இசை ராட்சஷன் - 3
(The Musical Legend )
அன்னக்கிளி ,பத்ரகாளி படத்திற்குப் பிறகு பாலூட்டி வளர்த்த கிளி படம் வந்ததாக ஞாபகம் . அந்தப் படத்திலும் ' கொல கொலயா முந்திரிக்கா ' என்ற பாடலே மனசுக்குள் நுழைந்தது . சின்ன வயசுதானே ! ஜாலியான பாட்டுக்களாய் இருந்தால் எனக்கும் ஜாலிதான் ! அந்த வயதிற்கு சோகப் பாட்டுக்களே எனக்குப் பிடிக்காது . சினிமாவில் சோகக் காட்சிகள் சோகப் பாடல்கள் பார்த்து அழுகை அழுகையாக வரும். அதுவும் சிவாஜி கணேசன் படம் என்றால் சொல்லவே வேண்டாம் . நான்தான் சிறு பையன் அழுகை வருகிறதாக்கும் என நினைத்து அருகில் அமர்ந்திருக்கும் பெருசுகளை திரை வெளிச்சத்தில் பார்த்தால் அவர்களும் அழுவதைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். சிவாஜி எல்லோரையும் அழ வைத்து விடுகிறாரே . அவர் மகா கலைஞன் என்று நினைத்திருக்கிறேன் . நான் அவருக்கும் ரசிகனானேன் . அவருடைய படங்களை நான் விரும்பி பார்க்கவும் ஆரம்பித்தேன் . அதைப் பற்றி தனிப் பதிவே எழுதலாம் .
நன்றாக ஞாபகம் இருக்கிறது . ' கொல கொலயா முந்திரிக்கா ' என்று பாடிக் கொண்டே பால்ய பருவத்தில் விளையாடும்போது சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து வட்டமாக அமர ஒருவர் மட்டும் சுற்றிச் சுற்றி ஓடி வந்து யாராவது ஒருவரிடம் துணி ஒன்றைப் போட்டுவிட்டு ஓட வேண்டும் . துணியை எவன் பெற்றானோ அவன் எடுத்துக் கொண்டு ஓடுபவனை விரட்டிப் பிடித்தால் அவன் அவுட் ! விரட்டுபவனின் காலி இடத்தில் வந்து அமர்ந்துவிட்டால் அவுட் இல்லை . அப்போதெல்லாம் சிறுமிகளும் எங்களோடு சேர்ந்து விளையாடுவார்கள் . கொஞ்ச காலம்தான் . பிறகு காணாமல் போய் விடுவார்கள் . என்ன ஆச்சு என்று புரியாமல் அவர்கள் வீடு தேடிச் சென்று அழைப்போம் . அம்மாக்கள் எங்களை விரட்டி விடுவார்கள். என் மகளுக்கும் அதே கதி . மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே பையன்களோடு சேர்ந்து விளையாடாதே என்று என் மனைவி அவளை அறிவுறுத்துவதைப் பார்த்தேன் . என்னுடைய பரிந்துரை எதுவும் எடுபடவில்லை . என் மகள் அவள் வழிக்கு வந்துவிட்டாள். நம் சமூகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது! ஹூ...ம்!
இளையராஜா பாட்டு வெளி வரும் முன்பே அதே பாட்டைப் பாடி விளையாடி இருக்கிறோம் . ஆனால் இளையராஜா இசைத்தது போல இல்லாமல் ஏறக்குறைய அதே ராகத்தோடு இருந்த மாதிரி ஞாபகம் இருக்கிறது. மக்களிடமிருந்து கேட்ட மக்களால் பாடப்பட்ட பாட்டுக்களைதானே ஆரம்பத்தில் இளையராஜா இசைத்தார். அதுவும் சொற்ப படங்களில் மட்டுமே! அதனால்தான் சில பத்திரிக்கைகள் அவரை மோசமாக விமர்சனம் செய்தன . குத்துப் பாட்டுக்கும் கிராமியப் பாட்டுக்கும் மட்டுமே அவர் லாயக்கு என கேலி பேசின. காலம் செல்லச் செல்ல எடுத்தாரே ஒரு விஸ்வரூபம் ! இன்றுவரை அது எழும்பித்தான் நிற்கிறது .
நான்கு வருடங்கள் கழித்தே ' நான் பேச வந்தேன் ' என்ற பாட்டை விரும்பிக் கேட்டேன் . அற்புதமான பாடல் . மனதை மயக்கும் மாய வித்தை பாடலில் ஒளிந்திருந்ததை உணர்ந்தேன் . சிலோன் வானொலி இல்லாமல் போயிருந்தால் இந்த இசை தொலைந்து போயிருக்குமோ என்னவோ!? இல்லையில்லை . விளக்கை குடத்திற்குள் மறைத்து குப்புறக் கவிழ்த்தாலும் ஒளிக் கதிர் விளிம்பின் வழியே கசிந்து வளைந்து வெளியே வரத்தான் செய்யும் . சிலோன் வானொலி இல்லை என்ற நிலை வந்திருந்தால் வேறு வழிகள் பிறந்திருக்கலாம் . ஆனால் வேறு வழியே இல்லை. நம்ம ஊரு வானொலிகள் பாட்டு போடும் நேரம் மிகக் குறைவு . ஒரு நாளில் அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அவ்வளவுதான் . அந்த நேரத்தில் நாம் வானொலி அருகே இருந்தால்தான் போச்சு . ஆனால் சிலோன் வானொலி நம்மை ஏமாற்றவில்லை . எப்போதும் பாட்டுக்கள் உள்ள வேறு வேறு நிகழ்ச்சிகள் ஒலி பரப்பிக் கொண்டே இருப்பார்கள். வானொலியோடு சேர்ந்து பாடிக்கொண்டே திரிவோமே! ஐய்யகோ நமது பிள்ளைகள் இழந்துவிட்டார்களே! காலம் பதில் சொல்லும் . இலங்கை திரும்ப இறைஞ்சிக் கொண்டிருக்கும் ஏங்கிக் கொண்டிருக்கும் அந்தத் தமிழர்களுக்காக நாமும் இறைவனிடம் இறைஞ்சுவோம் . மீண்டும் அந்த " வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டி " என்றொலிக்கும் கவர்ச்சிக் குரலை மீண்டும் கேட்போம் .
FM ரேடியோ வடிவில் மீண்டும் உயிர் பெறட்டும் .
நான் பேச வந்தேன் பாடல் எப்படி இசைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு நண்பர் அழகாகவும் அனுபவப்பூர்வமாகவும் விளக்கிக் கொடுத்திருக்கிறார் . கீழே உள்ள link பார்த்துவிட்டுத் தொடருங்கள் .
இன்னொருவரின் பார்வையில் இளையராஜாவின் பாடல் எவ்வளவு அழகாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது என்பதை பாருங்கள். இவரைப் போல பல லட்சம் ரசிகர்கள் இன்னும் இளையராஜாவின் பாடல்களை உருகி உருகி ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம் .
உறவாடும் நெஞ்சம் படப் பாடல் அப்போது என் செவிகளில் விழவில்லை . 'ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் ' என்றொலிக்கும் பாடலை அப்போது சரியாக கேட்டிருக்காவிட்டாலும் பின்னொரு நாள் வானொலியில் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன் . எம்.எஸ்.வி பாடல்களின் சாயல் அதில் தெரியும் . பின்னணி இசையில் வித்தியாசம் கண்டு பிடித்து விடலாம் . என்ன இருந்தாலும் அவரிடமிருந்து வந்தவர்தானே ! நல்ல ஒரு மெலடி .
1977 வது வருடத்திற்குள் வந்த இளையராஜாவின் இசை சிறிது சிறிதாக சிகரம் தொடும் முயற்சிக்குப் போய்க் கொண்டிருந்ததை நான் உணர்ந்திருக்காவிட்டாலும் காலம் பலருக்கு உணர்த்தியது . அவர் இசை அமைக்கும் படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது.
-- ஆளுக்கொரு ஆசை
-- அவர் எனக்கே சொந்தம்
-- புவனா ஒரு கேள்விக் குறி
-- தீபம்
-- துர்கா தேவி
-- காயத்ரி
-- கவிக் குயில்
-- பெண் ஜென்மம்
-- சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு
-- துணையிருப்பாள் மீனாட்சி
-- பதினாறு வயதினிலே
இத்தனைப் படங்கள் வந்தாலும் என் அம்மாவோடு சேர்ந்து நான் பார்த்த படங்கள் இரண்டு . புவனா ஒரு கேள்விக் குறி , பதினாறு வயதினிலே . இந்த இரண்டு படத்தையும் தியேட்டரில் பார்த்தபோது படத்தை விட பாட்டுக்கள் என்னை அதிகமாய் ஈர்த்தன . 'ராஜா என்பார் மந்திரி என்பார்' என்ற பாடலில் உள்ள சோகம் சுகமானதாய் முதன் முறையாக எனக்குத் தோன்றியது . ஏனென்றால் அதுவரை சோகப் பாடல்கள் பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்தேன் . எம். எஸ்.வி. இசையமைத்த சோகப் பாடல்களும் ஆரம்பத்தில் பிடிக்காமல்தான் இருந்தது . போக போகத்தான் அவையெல்லாம் சுகமான ராகங்கள் என்ற உண்மை புலப்பட்டது. போலவே இளையராஜாவின் சோகப் பாடல்கள் வரிசையில் அந்தப் பாடலை இன்னும் மறக்க முடியவில்லை. அம்மாவோடு சேர்ந்து பார்த்த பாடல் காட்சியும் இசையும் இன்னும் என் நெஞ்சில் அறைவது போன்ற உணர்வு இப்போது நினைத்தாலும் இருக்கும். அம்மா மறைந்துவிட்டாலும் அந்த கணங்கள் இன்னும் மறையவில்லை. அந்தப் பாடலும் மறையவில்லை. எப்போதெல்லாம் நான் அதைக் கேட்கும்படி ஒலிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் என் அம்மாவும் உயிர்த்தெழுகிறார்கள்.
அதே படத்தில் ' விழியிலே மலர்ந்தது ' என்ற பாடலும் அற்புதமான ஒன்று. அந்த சமயத்தில் பாடல் மட்டுமே மனதில் நிரம்பும் . பின்னணி இசை பற்றி யோசிப்பதில்லை. வருடங்கள் கடந்து மீண்டும் அந்தப் பாட்டைக் கேட்டபோதும் பாடலோடு இழையோடி வரும் வயலின் இசையின் செழுமையை கூர்ந்து கவனித்தபோதும் இளையராஜா என் மனதில் உயர்ந்து நின்றதை சொல்லாமல் எப்படிக் கடப்பது!? எஸ்.பி.பி யின் கொஞ்சலான குரலில் மீண்டும் கெஞ்ச வைக்கும் பாடல் அல்லவா! எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.
