஆர்வமாவது வேண்டும். இந்த இரண்டு அடிப்படை ஞானமும் ஒரு தேக்கரண்டி (டீஸ்பூன் - தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்) அளவு கூட இல்லாத சில அவஸ்தைகள் இளையராஜா அறிமுகம் செய்த சுண்டெலி சித்ரா போல கூச்சலிடுகின்றன. சால்ஸ்சாவது இப்போது பதிவுகள் எழுத ஆரம்பித்துவிட்டார் எனவே அவருக்குத் தெரியும் பதிவு எழுதுவது விமல் என்ற புத்திசாலி சொல்வதைப் போல (".இது போன்ற பாடல்களின் வரிசையை யாரும் இலகுவாக எழுதி சென்று விடலாம்.") அல்ல என்று. இலகுவாக ஏன் நீங்களே ஒரு ராஜா பதிவு எழுதக்கூடாது விமல்? கட்டுரைகளைப் படிக்காமலே பின்னூட்டம் போடும் நீங்கள் இதைச் சொல்ல கொஞ்சமாவது வெட்கப்படவேன்டாமா? உங்களின் நோக்கம் என்னை மற்றும் அமுதவன் இருவரையும் தாக்குவது. அவ்வளவே. அதற்காகவே நீங்கள் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வருகிறீர்கள். இதேபோல எனது தளத்தில் புரளி பேசும் ஒரு நபர் புகுந்தால் நான் "கொஞ்சம் அந்தப் பக்கம் போய் உங்க விளையாட்டை வச்சுக்கங்க" என்று சொல்லிவிடுவேன். ஒருமுறை இதே போல டி சவுந்தர் தளத்தில் விமல் என்னைப் பற்றி எதோ பற்ற வைக்க அவர் (நாகரீகம் தெரிந்தவர்) இந்த குப்பையெல்லாம் இங்கே கொட்டாதீர்கள் என்று பட்டென சொல்லிவிட்டார். பட்டும் இன்னும் தெளியவில்லை. எல்லாம் ராச பாசம்.

  சால்ஸ் எம் எஸ் வி இசையை ரசிப்பதாகச் சொல்வது ஒரு கண்துடைப்பு. அவரால் ஒரு எம் எஸ் வி பாடலைக்கூட உருப்படியாக சொல்லத் தெரியவில்லை. இசை ராட்சஷன் என்ற தலைப்பே எத்தனை ஒரு தலை பட்சமானது! பின் அவர் எதற்கு எம் எஸ் வி இசை எனக்குப் பிடிக்கும் என்று டமாரம் அடிக்கவேண்டும்? எப்படியும் வழக்கம்போல ஒரு குட்டைக்குள்தான் படிப்பவர்களை இழுத்துக்கொண்டு வரப்போகிறார் என்று தெரிந்த பின்னரும் இவரது எழுத்தை நடுநிலைமை என்று எடுத்துக்கொள்ள முடியுமா?

  இளையராஜாவின் வதவதவென்ற எண்ணிலடங்கா பாடல்களில் ஒரு கைப்பிடி அளவே சிறந்த கிளாசிக் வகைப் பாடல்கள் என்றே நான் சொல்லிவருகிறேன். அதை நான் மறுத்ததேயில்லை. அவரது பெரும்பான்மைப் பாடல்கள் எதோ போகிற போக்கில் (பேருந்து பயணம், சலூன் காத்திருப்பு போன்று ) ஒரு திடீர் திருப்திக்கு உகந்தவை. கிளாசிக் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள நீங்கள் அறுபதுகளுக்குப் போயாக வேண்டும். ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ என்ற பாடலை விமல் கேட்டிருப்பாரா என்று தெரியவில்லை. எத்தனை ராக வளைவுகள் அந்தப் பாடலுக்குள் சுகமாக நம்மை அழைத்துச் செல்கின்றன என்ற வியப்பு ஏற்படாமல் இருக்காது.
  ...தொடரும்..

  ReplyDelete
 40. This comment has been removed by the author.

  ReplyDelete
 41. இந்த அபத்தமான அக்கப்போரெல்லாம் பத்ரகாளி படத்தைப் பற்றி நான் சொன்னதினால் வந்தது. அது ஒரு மிகச் சிறிய தகவல். அந்தப் படத்தின் வெற்றிக்கு நடிகையின் மரணமும் ஒரு காரணம் என்றே சொல்லியிருந்தேன். இல்லை என்று நடந்ததை மறுக்கிறீர்கள். அது வாடிக்கைதான். இதில் அமுதவன் சொன்னதையும் அவர் போனாராம் பார்த்தாராம் அவருக்குத்தான் தெரியுமாம் என்று நாலாந்தர நக்கல் அடிக்கும் பாங்கு வேறு.