சும்மா ... பாடிப் பார்த்தேன் . பாட்டு வரிகளில் எல்லாம் அந்த வயதில் ஞானம் ஏதுமில்லை. அழகான ராகத்தில் இசைக்கப்பட்ட இளையராஜாவின் பாடல்கள் மட்டுமல்ல மற்றவர் பாடல்களும் கேட்க பிடித்தது. இளையராஜா பாட்டுக்கள் கூடுதலாக கேட்கப் பிடித்தது. ஆனால் நான் இன்னும் எம்.எஸ்.வி யின் ரசிகனாகத்தான் இருந்தேன் . அவரை விட்டுவிட மனசு தயாராகவில்லை .
அதே படத்தில் ' பூந்தென்றலே ' என்ற அழகான இன்னொரு பாடலும் உண்டு . அந்த நேரத்தில் மனதில் பதியவில்லை . எதிர்காலத்தில்
கேட்டு ரசித்தேன் .
காலம் அப்படியே ஓடிக் கொண்டிருந்த காலத்தில்தான் ' பதினாறு வயதினிலே ' படம் வந்தது. பல பாடல்கள் இருந்தாலும் படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே 'செந்தூரப் பூவே ' என்ற பாடல் என்னை அதிகம் பிரமிக்க வைத்தது . என்ன ஒரு அற்புதமான பாடல் ! கேட்ட மாத்திரத்தில் மலைத்துப் போனேன் . இசை மனிதனுக்குள் என்ன செய்துவிட முடியும் என்ற ஞானமெல்லாம் இல்லாத வயதில் ஏதோ எனக்குள் செய்ததை வார்த்தைகளால் வடிக்க முடியவில்லை . பித்துப் பிடிக்க வைத்த பாடல் . இப்போது அந்தப் பாட்டை நான் கேட்டாலும் அந்தப் பிராயத்து நினைவுகளும் கனவுகளும் கிராமத்துப் பொழுதுகளும் கடகடவென மனதுக்குள் கடந்து போகும். ஸ்ரீதேவி மட்டுமல்ல நானும் ஊஞ்சலாடுவேன் . அருமையான composition . ஆனந்த மயமான ஒரு பாடல்...சுகந்தமணம் கமழும் சோலைக்குள் புகுந்த மாதிரி நம்மை தாக்கும் ஒரு பாடல். அந்தச் சிறுவயதிலும் சில ஹார்மோன்களை விழிக்க வைத்த பாடல் . அந்தப் பாடலுக்காக ஜானகி அவர்கள் தேசிய விருது பெற்றார்கள் என்ற செய்தி தாமதமாக தெரிந்தது. இளையராஜா மனசுக்குள் ஏறி அமர்ந்தார் . ஆனால் எம்.எஸ். வி இன்னும் வெளியேறவில்லை . நான் வெளியேற்றவுமில்லை .
மற்ற பாடல்கள் எல்லாம் கிராமத்து வாசனை கொண்ட வித்தியாசமான பாடல்களாக இருந்தன. ' சோளம் வெதைக்கயிலே ' என்ற இளையராஜா பாடிய முதல் பாடல் ஆரம்பத்தில் மலேசியா வாசுதேவன் குரல் போலவே ஒலித்தது. கூர்ந்து கேட்டபோது வித்தியாசம் தெரிந்தது . எஸ். பி.பி அவர்கள் பாடவேண்டிய பாடல்கள் எல்லாம் மலேசியா வாசுதேவனுக்கு வாய்ப்பாக அமைந்தது என்பதை பின்னர் தெரிந்து கொண்டேன் . இளையராஜாவின் குரல் ஆரம்பத்தில் பிடிக்கவில்லை . நண்பர்களோடு சேர்ந்து அதை விமர்சனம் செய்தேன் . போகப் போகத்தான் அவர் குரலிலும் ஈர்ப்பு ஏற்பட்டது . சில பாடல்கள் அவர் குரலுக்கு மட்டுமே பொருந்தும் . படத்தின் அந்த டைட்டில் பாடல் கிராமத்துப் பின்னணியை அப்பட்டமாக காட்டியிருக்கும் . இப்போது ஒலித்தாலும் நான் சுற்றித் திரிந்த கிராமம் என் கண்ணுக்குள் வந்து நிற்கிறது . படம் தமிழகமெங்கும் நூறு நாட்களைத் தாண்டியும் ஓடிக் கொண்டிருந்தது . பாட்டுக்கள் எல்லாம் படு ஹிட் !
' செவ்வந்தி பூ முடித்த', 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு' என்ற மற்ற இரண்டு பாடல்களும் பசங்களோடு சேர்ந்து ஆட்டம் போட வைத்த பாட்டுக்கள் . இரண்டாவது பாட்டின் கடைசியில் கழுதையை கத்த விட்டு முடித்திருப்பார்கள் . அந்த நேரத்தில் சிலர் அதை குறையாக கூறினார்கள் . ஆனால் எனக்கு ஆச்சரியம். ' நீ பாடினால் கழுதை கத்தும் ' என்று பொதுவாக கிண்டல் செய்து பேசுவதை பாட்டிலேயே இளையராஜா கொண்டு வந்து விட்டாரே ! கழுதையின் சப்தம் மட்டுமா ...இயற்கையின் ஒலி , குயில்களின் கூவல் , நீரோடும் சலசலப்பு , காற்றின் பேரோசை , அலைகளின் பேரிரைச்சல் , தவளையின் கத்தல் , குருவிகளின் கொஞ்சல் , குலவையிடும் பெண்கள் என்று இன்னும் நான் சொல்ல மறந்த வித்தியாசமான ஒலிகளையெல்லாம் இசையோடு இசையாக பாட்டோடு பாட்டாக கொடுத்தவர்தானே இளையராஜா! இதையெல்லாம் புகுத்தியதால் அவர் இசை என்றுமே தரமிழந்து போனதில்லை . புதுமை இசை நாயகனாக உருமாறினார். கதைப்பின்னணிக்காக கழுதையை கத்தவைத்து பாட்டமைத்ததை குறையாகக் காட்டி பதிவு எழுதுபவர்களும் இருக்கிறார்கள் . ஆனால் அந்தப் பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதே ! மறக்க முடியுமா ...இல்லை ..மறைக்க முடியுமா!? கழுதையின் சப்தத்தையும் இசையாக மாற்ற இளையராஜவிற்கு தெரிந்திருக்கிறதே என்ற மாற்றுச் சிந்தனைக்கு பலரைப் போல நானும் மாறினேன் .
பதினாறு வயதினிலே படத்தின் ஒலிச்சித்திரத்தை எல்லா இடங்களிலும் ஒலிக்கச் செய்தார்கள். படம் நன்றாக ஓடினால் ஒலிச்சித்திரமும் உருவாகிவிடும் . வசனங்கள் கேட்டுக் கேட்டு அலுத்துப் போயின. பாடல்கள் அலுக்கவேயில்லை. இன்றும் பசுமையாகத்தான் உள்ளன. படத்தில் வரும் பின்னணி இசையை ஒலிச்சித்திரத்தால் கூர்ந்து கேட்கும் சூழல் அப்போது உருவானது . ஷெனாய் ஒலியை படம் முழுக்க நிறைத்திருப்பார். இப்போது அந்தப் படத்தை நினைத்தாலும் நெஞ்சுக்குள் நீங்காதஅந்த ஷெனாய்ஒலிகேட்டுக்கொண்டேஇருக்கிறது. இளையராஜாவின் பின்னணி இசை மீது ஈர்ப்பு அதிகமானது. சோக காட்சிகள் காட்டப்படும்போதேல்லாம் ஷெனாய் ஒலி இழையோடுவதை படம் முழுவதும் கேட்டு ரசிக்கலாம் . பாரதிராஜா படம் என்றாலே இளையராஜா ரசித்து ரசித்து இசைப்பதை அவருடைய எல்லாப் படங்களிலும் பார்க்கலாம் .
..........................தொடர்வேன்...............................................
//'ராஜா என்பார் மந்திரி என்பார்' என்ற பாடலில் உள்ள சோகம் சுகமானதாய் // ... இந்தப் பத்தி மிக மிக அழகு.
ReplyDeleteஒரு சின்ன வேண்டுகோள். நான் ஒரு சங்கீத ஞான சூன்யம். உங்களைப் போன்றவர்கள் எழுதுவதை இதனால் அதிகம் ரசிக்கிறேன். ஒரே பதிவில் பல பாடல்களை எழுதுவதை விட (பரதேசி எழுதுவது போல்) ஒவ்வொரு பாடல், அதனைஅ ப்போதே கேட்க அங்கேயே ஒரு தொடுப்பு என்று கொடுத்தால் பாட்டையும் அதற்கான உங்கள் வார்த்தைகளையும் ஒருங்கே கேட்டுக்கொள்வோமே. முடியுமா?
தருமி சார்
ReplyDeleteவணக்கம் . முதல் வருகை உங்களுடையது என்பது சந்தோசம் . நான் ஒரே பதிவில் எல்லா பாடல்களையும் சொல்லுவதில்லை . இரண்டு அல்லது மூன்று படங்களின் பாடல்களைச் சொல்லுவேன் . ஒரே பாட்டிற்கான விளக்கத்தைதான் 'பரதேசி ' அவர்கள் என்னை விட அழகாக சொல்லிக் கொண்டே வருகிறாரே . தவிர பாட்டிற்கான லிங்க்கும் கொடுக்கிறார் . நான் என்னுடைய பாணியிலேயே போய்விடலாம் என நினைக்கிறேன் . பாட்டு மட்டுமல்ல இன்னும் பல செய்திகளும் வரும் . இருந்த போதிலும் உங்கள் ஆலோசனைக்கு நன்றி. நீங்கள் சொன்னதையும் முயற்சி செய்கிறேன்.
நீங்கள் உங்களை " நான் ஒரு சங்கீத ஞான சூன்யம்" என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் . எல்லாவற்றையும் ரசிப்பவர் சங்கீதத்தையா ரசிக்க மாட்டீர்கள் .
ஹலோ சால்ஸ்,
ReplyDeleteசற்று நீளமான நல்ல கட்டுரை. முன் இரண்டு பதிவுகளில் ஒரு நேர்கோடு இருந்தது. இதில் பல விஷயங்கள் அடுக்கடுக்காக வருவதால் எதற்கு என்னைத்தை எழுதுவது என்று ஒரு சிறிய குழப்பம் வருகிறது. இப்படி எழுதுவதும் ஒரு திறமைதான். வாழ்த்துக்கள்.
விழியிலே மலர்ந்த்து, ராஜா என்பார் மந்திரி என்பார் இரண்டும் என் ரசிப்பிற்குரிய பாடல்கள். உங்கள் அம்மா குறித்த பாசம் மிகுந்த வார்த்தைகள் அபாரம்.