  சரி. பத்ரகாளி இளையராஜாவுக்காக ஓடியது என்று நிறுவ முயலும் அதே வேளையில் பாலூட்டி வளர்த்த கிளி, உறவாடும் நெஞ்சம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, இது எப்படி இருக்கு போன்ற படங்கள் ஏன் பெட்டிக்குள் போய் முடங்கின? அதிலும் உங்கள் ஆள்தானே இசை அமைத்தார்? அந்தப் படங்கள் வெற்றி பெறாதது குறித்து என்ன சொல்வீர்கள்? வெற்றி பெற்றால் அதற்கு ராஜாதான் காரணம். அப்படி இல்லையா "பாட்டு நல்லா இருந்துச்சு ஆனா படம் ஓடல. இயக்குனர் சொதப்பிட்டான்." இதுதானே விமல்தனம்?(வில்லத்தனம் என்று படிக்கவேண்டாம்.)நினைவெல்லாம் நித்யா படத்தின் பாடல்கள் அற்புதமானவை. ஆனால் படம் வந்த சுவடே யாருக்கும் தெரியாது. இதெல்லாம் திரைஉலகின் இயல்புகள். வேடிக்கைப் பேச்சு ஒன்றுக்கும் ஆகாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளவும்.

  குட்டிப் பிசாசு என்ன எழுதினார் என்று நான் கோடிட்டது நான் மட்டுமே உங்களின் ராஜாவை துவைத்துப் போடவில்லை என்று காட்டத்தான். அதற்கான எதிர்வினை எப்படி இருக்கும் என்பது முட்டையை கீழே போட்டால் உடைந்துவிடும் என்பது போன்றது. உடனே கு பி யை அவருக்கு என்ன தெரியும்? என்று குதறும் வகையில் ஆயிரத்தெட்டாவது முறையாக அதே ஆலாபனை. ஞான சூனியங்கள்! இதே கு பி ராஜாவை புகழ்ந்து எழுதியிருந்தால் இதே நேர்மையாளர் விமலின் பார்வை இப்படி இருக்குமா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அதற்கான பதில் தெரிந்ததுதானே.

  ஆபாசப் பாடல்களை நடு வீட்டில் பந்தி போட்டு நம்மை உபசரித்தது இளையராஜாதான். விரக இசை விரச இசை ஆபாச இசை முக்கல் முனகல் இசை என பலவித பரிமாணங்களில் இந்த புதிய இசை பாணி விஷத்தைப் பாய்ச்சியது. இதற்காகவே இருந்த பல நாலாந்தர ரசிகர்கள் இம்மாதிரியான பாடல்களை விரும்பியதால் இந்தச் சாக்கடைகள் சங்கீதமாகிவிடுமா?

  எம் எஸ் வி செய்தார் அவர் இது போல பாடல் அமைக்கவில்லையா என்ற கேள்விகள் இன்னொருவனின் முதுக்குப் பின் ஒளிந்துகொள்ளும் கோழைத்தனம். இதழே இதழே தேன் வேண்டும் பாடல் மக்களின் மனதில் இடம் பிடித்த கிளாசிக் பாடலா? உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் எம் ஜி ஆர் ரசிகர்களே அந்தப் பாடலை விரும்பவில்லை. அந்தப் பாடலை நான் நியாயப் படுத்தியோ அதிலுள்ள சிறப்புகளை விவரித்தோ எங்காவது எழுதியிருந்தால் உங்களின் வாதம் ஒரு நேர்மையானது என்று எடுத்துக்கொள்ளலாம். மேலும் எம் எஸ் வி இதுபோன்று ஒரு நரகல் பாணியை தமிழில் ஏற்படுத்தவில்லை. அதைச் செய்தது உங்களின் பெருமைக்குரிய இளையராஜா. உங்களால் இரண்டு மூன்று பாடல்களை மட்டும்தான் இங்கே கொண்டுவர முடியும். நான் சுட்டிக்காட்ட ஏகப்பட்ட கருமாந்திரங்கள் இளையராஜாவின் இசையில் பாடல் என்ற போர்வையில் இருக்கின்றன. எடுத்துவிட்டால் அது ஒரு தேவையான அம்சம் என்று பின் வாங்குவதைத் தவிர உங்களால் வேறொன்றும் புதிதாகச் சொல்லமுடியாது. எனவே நீங்களாகவே காலில் கல்லைக் கட்டிக்கொண்டு குளத்தில் குதிக்கவேண்டாம்.

  ......தொடரும்.........

  ReplyDelete
 42. சால்ஸ். தங்கள் பதிவில் காரிகனின் பின்னூட்டத்திற்கான பதில் . தன்னை நடுநிலை ரசிகன் என்றும் எல்லாம் அறிந்த அதிமேதாவி என்றும் பிதற்றிக்கொண்டிருப பவர் இளையராஜா ரசிகர்கள் மரமண்டைகள் ,கிணற்றுதவளைகள். மற்றவர்களை நாலாந்திர நக்கல் செய்பவர்கள் என பலவகையான வசைமொழிகளால் வறுத்தெடுக்கிறார். இதில் தான் நாகரிகம் தெரிந்தவர் என்கிறார் . இசைஞானியின் பாடல்கள் எல்லாமே வெற்றியடைந்திருக்கின்றன என்றோ இசைஞானியால் தான் பாடல்கள் வலுப்பெற்றன என்றோ சால்ஸ் தன் பதிவில் எங்கே கூறியுள்ளார் ?இசையில் ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்றும் பாமரனும் கேட்கும் இசையையும் வழங்கியிருக்கிறார் என்றும் தானே பதிவு செய்திருக்கிறார் .தன் அபிமான இசையமைப்பாளர் குறித்த செய்திகளையும் தெரிவித்திருக்கிறார் . இதில் பதிவை முழுதும் படிக்காமல் நாங்கள் கருத்து தெரிவிப்பதாக காரிகன் நையாண்டி செய்கிறார் .இசையமைப்பாளர் இசைக்கும் அத்தனை பாடல்களும் வெற்றிபெற வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள் ?உங்கள் கணிப்பின்படி எம் எஸ் .வி.யின். அனைத்துப் பாடல்களும் வெற்றியடைந்திருக்கின்றனவா ? சூப்பர் சிங்கரில் இடம்பெற்ற கிளாசிக் பாடல்களில் எம் எஸ் .வி.யின் பாடல்களே பிரபலமானவை என்றும் இசைஞானியின் பாடல்களில் ஜன னி ஜன னி என்ற பாடலைத்தவிர மற்ற பாடல்கள் யாரும் கேட்டிராத ,பிரபலமடையாத பாடல் கள் என்றும் காரிகனுக்கு அமுதவன் ஒத்து ஊதியிருக்கிறார். ... வேதம் நீ,.,ஆடல்கலையே தேவன் தந்தது ,அழகுமலராட ,போன்ற பாடல்கள் யாரும் கேட்டிராத பாடல்களா?முட்டையை சோற்றுக்குள் அமுக்கலாம். முழு பூசணிக்காயை மறைக்க நினைப்பது நியாயமா?..

  ReplyDelete
 43. This comment has been removed by the author.

  ReplyDelete
 44. விமல்,

  இப்போதாவது காமெண்ட் ரிமூவ்ட் பை தி ஆதர் மற்றும் அட்மினிஸ்ட்ரேடர் என்பதின் விளக்கம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். எனவே மடத்தனமான கேள்விகள் கேட்கவேண்டாம்.

  இப்போது அந்த ஆங்கிலப் பொன்மொழி பற்றி. ஸ்மால் மைன்ட்ஸ் டிஸ்கஸ் பீபிள் என்பதை ஆங்கிலத்திலும் தமிழும் சொல்ல விரும்பியதால் அந்த பின்னூட்டம். அது விமல் என்ற ஒரு "மேதாவிககான" பின்னூட்டம். தவறுதலாக சால்ஸ் அதை தனக்கென நினைத்து என்னை ஆங்கில மோகி என்று பழித்துரைக்கிறார். இளையராஜாவே அப்படிப் பார்த்தால் கவுண்டர் பாய்ன்ட் போன்ற மேல்நாட்டு செவ்வியல் இசையை நகல் எடுத்தவர்தானே?அவரை மேல்நாட்டு மோகி என்று அழைக்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? வெறும் கர்நாடக இசையை வைத்துக்கொண்டு இங்கே யாரும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்த் திரையின் பாடல்கள் எல்லாமே மேற்கத்திய கலப்பினால் வந்தவைதான். இங்கே கர்நாடக ராகத்தின் துல்லியமான பதிப்பு என்று எதுவுமே கிடையாது. அது எம் எஸ் வி, ஜி ராமநாதன், கே வி எம் ஆகட்டும் உங்களின் இளையராஜா ஆகட்டும். வெறும் ராகங்களை வைத்துக்கொண்டு சபாக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெருமைகளோடு மட்டுமே ஜல்லியடிக்க முடியும். இசை பற்றி ஏதாவது அரிச்சுவடி அறிந்திருந்தால் உங்களின் கருத்து ஏற்புடையதாக இருக்கும். உங்களுக்கு என்னை திட்டுவதிலேயே கவனம் செல்வதால் இசை பற்றிய புரிதலைப் பற்றிய எந்த சிறிய எண்ணமும் ஒரு சிறு விதையாகக் கூட தோன்றவில்லை.

  எனக்குக் கோபம் வந்ததால் ஆங்கிலத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறேன் என நீங்கள் தப்பிப்பது ஒரு கீழ்த்தரமான நகைச்சுவை. இளையராஜா பாரம் நடத்திய ராஜா சிகாமணிகளின் குகைகுள்ளே சென்று வந்தவன் நான். ஐந்து ஆறு பேர் என்னை சூழ்ந்தபோதும் தனி ஒருவனாக நின்றேன். துப்பிருந்தால் இளையராஜா பற்றி பேசும் அந்த நபர்கள் முதலில் தமிழில் பேசட்டும். என்னை எதிர்க்கட்டும். இளையராஜா பற்றி பேசும் போது எதற்காக ஆங்கிலம்? நீயும் நானும் என்ன இங்கிலாந்திலா இருக்கிறோம்? உங்கள் இளையராஜா தமிழ் மணத்தை பரப்பியவர் என்று கூறு போட்டு விற்கும் அற்பர்களே பின் ஏன் அலட்டலான ஆங்கிலம்? நான் இதுவரை கேட்ட இசையில் பாதி கூட கேட்டிராத நீங்கள் என்னை விமர்சிப்பது வேடிக்கைதான். முடிந்தால் தமிழில் ஒரு வார்த்தை எழுதுங்கள். நலம். அதில் ஒருவர் சொல்கிறார். இனிமேல் இணையத்தில் எந்த பாரத்திலும் நான் பங்கு பெற முடியாதாம். நீங்கள் யார் என்னை தடை செய்ய? இணையம் என்ன உங்கள் வீட்டு தோட்டமா? கோழைகள். இங்கே என்னிடம் வீராப்பு பேசிய நபர் இன்னொரு இடத்தில் எம் எஸ் வி- டி கே ஆர் இசைத்த மலர்ந்தும் மலராத பாதி மலர் போல பாடலை சிறப்பித்துப் பேசுகிறார். எதற்கு இந்த இரட்டை முகம்? இசை என்றால் அது இளையராஜா இல்லை என்று உங்களுக்கே தெரிந்திருக்கும் போது என்னை எதற்கு வீணாக விமர்சனம் செய்கிறீர்கள்? துணிவிருந்தால் உங்கள் இளையராஜாவிடமே சென்று இதைச் சொல்லிப் பாருங்கள். அடுத்த நொடியே அவர் உங்களை வெளியே துரத்திவிடுவார்.