பதினாறு வயதினிலே படத்தின் செந்தூரப்பூவே பாடல் நல்ல பாடல்தான். ஆனால் அப்போது அது என்னை கொஞ்சமும் கவரவில்லை. மாறாக ஆட்டுக்குட்டி (கழுதை கத்தும் கானம்!) பாடலை ரசித்தேன். அது ஒரு விடலை ரசனை.
--இரண்டாவது பாட்டின் கடைசியில் கழுதையை கத்த விட்டு முடித்திருப்பார்கள் . அந்த நேரத்தில் சிலர் அதை குறையாக கூறினார்கள் . ஆனால் எனக்கு ஆச்சரியம். ' நீ பாடினால் கழுதை கத்தும் ' என்று பொதுவாக கிண்டல் செய்து பேசுவதை பாட்டிலேயே இளையராஜா கொண்டு வந்து விட்டாரே ! -----
கழுதையின் கானத்தை இப்படி ஏகத்தும் புகழவேண்டிய கட்டாயத்தில் நீங்கள் மாட்டிக்கொண்டிருப்பதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். பாவம். உங்களின் தனி மனித ஆராதனை உங்களை எப்படியெல்லாம் பாடாய் படுத்துகிறது! கழுதைப் பாடலை இத்தனை தீவிரமாக justify செய்கிறீர்கள். செய்துவிட்டுப் போங்கள்.
---கழுதையின் சப்தம் மட்டுமா ...இயற்கையின் ஒலி , குயில்களின் கூவல் , நீரோடும் சலசலப்பு , காற்றின் பேரோசை , அலைகளின் பேரிரைச்சல் , தவளையின் கத்தல் , குருவிகளின் கொஞ்சல் , குலவையிடும் பெண்கள் என்று இன்னும் நான் சொல்ல மறந்த வித்தியாசமான ஒலிகளையெல்லாம் இசையோடு இசையாக பாட்டோடு பாட்டாக கொடுத்தவர்தானே இளையராஜா! இதையெல்லாம் புகுத்தியதால் அவர் இசை என்றுமே தரமிழந்து போனதில்லை . புதுமை இசை நாயகனாக உருமாறினார். ----
இளையராஜாதான் விதவிதமான மனித ஒலிகளை வைத்து "அற்புதமான" கானங்களை உருவாக்கியவராயிற்றே! துணிவிருந்தால் உங்கள் வீட்டின் ஹாலில் அவ்வகையான பாடல்களை உங்கள் குழந்தைகள் கேட்க ரசித்துப் பாருங்கள். அப்போது தெரியும் நான் குறிப்பிடும் தரம் பற்றிய உண்மை.
அதுதான் நன்றாகத் தெரிகிறதே உங்களின் ராஜா ஆர்ப்பரிப்பு. பிறகு அது ஏன் தேவையில்லாமல் எம் எஸ் வி யை நான் இன்னும் வெளியேற்றவில்லை அவரை இன்னும் ரசித்தேன் போன்ற பொருத்தமில்லாத ஜோடனை! நானாவது இளையராஜாவிலிருந்து எம் எஸ் விக்கு பரிணாமம் அடைந்தேன். நீங்களோ எம் எஸ் வியிலிருந்து இளையராஜா என்று... பரிதாபம்! என்ன இசை ரசனையோ!
காரிகன்
ReplyDeleteஹா ..ஹா.. ஹா.. என் ரசனை உங்களுக்கு மொக்கை . உங்கள் ரசனை எனக்கு மொக்கை . ஆனால் இருவருக்கும் பொதுவில் ஒன்று உண்டு . இருவரும் இசையை ரசிக்கிறோம் . இளையராஜா என்று நான் சொல்ல வரும்போதெல்லாம் உங்களுக்கு எரிகிறது. காதில் புகைகிறது . ஆனால் நீங்கள் யாரைச் சொன்னாலும் எனக்கு எரிவதில்லை . ஏனென்றால் நான் அளவோடு ரசிப்பவன் - மற்ற இசை அமைப்பாளர்களை ! அளவின்றி ரசிப்பவன் - இளையராஜாவை! நீங்கள் தலைகீழ் என்று நினைக்கிறேன் .
நிலா காயுது என்ற இச்சை ஒலி பாட்டு ஒன்றை வைத்துக் கொண்டு எத்தனை நாள்தான் பேசுவீர்கள்? குழந்தைகளோடு சேர்ந்து கேட்க ஒரு பாட்டுதான் இருக்கிறதா ? ஓராயிரம் இளையராஜா பாட்டு இருக்கிறது அய்யா! என் குழந்தைகள் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துப் பார்த்து இளையராஜா பாடல்களின் இசை அமுதை நயத்தை புரிந்து கொண்டார்கள் . அவர் பாடல்களின் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது . மற்றபடி நான் வலியுறுத்துவதே கிடையாது.
அனிருத் பட பாட்டில் முக்கும் பாடல்கள்தான் அதிகம் . பிள்ளைகள் கேட்டு மகிழ்வது எதனால் என்று சொல்ல முடியுமா? அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள் . நீங்கள்தான் நெளிகிறீர்கள். எல்லா இசை அமைப்பாளர்களும் முக்கல்முனகல் பாட்டுக்கள் போட்டிருக்கிறார்கள் . அதெல்லாம் காதுக்கு எட்டாதே .
///அதுதான் நன்றாகத் தெரிகிறதே உங்களின் ராஜா ஆர்ப்பரிப்பு. பிறகு அது ஏன் தேவையில்லாமல் எம் எஸ் வி யை நான் இன்னும் வெளியேற்றவில்லை அவரை இன்னும் ரசித்தேன் போன்ற பொருத்தமில்லாத ஜோடனை!///
நான் எம்.எஸ்.வி யையும் ரசித்தவனே! அத்தனை எளிதாக அவரை தூக்கி எறிந்துவிட முடியுமா என்ன!? இளையராஜாவே எம்.எஸ்.வி ரசிகர்தான் .
///நானாவது இளையராஜாவிலிருந்து எம் எஸ் விக்கு பரிணாமம் அடைந்தேன். நீங்களோ எம் எஸ் வியிலிருந்து இளையராஜா என்று... பரிதாபம்! என்ன இசை ரசனையோ///
நீங்கள் பச்சோந்தி .நிறம் மாறிவிட்டீர்கள் . நான் நிறம் மாறாத பூ. எல்லோருக்கும் மணப்பேன்.
சோக பாடல்கள் மட்டுமல்ல.சுகமான மனம் வருடும் பாடல்களை அள்ளி வழங்குவதில் இசைஞானிக்கு இணையேது? காரிகன் போன்றவர்களுக்கு இளையராஜாவை மட்டம் தட்டாவிட்டால் தூக்கம் வராது போலும் .கலைஞனை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் வசை பாடாதிருத்தல் நலம் .அமுதசுரபியென அள்ளி வழங்கும் இசைஞானியின் இசைபிரளயத்தை தங்கள் பதிவில்தொடருங்கள்.
ReplyDeleteவாங்க அருள் ஜீவா
Deleteகாரிகன் நல்ல ரசிகர்தான் . இளையராஜா தவிர எல்லோரையும் ரசிப்பவர் . அவருக்கு கருத்து சுதந்திரம் இருக்கிறது. அவர் சொல்ல வருவதை சொல்லட்டும் . உங்களைப் போன்றோர் பதில் சொல்லுங்கள் . நான் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் போரடிக்கும் . மற்றவரின் இசை பாடுவதை விட இளையராஜா வசை பாடுவதே அவருக்கு பொழுதுபோக்கு என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் சரிதான். இசைஞானி இசை இன்பம் தொடரும் . நீங்களும் தொடருங்கள்.
//எல்லாவற்றையும் ரசிப்பவர் சங்கீதத்தையா ரசிக்க மாட்டீர்கள் .//
ReplyDeleteஐயய்யோ ... அது என்ன “எல்லாவற்றையும் ரசிப்பவர்”...?
:)
நீங்க ரொம்ப குறும்பு சார் ரொம்ப யோசிக்கறீங்க .. நல்லவிதமான எல்லாவற்றையும் என்று எடுத்துக் கொள்ளுங்கள்
Deleteநண்பர் சால்ஸ்,
ReplyDeleteகருத்துடன் மோதுவதே சிறந்தது ஆட்களோடு அல்ல. சரி சில விஷயங்களை அலசுவோம்.
நான் சொன்னது பரிணாமம்.. அதாவது அடுத்த நிலையை நோக்கி நகரும் வளர்ச்சி. அதை பச்சோந்தித்தனம் என்று நீங்கள் குறிப்பிட்டால் எம் எஸ் வி யிலிருந்து இளையராஜாவுக்கு நீங்கள் reverse evolution அடைந்ததை என்னவென்று சொல்வது? நீங்களே அதற்கும் ஒரு பெயரை கண்டுபிடிக்கவும். நீங்கள் நிறம் மாறாத பூ என்று உங்களையே பாராட்டிக் கொள்கிறீர்கள். நல்லது. ஆனால் வாசமில்லா பூ வாக மாறிவிட்டீர்களே... (நாறி விட்ட பூ என்றுதான் சொல்ல நினைத்தேன். ஆனால் நாகரீகம் கருதி அதை வெளியிடவில்லை.!) (அடப்பாவி!)
நான் நிலா காயுது என்ற சாக்கடைப் பாடலை குறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை. அது ஒரு ராஜ முத்திரை கொண்ட ராஜாவின் புதிய பாணியை செதுக்கிய "சிறப்பான"பாடல். இது போன்று அநியாயத்துக்கு கேட்டாலே வாந்தி வரும் பாடல்கள் ஏராளமாக இளையராஜாவின் இசையில் இருக்கின்றன. நீங்களாகவே ஏன் மாட்டிக்கொள்கிறீர்கள்? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு இவர் குழந்தைகள் இளையராஜா ரசிகர்கள் ஆகிவிட்டார்களாம்... நல்ல கதைதான் போங்க... இதுபோல கண்றாவி நிகழ்சிகளைப் பார்த்தெல்லாம் இசை ரசனையை வளர்த்துக்கொள்வது எப்படி உண்மையான விருப்பமாக இருக்கும்?
உங்களின் அபத்தமே மூச்சு முட்டுகிறது என்றால் அருள் ஜீவாவின் கருத்துக்கள் ஆனந்த விகடன் அட்டைப்பட ஜோக் போல இருக்கிறன.ஆனால் ஒன்று ..உங்களுக்கு நல்ல பார்ட்னர் கிடைத்திருக்கிறார். ஒரே அலைவரிசை. ஒரே ரசனை. ஒரே நக்கல்... தொடருங்கள்..