  இளையராஜாவை துதிப்பதிலும் ஒரு அரசியல் இருக்கிறது. ஆனால் அவர் அந்த அரசியலை துவைத்துப் போட்டுவிட்டார். பாவம் ராஜா துதிபாடிகள். விமல் சால்ஸ் அருள் ஜீவா வகையறாக்கள்.

  ReplyDelete
 45. அமுதவன் சார்


  ///இளையராஜா பாடல்கள் என்று பாடப்பட்ட பாடல்களில் ஜனனி ஜனனி ஒன்றைத்தவிர வேறு எந்தப் பாடலாவது யாருக்காவது தெரியுமா? மக்கள் மத்தியில் பிரபலமான பாடல்களா அவை? ஏதோ தேவை கருதி அவர் அந்தப் படங்களில் அந்தப் பாடலைப் போட, இவர்களும் வேறு வழியில்லாமல் அந்தப் பாடல்களைத் தேடிப்பிடித்து பிராக்டிஸ் செய்து இசைக்க, அந்த 'நீதிபதிகளும்' அதை ஒப்புக்குப் பாராட்டிவிட்டுப் போனார்கள்.
  மக்கள் மத்தியில் நிலைபெறும் பாடல்கள் என்றால் அவை எவை என்கிற புரிதலே உங்களுக்கு இல்லை போலும்.///

  மேலே குறிப்பிட்ட உங்களின் கருத்தில் உண்மை குறைவாக உள்ளது . ஜனனி என்ற பாடல் போக , சலங்கை ஒலியில் ' வேதம் நீ ' , ராகவேந்திராவில் ' ஆடல் கலையே' , காதல் ஓவியத்தில் ' சங்கீத ஜாதி முல்லை ' , சிந்து பைரவியில் ' பாடறியேன் ' , வைதேகி காத்திருந்தாளில் ' அழகு மலர் ஆட ' போன்ற பாடல்கள் லட்சக்கணக்கான மக்களின் மத்தியிலும் மனதிலும் நிலை பெற்ற பாடல்கள் . 'இசைஅரசி ' என்ற ஒரு பாடல் மட்டுமே அதிக பிரபலத்தை அடையவில்லை. ஆனால் அதுவும் நல்லதொரு பாடல். நடுவர்களால் வியந்து போற்றப்பட்ட பாடல்.

  இளையராஜா அவர்கள் முறையாக கர்னாடக இசை பயின்றவர் . அவர் இதுவரை 142 ராகங்களை அடிப்படையாகக் கொண்டு பற்பல பாடல்கள் படைத்தவர்.

  ReplyDelete
 46. ஹலோ காரிகன்

  உஷ்ணமாகி விட்டீர்கள் . காது மூக்கிலிருந்தெல்லாம் புகை வருவது தெரிகிறது ....சரி... சரி... அமைதி . இவ்வளவு சூடாக வேண்டுமா என்ன!? இளையராஜா பாட்டு கேளுங்கள் . கொஞ்சம் சாந்தம் அடைவீர்கள் . ஓ...அதற்கும் கோபம் வருகிறதா...சரி .... வரும் வாரம் சூப்பர் சிங்கர் பாருங்கள். உங்களுக்குப் பிடித்தமான மெல்லிசை மன்னர் வருகிறார். அற்புத பாடல்கள் அரங்கேறும் . ரசியுங்கள், ருசியுங்கள் . எம்.எஸ் .வி அவர்களின் பாடல்களையும் நான் விரும்புகிறவன்தான்! அது கண்துடைப்பு என்பது உங்களின் கற்பனை.

  ReplyDelete
 47. காரிகன்

  இளையராஜா ரசிகர்களை விளிக்கும் உங்கள் வார்த்தைகள் ஞாயமில்லை. நிறைய unparliamentary words பயன்படுத்துகிறீர்கள் . மதியீனர்கள், முட்டாள்கள் , மரமண்டைகள் , வெங்காயங்கள், அரைவேக்காடுகள் , அறிவிலிகள் , முண்டங்கள் போன்ற வார்த்தைகளோடு இன்னும் மறந்து போன வார்த்தைகளும் அடங்கும் . ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. அனுபவித்துச் சொல்லியிருக்கிறார்கள் . ஆரோக்கியமாகவே வாதாடுவோம் .

  ReplyDelete
 48. திரு அமுதவன் அவர்கள் தனது வழமையான ஸ்டைலில் உங்களுக்கு என்ன தெரியும் என்ற பல்லவியை பாடி கச்சேரியை ஆரம்பித்திருக்கிறார்.அவர் சொவது கீழே :

  ஒன்று தெரியுமா? அந்த முன்னோர்களின் பாடல்களெல்லாமே எல்லோருக்கும் தெரிந்த பாடல்கள். மக்கள் மத்தியில் பிரபலமாகி பல நூற்றுக்கணக்கான வித்வான்களால் ஆயிரக்கணக்கான முறைகள் மேடைகளில் பாடப்பட்டு, வானொலியில் இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் ஆண்டுகள் கடந்து இதயத்திலும் உதடுகளிலும் உட்கார்ந்திருக்கும் பாடல்கள்.........அவையெல்லாம் அந்த அளவு சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்கள்.

  இளையராஜா பாடல்கள் என்று பாடப்பட்ட பாடல்களில் ஜனனி ஜனனி ஒன்றைத்தவிர வேறு எந்தப் பாடலாவது யாருக்காவது தெரியுமா? மக்கள் மத்தியில் பிரபலமான பாடல்களா அவை? ஏதோ தேவை கருதி அவர் அந்தப் படங்களில் அந்தப் பாடலைப் போட, இவர்களும் வேறு வழியில்லாமல் அந்தப் பாடல்களைத் தேடிப்பிடித்து பிராக்டிஸ் செய்து இசைக்க, அந்த 'நீதிபதிகளும்' அதை ஒப்புக்குப் பாராட்டிவிட்டுப் போனார்கள்.//

  அவருக்கு மட்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பியது போல எழுதுகிறார்.நாமும் நிகழ்ச்சியை பார்த்தோம் அல்லவா !

  ஜனனி ஜனனி , பாடறியேன் , இசையரசி , ஆடல் கலையே போன்ற பாடல்கள் பிரபலமானவையே.
  அவர்க்கு தெரிந்தது ஜனனி ஜனனி மட்டுமே என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.
  இன்னும் ஒரு புரட்சிகரமான தகவலை அமுதவன் சொல்லியிருக்கின்றார்.அது கீழே :
  /// ...மக்கள் மத்தியில் பிரபலமாகி பல நூற்றுக்கணக்கான வித்வான்களால் ஆயிரக்கணக்கான முறைகள் மேடைகளில் பாடப்பட்டு, வானொலியில் இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் //
  அந்த பாடல்களை எந்த சபாவில் ,எந்த வித்துவான் பாடினார் என்று சொல்லுவீர்களா அமுதவன் ?
  இன்னுமொரு அண்டப்புளுகை அவிழ்த்துவிடுகிறார் அமுதவன்! அது கீழே :
  /// ...ஏதோ தேவை கருதி அவர் அந்தப் படங்களில் அந்தப் பாடலைப் போட, இவர்களும் வேறு வழியில்லாமல் அந்தப் பாடல்களைத் தேடிப்பிடித்து பிராக்டிஸ் செய்து இசைக்க, அந்த 'நீதிபதிகளும்' அதை ஒப்புக்குப் பாராட்டிவிட்டுப் போனார்கள்.///

  இளையராஜா பாடல்களை சாதாரண ஒலிப்பதுவு கூடங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.பார்த்திபன் கனவு பாடல்களைத்தான் தேடி பிடிக்க வேண்டும் என்பது தான் நிதர்சனம் ! பொய்யை பேசினாலும் நம்பக்கூடிய முறையில் பேச வேண்டும் ஐய்யா !!
  காரிகன் ஐய்யா .....இசையறிவுமிக்க எல்லாம் தெரிந்த மேதாவியே .
  pornmusic. என்று ஏதோ பினாத்திநீர்கள்.அதற்க்கு விளக்கம் கேட்டோம் .முதுகுக்குப் பின்னால் ஒளிக்கும் சாமாச்சாரம் எல்லாம் பேசுகிறீர்கள் !

  மேதாவி போல தொடங்கியது நீங்கள் !!

  VIMAL

  ReplyDelete
 49. சால்ஸ்,

  நீங்களும் விமல் பாணியை பின்பற்றவேண்டாம். பள்ளிச் சிறுவர்கள்தாம் மற்றவரை வெறுப்பேற்ற அவருடைய கருத்தோடு மோதாமல் சரி சரி கோபப்படாதே என்று இன்னும் கிண்டி விடுவார்கள். அது ஒரு கீழ்த்தரமான போக்கு. நான் சொல்லியிருக்கும் வாதங்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் நீங்களும் அதையே செய்வது உங்களுக்கும் வேறு பாதைகள் தெரியவில்லை என்பதை காட்டுகிறது.