ஆனந்த விகடனின் அட்டைப்படஜோக்குகள் நினைவுக்கு வருவதாக சொல்லும் காரிகன் அவர்களுக்கு இளையராஜாவின் அநேக பாடல்களைக் கேட்டாலே வாந்தி வருகிறதாம் ஏனைய இசையமைப்பாளர்களின் இசையில். இத்தகைய பாடல்களைக் கேட்க வில்லை போலும் .இது சமீபத்தில் வந்த திரைப்படக்காட்ச்சியை ஒத்திருக்கிறது .(பார்த்தாலும் பார்க்கலேன்லாடா சொல்லுவ)வானொலியில் பாடல்கள் கேட்டு இசை வளர்க்கலாமாம் .சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கண்டு இசை வளர்க்கக்கூடாதாம் .இசை வளர்க்கும்வழி குறித்த தகவலைஅள்ளிவழங்குங்கள் .
ReplyDeleteஎதோ புரியறாப்ல இருக்கு. ஆனா முழுசா புரியல. கொஞ்சம் தெளிவாக எழுதவும்
Deleteகாரிகன்
ReplyDeleteவாந்தி வந்தால் எடுத்துவிட்டு வந்து பேசவும் . (பாவம் உடம்புக்கு முடியல போலிருக்கு!)
/// நான் சொன்னது பரிணாமம்.. அதாவது அடுத்த நிலையை நோக்கி நகரும் வளர்ச்சி. அதை பச்சோந்தித்தனம் என்று நீங்கள் குறிப்பிட்டால் எம் எஸ் வி யிலிருந்து இளையராஜாவுக்கு நீங்கள் reverse evolution அடைந்ததை என்னவென்று சொல்வது? ///
எம்.எஸ். வி. க்குப் பிறகு இளையராஜா என்பதுதான் பரிணாம வளர்ச்சி. நீங்கள்தான் தலைகீழாய் போயிருக்கிறீர்கள். reverse order .
/// நான் நிலா காயுது என்ற சாக்கடைப் பாடலை குறிப்பிட்டு எதையும் சொல்லவில்லை. அது ஒரு ராஜ முத்திரை கொண்ட ராஜாவின் புதிய பாணியை செதுக்கிய "சிறப்பான"பாடல். இது போன்று அநியாயத்துக்கு கேட்டாலே வாந்தி வரும் பாடல்கள் ஏராளமாக இளையராஜாவின் இசையில் இருக்கின்றன. நீங்களாகவே ஏன் மாட்டிக்கொள்கிறீர்கள்? ///
'மெதுவா மெதுவா தொடலாமா ...உன் மேனியில் கை விரல் படலாமா ... 'என்று KVM பாடல் கூடத்தான் வாந்தி வர மாதிரி பாட்டு என்று உங்களைப் போல் சின்னப் புள்ளத்தனமா சொல்ல மாட்டேன் . ஆனாலும் கொஞ்சம் விரசமான பாட்டுதானே ! விரசம் உரசும் சரசப் பாடல்கள் எல்லோரும் போட்டதுதானே ! இளையராஜாவை மட்டும் குறை சொல்லக் கூடாது .
' ஹோ ...ய் .....ஹோய் ஹோய் ... இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத்தானா ' என்று ஒரு MGR பாட்டு கேட்டிருக்கிறீர்களா? அதுவும் அந்த ரகம்தான்! ஆனா வாந்தி வராது . அருமையான மெலடி .
///சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களைக் கேட்டு இவர் குழந்தைகள் இளையராஜா ரசிகர்கள் ஆகிவிட்டார்களாம்... நல்ல கதைதான் போங்க... இதுபோல கண்றாவி நிகழ்சிகளைப் பார்த்தெல்லாம் இசை ரசனையை வளர்த்துக்கொள்வது எப்படி உண்மையான விருப்பமாக இருக்கும்? ///
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கன்றாவியா ? கேடுகெட்ட சீரியல்களுக்கு அந்த நிகழ்ச்சி ஆயிரம் மடங்கு பெரியது . குழந்தைகள் பார்த்துப் பார்த்து இசை அறிவும் வளர்க்கும் . தானும் சாதிக்கணும் என்ற தாகத்தையும் வளர்த்துக் கொள்ளும் . உங்க சிந்தனைதான் கண்றாவி . அந்த நிகழ்ச்சியில் பழைய பாடல்கள் சுற்றும் வரும் என்பது தெரியுமா?
அது சரி . உங்கள் குழந்தைகள் என்ன நிகழ்ச்சிகள் பார்க்கிறார்கள் ?
-----எம்.எஸ். வி. க்குப் பிறகு இளையராஜா என்பதுதான் பரிணாம வளர்ச்சி. நீங்கள்தான் தலைகீழாய் போயிருக்கிறீர்கள். reverse order . ------
ReplyDeleteசால்ஸ்,
அப்படியானால் இளையராஜாவுக்குப் பிறகு வந்த ரஹ்மான் பரிணாமத்தின் அடுத்த கட்டம் என்றாகிவிடுமா? அதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
நான் சொன்னது evolution. நீங்கள் சொல்லியிருப்பது chronology.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியைப் பார்த்து இசைஞானம் வருகிறதாம்! நான் பாடல்களை அதன் அழகு கெடாத வகையில் ஸ்டூடியோ ரெகார்டிங் என்னும் ஒரிஜினலை கேட்டுத்தான் ரசிக்கிறேன். எவனோ பாடுவது, எதையோ பாடுவதை போன்ற மேடைக் கூத்துகளை வைத்து நான் ஒரு பாடலின் தரத்தை தீர்மானிப்பது கிடையாது.
காரிகன்
ReplyDeleteEvolution என்பது ஒன்றிலிருந்து ஒன்று வருவதல்ல . புதிதாக உருவாவது . Charles Darwin சொன்ன 'ஒன்றிலிருந்து ஒன்று உருவாகிறது ' என்ற கருத்து பொய்த்துப் போனது .
இளையராஜா இசை உருவாக்கம் புதிதானதாய் இருந்த காரணத்தினால்தான் மக்கள் கொண்டாடினார்கள் . இது ரகுமானுக்கும் பொருந்தக் கூடியதுதான் !
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குழந்தைகள் அழகாகத்தான் பாடுகின்றனர். பாடலுக்குப் பிறகு நடுவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அந்த பாட்டுக்கள் உருவான விதம் , சூழல் , சுவையான இடங்கள் , மெட்டமைத்தவரின் திறமை, பாடியவரின் பெருமை பற்றியெல்லாம் சொல்லும்போது பாட்டுக்களின் மீதும் பாடல் இசை அமைத்தவர் மீதும் நாம் கொண்டிருந்த பார்வையில் ஒரு மாற்றம் ஏற்படும் . Record செய்யப்பட்ட பாடல்களை மட்டும் கேட்டுவிட்டு நெகிழ்ந்து போவது மகிழ்ச்சி என்றால் மற்றவர் பாடி அந்தப் பாடலின் மகிமை அறிந்து கொள்வது இரட்டிப்பு மகிழ்ச்சி. பாடலின் தரத்தை இப்படியும் தீர்மானிக்க இந்த நிகழ்ச்சிகள் உதவுகின்றன .
சார்லஸ்,
ReplyDeleteநல்லாத்தான் எழுதுருறீங்க. ஆனா நடுவுல நடுவுல வேற எங்கேயோ போறீங்க. உதாரணம் அந்த சிலோன் ரேடியோ.
வாங்க சுந்தர்
ReplyDeleteஇலங்கை திரும்பி பழைய அமைதியான வாழ்க்கை வாழ ஏங்கிக் கொண்டிருக்கும் நம் தமிழர்களின் ஏக்கம் பலித்து விடாதா மீண்டும் சிலோன் ரேடியோ துளிர்த்து விடாதா என்கின்ற நப்பாசையில் ஒரு இடைச்செருகல் செய்திருப்பேன் . பொருத்தமாக இல்லையோ ?
சிலோன் ரேடியோ இல்லாமல் போயிருந்தால் இப்படிப்பட்ட பாடல்கள் வெளிவராமல் போயிருக்குமோ என்ற எண்ணம் ஏற்படும் பட்சத்தில் இல்லையில்லை வேறு மாற்று ஒன்று உருவாகி இருக்கலாம் . ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வரவில்லை என்ற சிந்தனை ஒரு ஓடை போல ஓடியதை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறேன் . இது ஒரு நடை. அவ்வளவே!
உங்கள் பழைய அனுபவங்களைச் சொல்வதற்கு இளையராஜா பாடல்கள்தாம் கிடைத்தன என்கிற அளவில் உங்கள் கட்டுரைத் தொடரைப் புரிந்துகொள்ளலாமா?
ReplyDeleteஏனெனில் 'சுய அனுபவத்தை' வைத்து மட்டும்தான் இங்கே எல்லாரும் இளையராஜாவைப் புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய உயிரை உருக்கியது, மனதிற்குள் அப்படியே ஊடுருவி என்னைக் காணாமல் செய்தது ; போன்று கட்டுரைகள் எல்லாவற்றிலுமே ஒரு ஸ்டீரியோ டைப் வந்துவிட்டது. ' ஜானகியின் குரல் முடிந்ததும் மெதுவாகக் கிளம்பும் வயலினும் அதைத் தொடர்ந்து வரும்' என்கிற அளவில் சொல்லிவிட்டாலேயே மிகச்சிறந்த பாடல் என்ற மகுடத்தைத் தந்துவிட்டோம் என்று நினைத்துக்கொள்கிறார்கள் போல!
அவர்களும் என்னதான் செய்வார்கள்? இத்தனை நாட்களும் 'ஒரே ஒருவர் அவர் இவர்தான்' என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். பிறகு சிம்பனி- என்று இல்லாத ஒன்றுக்கான கதையை எல்லாரும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்தார்கள். இவையெல்லாம் இல்லையென்று ஆனபிறகு ஸ்டீரியோ டைப்புக்கு வந்துவிட்டார்கள். இந்த வண்டியும் எத்தனை நாட்களுக்கு ஓடுகிறது பார்க்கலாம்.
நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக எழுத முயற்சி செய்யுங்கள்.
---உங்கள் பழைய அனுபவங்களைச் சொல்வதற்கு இளையராஜா பாடல்கள்தாம் கிடைத்தன என்கிற அளவில் உங்கள் கட்டுரைத் தொடரைப் புரிந்துகொள்ளலாமா? ------
ReplyDeleteஅமுதவன் அவர்களே,
திரு சால்ஸ் எழுதும் இசை ராட்சஷன் எப்படிப் போகும் என்பதை அவருடைய முதல் பதிவிலேயே தெளிவாக காண முடிந்தது. ஒரே உணர்ச்சிப் பிழம்பாக இளையராஜாவின் பாடல்களைக் குறிப்பிட்டு நவரசங்களைக் கொட்டுகிறார் தன் எழுத்தில். நீங்கள் குறிப்பிட்டது படி இவர்களால் சுய சார்பான நாஸ்டால்ஜிக் உணர்வை கையில் பிடித்துக்கொண்டு எங்க ஆள்தான் பெரியவர் என்று மட்டுமே முழங்க முடிகிறது. பாவம். உண்மையான இசை ரசனை, சிறந்த பாடல்களை ரசிக்கும் மேன்மையான நோக்கு இதெல்லாம் இவர்களிடம் கிஞ்சித்தும் கிடையாது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. இதே அனுபவங்கள் எனக்கும் 70 களில் பிறந்த பலருக்கும் இருக்கிறது. எனக்கும் உண்டு.
----இவையெல்லாம் இல்லையென்று ஆனபிறகு ஸ்டீரியோ டைப்புக்கு வந்துவிட்டார்கள். இந்த வண்டியும் எத்தனை நாட்களுக்கு ஓடுகிறது பார்க்கலாம்.-----
அது ஓடும்- ஓடும் வரை. இளையராஜாதான் பத்தாயிரம் பாடல்களை நமக்கு அள்ளி வழங்கியிருக்கிறாரே? அத்தனையும் அமிர்தங்கள் அல்லவா? கண்டிப்பாக இசை ராட்சஷன் இருபது முப்பது என்று நீளுவார், சால்ஸ் பாணியில் சொல்வதென்றால் விஸ்வரூபம் எடுப்பார் என்று யூகிக்கலாம். ஆயிரம் இளையராஜா பதிவர்கள் வழக்கமாகச் சொல்வதையேதான் இவரும் தன் நடையில் சொல்கிறார். இதில் வித்தியாசமாக இவர் எழுதுவார் என்று நாம் எதிர்பார்ப்பது....குஸ்காவில் கோழி இறைச்சியை தேடுவது போலத்தான்.
//ஆயிரம் இளையராஜா பதிவர்கள் வழக்கமாகச் சொல்வதையேதான் இவரும் தன் நடையில் சொல்கிறார்.//
Deleteஅவருக்காக ஆயிரம் பேர் பதிவெழுதுகிறார்கள்! ஆனாலும் அவர்கள் அனைவரும் மொக்கைகள்தான். ஒருவேளை ராஜாதான் காசு கொடுத்து அவர்கள இணையத்தில் எழுத வைக்கிறாரோ என்னவோ?
அமுதவன் சார்
ReplyDeleteஇளையராஜாவை விட்டால் வேறு யாருமில்லை என்றும் அவர் ஒருவரே இசை உலகின் முடிசூடா மன்னன் என்றும் நான் சொல்ல வரவில்லை . என்னை பொறுத்தவரை அவர் இசை எனக்குள் ஏற்படுத்திய பிரமிப்பை மட்டுமே நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் . மற்றவர் இசை எனக்குப் பிடித்திருக்கலாம் . ஒரு ஒப்பீடு செய்ய விரும்பும்பட்சத்தில் இளையராஜா முன்னே நிற்கிறார் . இளையராஜா இசை விரும்புபவர்கள் என் அனுபவத்தோடு அவர்களின் அனுபவத்தையும் அசை போட்டுக்கொள்ளட்டுமே !
மிகச் சிறந்த பாடல் என்பது அவரவரின் மனநிலையைப் பொருத்தது. சிறந்த பாடலுக்கு அளவுகோல் எது என்பது யாராலும் வரையறுக்க முடியுமா என்ன!? பலரால் விரும்பப்படுபோது அது சிறந்த பாடல் என்று நாம் சொல்லிக் கொள்ளலாம். அந்த வகையில் இளையராஜா பல சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறாரே!
சிம்பனி இசைக்காக இளையராஜாவின் மெனக்கெடல் பற்றி பல திரை பிரபலங்கள் இசை பிரபலங்கள் ஏற்கனவே நிறைய சொல்லி இருக்கிறார்கள் . நீங்கள் மட்டுமே அது பொய் என்று சொல்லி வருகிறீர்கள் . இதில் எது பொய் என்று இன்னொருவர் வந்து சொல்லட்டும் . ஆராய்வோம் !
மிஸ்டர் காரிகன்
ReplyDeleteஎல்லோரும் வழக்கமாகப் பாடும் பல்லவியையே நானும் பாடுவதாக சொல்லுகிறீர்கள் . இளையராஜா பற்றி எழுதும்போது புதிது புதிதாக சொல்லிக் கொண்டிருக்க முடியாதே . உள்ளதைத்தானே சொல்ல முடியும் . இளையராஜா பற்றி எழுதுபவர்கள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள் . மற்ற இசை அமைப்பாளர்கள் பற்றி உங்களைப் போல வெகு சிலரே எழுதுகிறார்கள் . ஏன் என்பதற்கு விளக்கம் இருக்கிறதா?
ஒரே உணர்ச்சிப் பிழம்பாக இளையராஜா பற்றி நான் எழுதுவது சரி . எம்.எஸ்.வி பற்றி நீங்கள் எழுதும்போது உணர்ச்சிப் பிழம்பாக மாறாமலா எழுதுகிறீர்கள் ? பழைய இசை அமைப்பாளர்கள் அமைத்த இசை மட்டுமே மேன்மையானதா?
இருபது முப்பது பதிவு நீள்கிறதோ இல்லையோ ...நீங்கள் நீள வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறது. இளையராஜா இசை பற்றி இன்னும் எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம் . கூடவே வாங்க திருந்தினாலும் திருந்தி விடுவீர்கள்.
சார்லஸ்
ReplyDelete\\மிகச் சிறந்த பாடல் என்பது அவரவரின் மனநிலையைப் பொருத்தது. சிறந்த பாடலுக்கு அளவுகோல் எது என்பது யாராலும் வரையறுக்க முடியுமா என்ன!? பலரால் விரும்பப்படுபோது அது சிறந்த பாடல் என்று நாம் சொல்லிக் கொள்ளலாம். அந்த வகையில் இளையராஜா பல சிறந்த பாடல்களை கொடுத்திருக்கிறாரே!
சிம்பனி இசைக்காக இளையராஜாவின் மெனக்கெடல் பற்றி பல திரை பிரபலங்கள் இசை பிரபலங்கள் ஏற்கனவே நிறைய சொல்லி இருக்கிறார்கள் . நீங்கள் மட்டுமே அது பொய் என்று சொல்லி வருகிறீர்கள்\\
சார்லஸ் என்ன இப்படி அறியாதவராக இருக்கிறீர்கள். அல்லது அறிந்திருந்தும் 'ஏதோ ஒன்றுக்கு வாழ்க்கைப்பட்டுவிட்டோம். தெரிகிறது, புரிகிறது ஆனாலும் வேறு வழியில்லை. இப்படியே காலத்தைத் தள்ளிவிடுவோம்' என்ற ரீதியில் நிறையப்பேர் இருப்பார்களே,,,,,, அப்படிப்பட்ட மனநிலையா இது?
மிகச்சிறந்த பாடல் என்பது 'அவரவர் மனநிலையைப்' பொறுத்ததா? எந்த ஊர் வக்கணை இது? பொதுப்புத்தி என்பதே எந்த விஷயத்திலும் கிடையாது என்று சொல்ல வருகிறீர்களா? இப்போது பாரதி சிறந்த கவிஞன் என்று சொன்னால் அது அவரவர் மனநிலையைப் பொறுத்த விஷயமா? அந்தப் பட்டியலில்தான் இது வருமா? ஆமாம் என்று நீங்கள் பதில் சொல்வீர்களானால் இனி உங்களிடம் பேசுவதில் பயனில்லை என்று பேசாமல்தான் இருக்கவேண்டியிருக்கும். கொட்டாங்குச்சிக்குள் இருக்கும் கூட்டினை உடைத்து வெளியே வாருங்கள்.
சிம்பனி அமைத்ததற்கும், சிம்பனிக்கு 'முயற்சி செய்ததற்கும்' நிறைய வித்தியாசம் இருக்கிறது. எம்பி தேர்தலுக்கு நின்றதற்கும், வெற்றி பெற்று எம்பி ஆனதற்கும் உள்ள வித்தியாசம் போன்று.
நிறையப்பேர் 'சிம்பனி வந்துவிட்டிருக்கும்போல' என்று நினைத்துத்தான் கருத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சரி , அதுதான் இணையம் இருக்கிறதே. 'இதோ இதுதான் சிம்பனி' என்று வெளியிட்டு தூள் கிளப்ப வேண்டியதுதானே.
உங்களின் சிம்பனி வெளியீட்டிற்காக மிக ஆவலாக இருக்கிறேன்.
பாகிஸ்தான்காரன் இந்தியால குண்டு போட்டா அதுக்கு பேரு patriotism ஆனா இந்தியாக்காரன் பதிலுக்கு குண்டு போட்ட அதுக்கு பேரு terrorism. புரியுதா ?
ReplyDeleteநான் 8 பக்கத்துக்கு எழுதுன அது கட்டுரை, ஆனா நீ 3 பக்கத்துக்கு எழுதுன அது நீஈநீண்ட கட்டுரை !
நான் வசை பாடினால் அது 'மாறுபட்ட பார்வை' அனால் நீ இசையை பற்றி கூறினால் 'தனிமனித ஆராதனை'
எனக்கு கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ வரிகள் எனக்கு 'பா' கடல், அனால் நிலாகாயுது பாடல் 'சாக்கடை' .
வசை பாட நான் எடுத்துக்கொண்ட ஆயுதம் msv, உண்மையில் அவரை பிடிக்குமா எனபது சந்தேகம் !
'நாறிவிட்ட பூ'என்று எழுதினால் அதுக்க பெயர் அநாகரிகமாம், பார்த்திங்கள பார்த்திங்கள' நான் 'நாறிவிட்ட பூ' என்று நான் எழுதவே இல்லை. காரி(தூ......) gun, உமிழ்வது நா கரி கம ஆகவே
முட்டாள்கள் அவையில் அறிவாளி என்று கூறுபவன் அடிமுட்டாள் ! அனால் முட்டாள்கள் அவையில் நான் முட்டாள்தான் என்று கூறுபவன் அறிவாளி!
முட்டாள்கள் அவையில் அறிவாளி என்று கூறுபவன் அடிமுட்டாள் ! அனால் முட்டாள்கள் அவையில் நான் முட்டாள்தான் என்று கூறுபவன் அறிவாளி!
Mr. Charles, ஒருவனுடைய இசையை வசை பாட MSV யையும் A.R. REHMAN யையும் ஆயுதமாக கையில் எடுக்கும் முட்டாள்கள் கூட்டத்தில் நான் முட்டாள்தான் (MSVயும் ARRயும் வசை பாடாமல்)என்று கூறும் நீங்கள் மேற்சொன்ன வாக்கியத்தில் இரண்டாம் வகை.