  பேசாவிட்டால் பயந்து விட்டான். பதில் சொன்னால் கோபம் கொண்டான் என்பது என்ன விவேகமோ? எனக்கு சொல்லும் உங்களின் பொன் போன்ற அறிவுரைகளை உங்கள் நண்பர்கள் விமல் போன்ற ஆட்களுக்கு முதலில் சொல்லுங்கள். இல்லை என்னை விடாது தாக்குவது ஒன்றே உங்களின் நோக்கம் என்றால் நான் என்ன சொல்லியும் பயனில்லை. வணக்கம்.

  ReplyDelete
 50. விமல்,

  porn music பற்றி நான் சொல்வதை விட உங்களின் இளையராஜாவின் இசை சிறப்பாக உங்களுக்கு புரியவைக்கும். ஏதேனும் பாடல்களை கோடிட வேண்டுமா? கேடுகெட்ட அந்தப் பாடல்களை நான் உதாரணம் வேறு காட்டவேண்டுமாக்கும்?

  கண்றாவி படுக்கையறை இசைக்கு இத்தனை முக்கியத்துவம் அளிக்கும் உங்களின் இசையறிவுக்கு ஒரு ஆழ்ந்த அனுதாபம். இளையராஜாவின் ரசிகராக இருப்பதற்கு தேவையான தகுதி உங்களுக்கு இருக்கிறது என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?

  ReplyDelete
 51. காரிகன்
  சவுந்தர் என்னை சொன்னது உணமைதான்.அவரது படைப்புக்களை இன்றும் படிக்கிறன்.அவருடன் வாதம் புரியும் தகுதி எனக்கில்லை.அவர் சொன்னதும் நியாமே !உங்களையும் நன்றாக ,நாகரீகமாக ஓடிப்போ என்று துரத்தியதை மறந்தா போனீர்கள்

  சார்ல்ஸ் எம் எஸ் வீயை ரசிப்பது பொய் என்று அவருக்குள்ளே புகுந்து பார்த்தீர்களா ?

  வசைக்கு காளமேகம் இல்லை இல்லை காரிகன் சித்ரா பற்றிய புதுமையான சொல்லாடல்.வாழ்த்துக்கள்.உங்கள் சொல்லகராதியை ஒழுங்காகத் தொகுக்கும் முயற்ச்சியில் உள்ளேன்.இன்னும் நிறைய சொற்கள் தேவை.குறிப்பாக திரை இசைக்கலைஞர்களை தாங்கள் விழிக்கும் விதம் என்னை நெகிழ வைக்கிறது.

  சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்

  ஏமப் புனையைச் சுடும் - திருக்குறள் -306

  சினமென்னும் தன்னைச் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு அவனை அழிப்பதுடன் அவனுக்குத் துணையாக நின்ற பாதுகாவலரையும் அழிக்கும்

  வள்ளுவனையும் ராஜா ரசிகன் என்று திட்ட வேண்டாம்!

  விமல்

  ReplyDelete
 52. சார்லஸ், நீங்கள் எதிர்பார்த்ததை விடவும் உங்கள் தளம் தகித்துச் சூடுபிடித்திருக்கிறது. காரிகன் அவர்களை நீங்களும் உங்கள் நண்பர்களும் அவசியமற்றுச் சீண்டிவிடப்போய் அவர் இங்கே வந்து போடு போடென்று போட்டுத்தள்ளிவிட்டார். இன்னமும் அவர் கேள்விகளும், வாதங்களும் பதில் சொல்லப்படாமல் அப்படியேதான் இருக்கின்றன. அவர் வாதங்களுக்கு பதில் சொல்லுவதை விட்டுவிட்டு அவரை ஆங்கிலமோகி என்று பிதற்றலான வாதத்தை ஆரம்பித்தது முதல் தவறு.
  ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பொதுவெளியில் எழுத அல்லது பேச வருகிறவர்கள் ஏதாவது ஒரு துறையிலாவது தேர்ந்த அறிவு பெற்றவர்களாக இருக்கவேண்டியது அவசியம். அல்லது, பொதுவான பல விஷயங்களிலும் பரிச்சயமுள்ளவர்களாகவாவது இருந்தாகவேண்டும். இங்கே இணையத்தில் இசை பற்றித் தமிழில் எழுதுகிறவர்களில் காரிகன் அளவுக்கு மேற்கத்திய இசையில் பரிச்சயம் உள்ளவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர் அந்த அளவுகோள்களின் வழியாகத்தான் இசைகுறித்த எதையும் பார்க்கமுடியும். அவருக்கிருக்கும் மேற்கத்திய இசை பற்றிய பரிச்சயங்கள் அவருக்குப் பெருமைதானே தவிர நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதுபோல் அது அவரைக் கேலியோ கிண்டலோ செய்வதற்குரிய விஷயம் அல்ல. அப்படி நீங்கள் நினைத்திருந்தால் உங்களைத் தாழ்த்திக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
  நல்ல வேளை, இங்கே நீங்களும் உங்கள் நண்பர்களான அருள்ஜீவா மற்றும் விமல் ஆகியோர் மட்டும் வாதிட்டுக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய இன்னொரு நண்பர் இருந்தாரே பைந்தமிழ் அறிஞர்- என்னப்பெ, வாப்பெ, போப்பெ- என்று பேசிக்கொண்டு...நல்ல வேளை, அவரைக் காணவில்லை.
  \\இளையராஜா அவர்கள் முறையாக கர்னாடக இசை பயின்றவர் . அவர் இதுவரை 142 ராகங்களை அடிப்படையாகக் கொண்டு பற்பல பாடல்கள் படைத்தவர்.\\
  இளையராஜா கர்நாடக இசையைக் 'கற்றவர்தான்'. யாரிடம் கற்றார், எப்போது கற்றார் என்பது உட்படத் தெரியும். அவர் கற்றவர் தானேதவிர அதில் நிபுணத்துவம் பெற்றவரோ, துறைபோகியவரோ அல்ல.
  142 ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசையமைத்தவர் என்று சொல்லியிருக்கிறீர்கள். 846 ராகங்களைக் கொண்டு இசையமைத்திருப்பதாக அல்லவா சொல்லிக்கொள்கிறார்கள்..........