அதாம்ப்ப அண்ணன் சொல்லிடருள்ள யதாவது வித்தியாசமா எழுத்துப்ப! வித்தியாசம்ன என்னன்னு தெரியுமா? அதம்ம்ப திட்டி எழுதுறது, நீ என்னன்ன இசையை பத்தி எழுதற அவருக்கு கோவம் வருதுல்ல்ல, நீ என்னன்னா தேயிஞ்சிபோன ரெகார்டு ( அதாம்ப்ப stereo type) மாதிரி நல்ல விசயங்களை திரும்ப திரும்ப எழுதுற. அண்ணன் மாதிரி புதுசா (திட்டி) எழுத்துப்ப! . அமுது மாதிரி (அமுதுன்ன இனிமையா, நீ தப்ப புரிஞ்சிக்க போற) நீ எழுத கத்துக்கப்ப, அப்புறம் அந்த அமுது(இனிமை!!!!!!!!!) அண்ணனுக்கு புரியும்.
ReplyDeleteமிஸ்டர் misterf neo
ReplyDeleteநீங்கள் உங்களின் 'அழகிய' தமிழில் எழுதின விசயங்களை வைத்துப் பார்த்ததிலும் google plus இல் உங்கள் ரசனைகளை பார்த்ததிலுமிருந்து தெரிந்தது நீங்களும் இளையராஜா ரசிகர் என்பதே ! புது வருகை . நன்றி . தொடருங்கள்.
என்னை மட்டுமல்லாமல் காரிகன் மற்றும் அமுதவன் அவர்களின் பதிவுகளையும் நீங்கள் தொடர்வீர்கள் போல தெரிகிறது . இருவமே நல்ல எழுத்தாளர்கள் . நல்ல பதிவர்கள். இசையைப் பற்றி நிறைய எழுதுவார்கள். இளையராஜா என வரும்போது மட்டும் முரண்படுவார்கள்.
/// நான் 8 பக்கத்துக்கு எழுதுன அது கட்டுரை, ஆனா நீ 3 பக்கத்துக்கு எழுதுன அது நீஈநீண்ட கட்டுரை !
நான் வசை பாடினால் அது 'மாறுபட்ட பார்வை' அனால் நீ இசையை பற்றி கூறினால் 'தனிமனித ஆராதனை'
எனக்கு கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ வரிகள் எனக்கு 'பா' கடல், அனால் நிலாகாயுது பாடல் 'சாக்கடை' .///
அதேதான் ! நீங்க சொன்ன அதே கருத்தைதான் நானும் ரொம்ப நாளாக காரிகனுக்கு சொல்லிக் கொண்டே வருகிறேன் . அவரும் நானும் இசை பற்றிய பதிவுகளை எழுதினாலும் அவர் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பார் . ஆனால் நான் சொல்வதை ஏற்க தயாராக மாட்டார் .
இசை ரசனைகளில் யாரும் முட்டாளுமில்லை அறிவாளியுமில்லை . அதனால் அந்த ஆராய்ச்சிக்குப் போகவேண்டாம் . ஏனென்றால் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சினிமாவில் வரும் எல்லா காபரே நடனப் பாடல்களையும் பதிந்து வைத்து ரசிப்பார் . நாங்கள் சிரிப்போம் திட்டுவோம் . அவர் கவலைப்பட்டதே கிடையாது . அதற்காக அவரின் ரசனையை நாம் கேவலம் என்பதா? கேவலம் என்பது நம்முடைய பார்வை . அவர் அப்படி நினைத்ததே இல்லை. இன்னொரு விஷயம் . அந்த மாதிரி பாடல்களை அதிகம் வழங்கியவர் மெல்லிசை மன்னர் . இளையராஜா காலத்தில் வெகு சில பாடல்களே வந்தன .
அட ஏம்பா நீவேற, நிலாகாயுது பாட்ட நான் தற்செயலா ரொம்ப நாளைக்கப்புறம் இன்டர்நெட் ரேடியோல கேக்க போக, அந்த இசை எனக்கு ரொம்ப பிடித்துபோக (இசை மட்டும்தப்ப வரிகள் இல்லப்ப). அந்த பாடலை கூகுளில் தேடப்போக, முதல் முறைய தமில்ல (அதாம்ப தமிழ்ல அல்லது தமிழில் - கரெக்ட்டப்ப!)டைப்பண்ண, அது என்னடான தமிழ்ல இருக்கிற சில வெப்சைட், blog லிஸ்ட காட்ட,
Deleteநான் தெரியாத தனமா வௌவால் (வவ்வால் இல்ல வௌவால் எதுப்ப கரெக்ட்?) பக்கத்தை திருப்ப , அங்கே என்னடான்ன ஒரு கட்டுரை, கார்டு ப்ரோக்ரசன், நோட்ஸ், c மேஜர் , மைனெர், சரி இசையை பத்தி ஏதோ சொல்ல வாரபல இருக்குதிய, படிப்போம் என்று ஆரம்பித்தால், படிக்க படிக்க எனுக்கு ஒன்னு புரிஞ்சது என்னன்னா YouTube learn piano டைப் பண்ணஒரு வெள்ளைக்காரர் சொல்லறத translateபன்னியிருக்கிரமதிரி தோணிச்சு, அட! சரி தொடர்ந்து படிப்போம் பார்த்த கடைசில ராணிய? மந்திரியா? என்று முடிஞ்சு போச்சு, ஒண்ணுமே புரியல சரி விடு, கிழே இருக்கிற கமெண்ட்ஸ் படிப்போம் படிச்சா ஒரு 3 பேரு திரும்ப திரும்ப கமெண்ட்ஸ் போட்டிருந்தாங்க (அதுல நீயும் ஒரு ஆளுன்னு நினைக்கிறேன்), ஒரே தனிமனித தாக்குதல்கள், நமக்கு இது சரிபட்டு வராது, அங்கிருந்து வெளியேறி அடுத்த லிங்க் சொடிக்கினால் அது புது கற்று, அப்படிதம்ப உன்னோட தளத்திற்கு வந்தேன்,
இங்க வந்தால் என்ன ஒரு ஆச்சரியம்! ஆனால் உண்மை, அதே 3 பேர் இங்கேயும் கமெண்ட் போட்டிருகாங்க அடடே இவர்கள் (அவனா நீ) இங்கேயும் அதே தாக்குதல்கள்.
அது சரி வௌவாலுக்கு சரியாய் கண்ணு தெரியதேமே! அதனாலதான் அது echolocation பயன்படுத்துகிறது,
சரியாய் பார்வை இல்லாத ஒரு பறவைக்கு, எப்படிப்பா மாறுபட்ட பார்வை சாத்தியம்! ஒருவேளை மாறுபட்ட கண்ணா இருக்குமோ?
நான் எங்கேப்ப இசையை ரசிக்கிறவங்கள முட்டாள் என்று சொன்னேன், ஆயுதம் எடுப்பவர்களை மட்டுமே முட்டாள் என்றேன்! ஏற்கனவே அண்ணன் சூட இருக்கிறார், அதில் எரிகிற நெருப்பில் எண்ணைவேற!
ஹலோ neo
Deleteதமிழில் உங்கள் நடையே இப்படித்தானா அல்லது சும்மா விளையாடுகிறீர்களா என்று தெரியவில்லை . வவ்வால் பதிவிற்குள் போனால் நிறைய பேசுவார் . கிண்டல் அவருக்கு சுண்டல் சாப்பிடுவது போல! ரசிக்கும்படியும் சிரிக்கும்படியும் எழுதுவார் . என் பதிவிற்கு வந்ததில்லை .
இசையைப் பற்றி எழுதும் எல்லோரும் இசை படித்தவர்களாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. ரசிப்பவர்களாக இருந்தாலே போதும் . நீங்களும் நல்ல ரசிகர்தான் !
அவர்களைப் போல நாமும் தாக்குதல்கள் கொடுப்போம் . நாகரீகமாகவே கொடுப்போம் . இளையராஜா பற்றி எடுத்துச் சொல்ல நமக்கு நிறைய விஷயம் இருக்கிறது .
ஹலோ அமுதவன் சார்
ReplyDeleteஉங்களின் பின்னூட்டத்தால் என்னை விட neo தான் ரொம்பவும் விசனப்படுகிறார் போலிருக்கிறது.
///மிகச்சிறந்த பாடல் என்பது 'அவரவர் மனநிலையைப்' பொறுத்ததா? எந்த ஊர் வக்கணை இது? பொதுப்புத்தி என்பதே எந்த விஷயத்திலும் கிடையாது என்று சொல்ல வருகிறீர்களா? இப்போது பாரதி சிறந்த கவிஞன் என்று சொன்னால் அது அவரவர் மனநிலையைப் பொறுத்த விஷயமா? அந்தப் பட்டியலில்தான் இது வருமா?///
சிறந்த கவிஞன் , சிறந்த நடிகன் என்று தனிப்பட்ட மனிதர்கள் பற்றிச் சொல்ல வந்தால் நீங்கள் சொன்ன 'பொதுப்புத்தி' வேண்டும் . அந்த வகையில் சிறந்த இசை அமைப்பாளர் என்று பெயர் வாங்கியவர்கள் இருக்கிறார்கள் இல்லையா? அதில் இளையராஜாவும் ஒருவர்தானே ! 'அவர் மட்டுமே ' என்று பெரும்பாலும் ரசிகர்கள் சொல்லுவதில்லை. ஒவ்வொரு இசை அமைப்பாளரிடமும் தனித்த ஒரு திறமை இருக்கும் . ' 'முதன் முதலாக' அவர்தான் உருவாக்கினார் , புதுமை செய்தார் என்பதும் இருக்கும் . அந்த வகையில் சில புதுமைகள் இளையராஜாவும் உருவாக்கி இருக்கிறார் .
1993 ஆம் ஆண்டு லண்டன் நகரில் 'Royal Philharmonic Orchestra' குழுவினர் இளையராஜா எழுதிய சிம்போனி இசைக்கான ஸ்கோரை அவர் முன்னிலையில் இசைத்தார்கள் என்பது உண்மையா பொய்யா ? இதற்கு நீங்கள் ஆதாரப் பூர்வமாக மறுப்பு தெரிவித்தால் நாம் இதைப் பற்றி மேற்கொண்டு பேசுவோம். ஒன்று உண்மை . அவருடைய சிம்போனி இசை வெளியிடப்படவில்லை என்பது உண்மை.
நண்பர் சார்லஸுக்கு நான் எழுதுவதைப் போன்று எழுதப்பட்ட பின்னூட்டம் கண்டேன். ஏன் இந்தக் குதறல் என்பதை அவருடைய கூகிள் ப்ளஸ் தளம் சென்றதும் புரிந்துகொள்ள முடிந்தது. எல்லாம் ராஜா பாடல்களாக தளமே தகதகவென்று தகிக்கிறது. கண்றாவி! இளையராஜாவை ஆராதிக்கும் ஒருவருக்கு என் மீது இந்த அளவு கூட கோபம் வராவிட்டால் பின்ன என்ன? இப்படியான நாலாந்தர வசை பாடல் பெரும்பான்மையான ராஜா ரசிகர்களின் இயல்புதானே! அதை நிரூபித்த திருவாளருக்கு நன்றி. இன்னும் கூட நிறைய தரமான வார்த்தைகளை கொட்டாமல் விட்டது ஏனோ?
ReplyDelete----பாகிஸ்தான்காரன் இந்தியால குண்டு போட்டா அதுக்கு பேரு patriotism ஆனா இந்தியாக்காரன் பதிலுக்கு குண்டு போட்ட அதுக்கு பேரு terrorism. புரியுதா ? ---
ஏன்? உங்களுக்கே புரியலையா? மிகவும் மலிவான ஒப்பீடு.
----நான் 8 பக்கத்துக்கு எழுதுன அது கட்டுரை, ஆனா நீ 3 பக்கத்துக்கு எழுதுன அது நீஈநீண்ட கட்டுரை ! ---
8பக்கம் 3பக்கம் என்பதெல்லாம் ஒருவருடைய விருப்பத்தைப் பொருத்தது. சால்ஸ் நிறைய எழுதவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசையும் கூட. இதில் உங்களுக்கென்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
---நான் வசை பாடினால் அது 'மாறுபட்ட பார்வை' அனால் நீ இசையை பற்றி கூறினால் 'தனிமனித ஆராதனை'---
அதாவது நான் என்பது அவரல்ல. அது காரிகனாம். அடடா! என்ன ஒரு புதுமையான கற்பனை! வியப்பை ஏற்படுத்தும் நவீன எழுத்து! மேற்கூறப்பட்டுள்ள தகரக் கருத்தில் வசை இசை என்ற எதுகை மோனை ஒலியைத் தவிர வேறொன்றும் இல்லை.
---எனக்கு கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமோ வரிகள் எனக்கு 'பா' கடல், அனால் நிலாகாயுது பாடல் 'சாக்கடை' .----
எனது சிறிய அறிவுரை-முதலில் தமிழை ஒழுங்காக எழுதக் கற்றுக்கொண்டு வரவும். எம் எஸ் வியின் இந்தப் பாடலை ரசித்தேன் என்று எங்கேயுமே நான் சொல்லவில்லை. அதைவிட இந்தப் பாடல் எம் எஸ் வி க்கு ஒரு கறுப்புப் புள்ளி என்றே நினைக்கிறேன். மேலும் யாராலும் இந்தப் பாடல் விரும்பப்பட்டதாக எனக்கு தோன்றவில்லை. அதற்காக நிலா காயுது இந்த அளவுக்கு மோசமில்லை என்று ராஜா ரசிகர்கள் நினைப்பது ஒரு தப்பிக்கும் முயற்சி. உங்களால் வேறென்ன செய்யமுடியும்? பலர் காறித்துப்பிய பாடலை வேறப்படி பாதுக்காக்க முடியும்? இதுதானே உங்களின் உண்மையான ரசனை. நிலா காயுது சாக்கடை அல்ல. அதற்கும் கீழே..என்னால் ரொம்ப அசிங்கமாக எழுத முடியாது என்பதால் சாக்கடை என்று குறிப்பிட்டேன் அவ்வளவுதான்.
---'நாறிவிட்ட பூ'என்று எழுதினால் அதுக்க பெயர் அநாகரிகமாம், பார்த்திங்கள பார்த்திங்கள' நான் 'நாறிவிட்ட பூ' என்று நான் எழுதவே இல்லை. காரி(தூ......) gun, உமிழ்வது நா கரி கம ஆகவே ----
நான் கூட என் பெயரை காரிgun என்று எழுதுவதில்லை. ஆனால் இதுகூட நன்றாகத்தான் இருக்கிறது. நான் எழுதியது ஒரு subtle காமெடி. அதனால்தான் அடப்பாவி என்று குறிப்பிட்டிருந்தேன். நகைச்சுவைக்கும் நக்கலுக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஜென்மங்கள் தப்புப்தப்பாக எழுதுவது ஒரு சீரியஸ் ஜோக். இதைதான் சால்ஸ் "அழகிய" தமிழில் என்று அடைப்புக்குறிக்குள் குறிப்பிட்டிருக்கிறார் போலும். அவருக்கும் சில சமயங்களில் நியாயம் கண் திறக்கிறது.
-----முட்டாள்கள் அவையில் அறிவாளி என்று கூறுபவன் அடிமுட்டாள் ! அனால் முட்டாள்கள் அவையில் நான் முட்டாள்தான் என்று கூறுபவன் அறிவாளி! ----
இது எதோ தினத்தந்தி சாணக்கியர் சொல் படக் கருத்து போல் இருக்கிறது. அதில்தான் இந்த அறிவாளி முட்டாள் போன்ற பதங்கள் ஏகத்துக்கு விளையாடும். அதுசரி அது ஏன் இரண்டு முறை ஒரே கருத்து? சொன்னது என்னவென்று சொன்னவருக்கே புரியவில்லை போலும். பரிதாபம்.
---ஒருவனுடைய இசையை வசை பாட MSV யையும் A.R. REHMAN யையும் ஆயுதமாக கையில் எடுக்கும் முட்டாள்கள் -----
என்னுடைய ஆயுதத்தை தீர்மானிப்பது உங்களைப் போன்றவர்கள்தான். இன்னும் நிறைய குரைக்கவும். (என்னுடைய suggestion : ஆனால் என்று டைப் செய்யும்போது இரண்டுமுறை a என்ற எழுத்தை அழுத்தவும்.)
சார்லஸ், உங்களுக்கு எதைச் சொல்லியும் புரியவைக்கமுடியாது என்பது நிரூபணமாகிவிட்டது. எம்பி தேர்தலில் போட்டியிடுவதற்கும், அதில் வெற்றிபெற்று எம்பியாவதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையென்றால் நான் என்ன செய்ய?
ReplyDeleteஐஏஎஸ் தேர்வை என் மகள்கூட எழுதினாள். வெற்றிபெற முடியவில்லை என்பது வேறு விஷயம். அதற்காக அவள் எழுதினாளா இல்லையா, எழுதுவதற்கான திறமை இருந்ததா இல்லையா என்று கேள்விகேட்டுக்கொண்டு 'என்மகளும் ஐஏஎஸ்தான்' என்று கூறிக்கொண்டா உட்கார்ந்திருக்க முடியும்?
சிம்பனி வரவில்லை. அதனால் அவர் சிம்பனி இசைத்திருப்பதாக அர்த்தமில்லை என்பதுதான் விஷயம். அவர் 'முயற்சி மேற்கொண்டார்' என்பதைத்தான் நானும் பல இடங்களில் சொல்லியிருக்கிறேனே.
உங்களுக்குக் கிடைத்திருக்கும் புதிய நண்பர் இணைய உலக மகானுபாவராகவும், மிகப்பெரிய அறிஞராகவும் இருப்பார் போலும். அதனால்தான் சகட்டுமேனிக்கு இளையராஜாவை 'ஒரே இசையமைப்பாளர்' என்று ஒப்புக்கொள்ளாதவர்களையெல்லாம் விளாசித்தள்ளுகிறார்.(நானும் காரிகனும்தான் அவர் இசையமைப்பாளர் என்பதை ஒப்புக்கொள்கிறவர்களாயிற்றே. 'ஒரே' மற்றும் 'அவருக்கு இணையான' போன்ற ப்ளா ப்ளா விஷயங்களைத்தான் ஒப்புக்கொள்தற்கில்லை)
இந்த சிம்பனி விஷயம் பற்றி நீங்கள் அவரிடமேகூடக் கேட்டுத் தெளிவு பெறலாம். அவரும் காரிகனையெல்லாம் ஆபாசமாகத் திட்டுவதற்கு பதில் இம்மாதிரி விஷயங்களிலுள்ள உண்மைகளைக் கண்டுபிடித்து ஊருக்கும் உலகிற்கும் சொல்லலாம்.
\\இளையராஜா ரசிகர்களை வெங்காயங்கள் என்று அவதூறாக பேசிவிட்டீர்கள். பதிலுக்கு அவர்கள் உங்களை பேச மாட்டார்கள். இளையராஜா இசை ரசிப்பவர்கள் எல்லோரும் நல்ல நாகரீகம் தெரிந்தவர்கள் . வெங்காயம் போல நீங்கள் அவர்களை உரித்தாலும் இளையராஜாதான் தெரிவார் . அவருடைய இசைதான் வெளிப்படும் . உரித்தால் ஒன்றுமில்லாத வெங்காயம் அல்ல அவர்கள் ! உருக்கினாலும் புதிதாய் உருவாகும் தங்கங்கள். எல்லோரும் இசைஞானியின் இசையால் தங்களை புடமிட்டுக் கொண்டவர்கள்.\\
ReplyDeleteசார்லஸ், மேலேயுள்ளது நீங்கள் உங்கள் குழாம் உறுப்பினர்களைப் பற்றி திரு காரிகன் அவர்களின் தளத்தில் எழுதியிருந்த பின்னூட்டப் பகுதி. இங்கே உங்கள் நண்பர் காரிகனைப் பற்றி எழுதியிருக்கும் எழுத்துக்களைப் படிக்கும்போது உங்கள் மீது பரிதாபம்தான் வருகிறது.
காரிகனுக்கும் அமுதவன் சாருக்கும்
ReplyDeleteஎன் தளமும் இவ்வளவு சூடு பிடிக்கும் என்று நான் நினைக்கவேயில்லை .
Neo கொஞ்சம் வார்த்தைகளில் வேகம் காட்டி இருக்கலாம் . ஆனால் கெட்ட வார்த்தைகள் ஒன்றும் பயன்படுத்தவில்லை . அந்த வகையில் நாகரீகமானவரே! நீங்கள் இளையராஜா ரசிகர்களை வசை பாடுவதை போலவே அவரும் கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார். வாசித்துவிட்டு சிரித்துவிட்டுப் போவோம் . விமர்சனக் கண்ணோட்டத்தோடு கடந்து போவோம் .
இளையராஜா சிம்போனி பற்றி அதிகத் தகவல்கள் இல்லை . நானும் அலசிப் பார்த்துவிட்டேன் . இளையராஜாவே உங்கள் கேள்விக்கான பதிலை சொன்னால்தான் உண்டு - அவர் இசைத்தாரா இல்லையா என்று! இளையராஜா fans club ஆரம்பிக்கப்பட்டுள்ளது . உள்ளே சென்றால் விடை கிடைக்குமா?