  இங்கே அருள்ஜீவாவும், நண்பர் விமலும் என்னை ஒவ்வொரு பின்னூட்டத்திலும் வம்புக்கிழுக்காமல் இருப்பதில்லை. போகட்டும். அதில் அவர்களுக்கு அப்படியொரு மகிழ்ச்சி.
  \\சூப்பர் சிங்கரில் இடம்பெற்ற கிளாசிக் பாடல்களில் எம் எஸ் .வி.யின் பாடல்களே பிரபலமானவை என்றும்\\
  நான் இப்படிச் சொல்லியிருக்கிறேனா? ஜி,ராமனாதன், எஸ்விவெங்கட்ராமன், விஸ்வநாதன்-ராம மூர்த்தி, கேவிஎம் பாடல்கள் என்றுதான் சொன்ன ஞாபகம்....... அப்படியே பார்த்தாலும் அங்கு பாடப்பட்ட மற்றவர்களின் பாடல்கள் அளவுக்கு ஜனனி ஜனனி தவிர வேறு இ.ராவின் பாடல்கள் புகழ்பெற்றவை அல்ல.

  \\அந்த பாடல்களை எந்த சபாவில் ,எந்த வித்துவான் பாடினார் என்று சொல்லுவீர்களா அமுதவன் ?\\
  இதை எதற்கு நான் பட்டியல் போட்டுச் சொல்லவேண்டும்? எல்லா சங்கீத மேடைகளிலும் எல்லா வித்துவான்களாலும் பாடப்படும் பாடல்களாகத்தான் எம்எஸ், எம்எல்வி, டிகேபட்டம்மாள் ஆகியோர் பாடல்கள் இருக்கின்றன. விஸ்வநாதன் ராம மூர்த்தி பாடல்களை எல்லா ஆர்க்கெஸ்ட்ராக்களிலும் ஐம்பது அறுபது வருடங்களாகப் பாடிக்கொண்டுதானே இருக்கிறார்கள்....

  \\இளையராஜா பாடல்களை சாதாரண ஒலிப்பதுவு கூடங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.\\

  இவர் என்ன சொல்லவருகிறார் என்பதே புரியவில்லை. காசெட் விற்கிற கடைகளைச் சொல்லுகிறார் என்பதாகப் புரிந்துகொள்ளட்டுமா?

  \\வள்ளுவனையும் ராஜா ரசிகன் என்று திட்ட வேண்டாம்!\\
  எதற்காக இப்படியொரு கறுப்பு ஜோக் விமல்? தயவுசெய்து வள்ளுவரை எல்லாம் விட்டுவிடுங்கள். அவரை எதற்காக 'ராஜா ரசிகன்' என்று சொல்லப்போகிறார்கள்?
  உலக மேதையாக இருப்பவர் எல்லாம் ராஜா ரசிகராக இருக்கமுடியுமா என்ன?

  ReplyDelete
 53. திரு அமுதவன் அவர்களே

  எம்எஸ், எம்எல்வி, டிகேபட்டம்மாள் ஆகியோர் பாடல்கள் சபைகளில் பாடுவதைப் பற்றியா கூறினீர்கள்! ஓகே ..நல்லது.

  நான் நினைத்தேன் நீங்கள் எம் எஸ் வீ , கே வீ எம் , பாடலைக் குறிப்பிடுகின்றீர்கள் என்று.பொத்தாம் பொதுவாக குறிப்பிட்டதால் வந்த விளைவு அது. முன்னோர்கள் என்று விழிப்புக்குள் பொதுவாக எம் எஸ் வீ , கே வீ எம் , ராமநாதன் என்று பேசுவதால் வந்தது.விட்டால் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னுக்கு போவீர்கள் போலே !!
  1940,1950 ,கலீல் வந்த படங்கள் பெரும்பாலும் புராண இதிகாச , மன்னர் கதைகள் என்பதால் பாடல்கள் கர்நாடகம் சார்ந்து தான் இருந்தது இளையராஜா அந்தக் காலத்தில் இசையமைத்திருந்தால் அப்படித்தான் இசைத்திருப்பார்.

  அதற்க்கான திறமையும் தகுதியும் கொண்டவர் தான். நீங்கள் குறிப்பிடும் அந்த நிகழ்ச்சியில் தாளவாத்தியக் கலைஞர் விக்கு விநாயக ராம் இளையராஜா அமைத்த தாள நுட்பத்தை வியந்து பார்ட்டியத்தை நீங்க கவனிக்க வில்லையா ?

  திரும்பவும் புதிய அறியாமையை கக்கியுள்ளீர்கள் அமுதவன் அவர்களே !!

  //... அவர் கற்றவர் தானேதவிர அதில் நிபுணத்துவம் பெற்றவரோ, துறைபோகியவரோ அல்ல///

  இது நீங்கள் சுய புத்தியில் தானே எழுதினீர்கள் ? நீங்கள் கருதும் "துறைபோகியவர் " என்பதன் அர்த்தம் என்னவோ ? ஒப்பிப்பவர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ...?
  துறைபோகாமலா ராகம் கண்டு பிடித்தார் ...?

  காரிகனை புகழ் பாடியுள்ளீர்கள் ....நல்ல விஷயம்.
  //..தமிழில் எழுதுகிறவர்களில் காரிகன் அளவுக்கு மேற்கத்திய இசையில் பரிச்சயம் உள்ளவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.//

  அவரை அங்கேயே நிற்க சொல்லுங்கள்.தேவை என்றால் ஜெர்மனையும் எழுத சொல்லுங்கள்.தமிழ் பாடல்கள் பற்றி நமக்கு கதை விட வேண்டாம் என்று சொன்னால் புண்ணியம்.  porn music பற்றி புரளி கிளப்பியது காரிகன் தான் .ராஜாவுக்கு முன்னையவர் செய்யவில்லையா என்று கேட்டால் கணக்கு போட்டு காட்டுகிறார்.தனது முன்னோர்கள் காட்டிய வழியில் தான் செல்கிறார் ராஜா !!![ அவர்களையும் தாண்டியது வேறு கதை ]

  ராஜாவும் ,முன்னையவர்களும் படத்துக்குத் தான் இசையமைக்கிறார்கள்!! சபா கச்சேரி அல்ல !


  எதை எடுத்தாலும் புரட்டுவதும் , திசை திருப்புவதும் தான் அவர் ஸ்டைல்.
  சினிமா இசைக்கலைஞர்களை அவர் அடைமொழியுடன் அழைப்பது நன்றாக இருக்கிறது.

  இந்த லட்சணத்தில் நாகரீகம் பற்றி புலம்பல் வேறு !!மன உளைச்சல் என்றால்றாஜாவின் தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேளுங்கள்.

  உங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் எண்ணத்தை விட்டுத் தொலையுங்கள் !

  விமல்

  ReplyDelete
 54. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. super..super..super

   vimal

   Delete
 55. This comment has been removed by the author.

  ReplyDelete
 56. This comment has been removed by the author.

  ReplyDelete
 57. விமல், ஓடி ஒளிய வேண்டாம். சிலவற்றை சந்திப்போம்.

  திரையிசை ராகங்கள் பகுதி
  காரிகன்
  Posted on 04/03/2013 at 15:43
  திரு டி சவுந்தரின் இசை பற்றிய பதிவுகள் எப்போதுமே வெகு நுணுக்கமாக எழுதப்பட்டிருக்கும். இந்த பதிவு கூட தமிழ் திரை இசையின் நாட்டுபுற இசையை பற்றிய அபாரமான பதிவு. இளையராஜாவை பற்றி குறிப்படும் போதுமட்டும் சவுந்தர் உணர்சிவசப்படுவது தவிர மற்ற செய்திகள் உண்மையே. சவுந்தர் இளையராஜாவை ஆராதனை செய்யாமல் இசை பற்றி எழுதுவதாக இருந்தால் அது உண்மையிலேயே வெகு நடுநிலைமையோடு இருக்கும் என்பது என் கருத்து.
  Reply

  kamalan
  Posted on 04/04/2013 at 15:03
  போட்டானே ஒரு போடு …! அவன் கேட்டானே ஒரு கேள்வி …!!
  காரிகன் கச்சிதமையா ..!!!

  திரையிசை ராகங்கள் பகுதி 9.

  விமல்
  Posted on 08/16/2013 at 02:17
  திரு.சுவுந்தர்
  எல்லோரும் வாழ்த்துவது போலவே நானும் தங்களை வாழ்த்துகிறேன்.இப்படியான அருமையான கட்டுரைகளை தரும் உங்களை வாழ்த்துவதை தவிர வேறு வழியில்லை.இங்கே சிலர் இளையராஜா காய்ச்சலில் திரிகிறார்கள்.அவர்களுக்கும் கொஞ்சம் பாடம் புகட்டுங்கள்.
  விமல்
  Reply

  T.சௌந்தர்
  Posted on 08/18/2013 at 02:35
  // ” இங்கே சிலர் இளையராஜா காய்ச்சலில் திரிகிறார்கள்.”// – விமல்
  திரு விமல் அவர்களே ,
  காய்ச்சலில் திரிபவர்கள் பற்றி நான் என்ன சொல்வது.ராகங்களில் நல்ல மருத்துவ குணம் இருப்பது உங்களுக்குத் தெரியும்.
  நான் எழுத&