அமுதவன் சார்,
ReplyDeleteஇளையராஜா ரசிகர்கள் நாகரீகம் தெரிந்தவர்கள் வீணாக வசை பாட மாட்டார்கள் என்றெல்லாம் நண்பர் சால்ஸ் குருட்டாம்போக்காக சொல்லப்போக அதை நீ எப்படி அப்படிச் சொல்லலாம் என்று முரண்டு பிடிக்கும் ஒரு ராஜா அபிமானி "நல்லவிதமாக, கெட்ட வார்த்தைகள் இல்லாமல்" தன் கருத்தை முன்வைத்து சால்சை நிலைகுலையச் செய்துவிட்டார். அது அப்படியில்லை என்று இவர் இப்போது அந்த ஆசாமிக்கு போர்வை போர்த்த வேண்டிய கட்டாயம்.
அடுத்து சிம்பனி பற்றி சால்ஸ் கொண்டிருக்கும் கருத்து படிக்க வேடிக்கையாக இருக்கிறது. இளையராஜாவையே கேட்கவேண்டுமாம். சரிதான். நல்லா பேசுறீங்க.. பொழச்சீப்பீங்க...
"நன்றாக குரைக்கவும்"அடடா! என்ன ஒரு முதல் தர வார்த்தைகள், நம்ள அந்த "'செல்ல பிராணி'" யோடு மறைமுகமாக ஒப்பிடுகிரராம்! நா கரி க ம கா
ReplyDelete"நன்றாக குரைக்கவும்" என்றால் "குறைக்கவும்" ( அதாம்ப்ப அடைக்கிவாசி எனக்கு எல்லம்தெரியும்னு அர்த்தம்)
8 பக்கம் "கட்டுரை"ஆனால் 3 பக்கம் " நீண்ட கட்டுரை" - அவருக்கு நீ இன்னும் நிறைய எழுத வேண்டுமாம் அவர் எப்படிப்பா நீ நீ நீ நீண்ட கட்டுரையை படிப்பார் - அதுல எனக்கு பிரச்சினையாம் !!!!!
'தகரக் கருத்து' அடடா மேலும் ஒரு முதல் தர வார்த்தை!!! ஏம்ப்ப சார்லஸ் தமிழை ஒழுங்காக எழுத கற்றுக்கொண்டு வந்ததான் உன்னோடோ தளத்துல comments போடணும்னு ஏதாவது கண்டிஷன் இருக்கா ? அந்த "தங்கக்கருத்தை" கூறிய அண்ணனுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறேன்
நான் எழுதினால் தங்க கருத்து - நீ எழுதினால் தகரக் கருத்து
பார்ரா! சார் நக்கல் பண்ணாராம் , நான் சீரிஸ் ஜோக் சொன்னேனம் !!! ச்ச்ச்சு ச்ச்ச்சு யெப்புடி எப்பிடி எங்களுக்கும் சமாளிக்க தெரியுமுல்ல!!!
வித்தியாசம் தெரியாத ஜென்மங்கள் (அடுத்த முதல் தர வார்த்தை) "தப்புப்தப்பாக" என்று அழகிய தமிழில் எழுதி இருக்கிறதாம் - அது என்னப்பா "தப்புப்தப்பாக" (இதுக்கு பெயர்தான் சரியாக "தப்பு"ய் எழுதுவது - வியாக்யானம் ஊருக்கு மட்டும்தானே நமக்கு அது கிடையாதே!). ஏம்ப்ப, தொடக்கத்தில் உன்னை "சார்லஸ்"என்று எழுதியவர் பிறகு ஏனோ 'சால்ஸ்' என்று இருமுறை எழுதி இருக்கிறார். ஒருவேளை நான் 'எ' அழுத்த மறந்தது போல அவர் 'ர' அழுத்த மறந்து விட்டாரோ? நமக்கு sorry gun அளவுக்கு தமிழ் புலமை இல்ல அaதலால் அறிவரை கூற எனக்கு தகுதி இல்லை!
நான் கூட இப்போதம்ப்ப என்னோட கூகுளே தளத்தை பார்வை இட்டேன், அங்கே super singer நிகழ்ச்சி வீடியோ தம்ப நிறைய இறுகிறது, அதனால நான் மந்திரி ரசிகன்!
"கண்றாவி"- இந்த முதல் தர வார்த்தைக்கு என்னப்பா அர்த்தம் ?
பார்த்தல்ல! sorry gun முதல் தர வசை பாடல் இயல்புடயவர்னு நிருபிசிட்டறு ....
சாக்கடை க்கு கீழே என்றால் ஒரோவேளை 'பாதழ' சாக்கடையை பற்றி கூறுகிறாரோ ?
இங்கே இன்னுமோர் முதல் தர வார்த்தை "காறித்துப்பிய" பாடல்.
கரும் புள்ளி எண் 2
குடி மகனே பெரும் குடி மகனே - பெண்
குடிமகளே பெரும் குடிமகளே - ஆண்
உலகத்திலேயே எனக்கு தெரிஞ்சு ஒரு ஆண் ஒரு பெண்ணை "குடிமகள்'ன்னு கூறுவது இந்த மாபெரும் பாட்டில் மட்டுமே ! (எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டுப்ப, அதுல ஓர் வரி வரும் பாரு ஆய்யயோயோ புல்லரிக்குதுப்ப)
sorry gun (sorry(figure)gun)
சாருக்கு ஆனந்த விகடன், தினத்தந்தி, நிறைய படிக்க ! பிடிக்கும்போலே தெரிகிறது!
அதனால என்னோட அம்மாச்சி(அதாம்ப்ப என்னோட அம்மாவோட அம்மா) கூறிய தத்துவம் "உலகத்தில ரெண்டு முட்டாளுங்க, ஒருத்தன் அறிவுரை சொல்றவன், அடுத்தவன் அறிவுரை யை கேட்பவன்". நான் சொல்றத மட்டும் தான் கேட்கணும் என்று சொல்பவன் அடிமுட்டாள்.
நாமெல்லாம் 'செல்ல பிராணி'- அதனால் நிறைய குரைக்க சொல்கிறார்! - செல்ல பிராணிகள் எப்பவும் ராஜா வுக்கு விசுவாசம இருக்கும்.
ஆனால் சார் பெரிய ரவுடி - நான் ஜெயுளுக்கு போறேன், நான் ஜெயுளுக்கு போறேன், நானும் பெரிய ரவுடி தான்ன்னு - கூவி கூவி சொல்றார்- வியாபாரம் ஆகுதான்னு பார்ப்போம் !!!!
ஹலோ நியோ
Deleteரொம்ப சூடாகுறீங்க . கொஞ்சம் நாம் குரைத்துக் கொள்வோம் . மன்னிக்கணும் . குறைத்துக் கொள்வோம் . காரிகன் மாதிரியே எழுத வருது . காரிகன் திட்டத் திட்ட திண்டுக்கல்லு, வைய வைய வைரக்கல்லு . நாம் அப்படி எடுத்துக் கொண்டால் உண்மையான இளையராஜா ரசிகர்கள் . நீங்கள் சொன்ன பிறகுதான் பார்த்தேன் . காரிகன் ரொம்பவும் 'நாகரீகமான' வார்த்தைகளில்தான் பின்னூட்டமிட்டிருக்கிறார். ஒவ்வொரு வார்த்தையையும் எடுத்துப் போட்டு சொட்டான்கல்லு விளையாடி இருக்கிறீர்களே!
டாஸ்மார்க் வருவதற்கு முன்னாடியே குடிக்கச் சொன்ன பாட்டெல்லாம் நல்ல பாட்டா என்ன ? சரியான உதாரணம் எடுத்துக் காட்டுகிறீர்கள் . இந்த மாதிரி பழைய பாட்டுக்களிலும் சாக்கடை இருக்கிறது. இளையராஜாவை மட்டும் சொல்லுவதில் அர்த்தம் என்ன இருக்கிறது ?
சார்லசுக்கு,
ReplyDeleteஉங்களின் புது நண்பருக்கு சார்லஸ் என்ற பெயரை சால்ஸ் என்றுதான் அழைக்கவேண்டும் என தெரியவில்லை. எனக்கென்னமோ சொல்லுப்ப பாத்துப்ப அதாம்ப என்று உங்களை நக்கல் செய்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கவனம்.
வாங்க கலைவாணன்
Deleteஅவருக்குத் தெரிந்த தமிழில் நம்மை புரிய வைக்கிறார் . மற்றபடி என்னை நக்கல் செய்வதாக நினைக்கவில்லை. சென்னைத் தமிழில் இப்படிதானே பேசுகிறார்கள் . நான் சென்னைக்குள் நுழைந்தபோது 'வா போ' என்று ஒருமையில் வயது வித்தியாசம் இல்லாமல் பலர் பேசியதைக் கேட்டு முதலில் கோபம் ஏற்பட்டது . பிறகு பழகிப் போனது. நியோவும் சென்னைவாசிதான். அவர் slang அதுதான் !
இசை இராட்சசன் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறதோ?Neo அவர்களது வரவு காரிகன் போன்றோருக்கு எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல இருக்கிறதுபோலும்.வெறுப்பைக்கொட்டித்தீர்க்கிறார்.உண்மை கசப்பாகத்தான் இருக்கும் .ஏற்றுக்கொள்ள பெருந்தன்மை வேண்டுமே! தொடரட்டும் விவாதங்கள் .
ReplyDeleteHello Amuthavan,
ReplyDeleteWhat is the scale for the best song and worst song?
இங்கே கேள்வி கேட்டிருக்கும் அனானி யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அதுபற்றிக் கவலையில்லை. ஆனால் இது ஒரு முக்கியமான கேள்வி. பல பேருக்குத் தேவைப்படும் நல்ல கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் தெரியாமல்தான் பலபேர் தங்கள் இஷ்டத்திற்கு என்னென்னமோ கற்பிதங்களை வைத்துக்கொண்டு, அல்லது இணையத்தில் வந்த ஏதோ குப்பைப் பதிவுகளைப் படித்துவிட்டு 'இதுதான் பாடல், இதுதான் சிறந்த பாடல்' என்று தாங்களாகவே நினைத்துக்கொண்டு அங்கேயும் இங்கேயும் முட்டிமோதி அலைந்துகொண்டிருக்கிறார்கள். நல்ல பாடல் என்றால் எது? அதற்கான 'ஸ்கேல்' என்ன- என்பது பற்றியெல்லாம் விரைவில் என்னுடைய தளத்தில் ஒரு பதிவு எழுதுகிறேன். படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ReplyDeleteThanks Amudhavan..
DeleteSudhakar
அமுதவன் சார்
ReplyDeleteஒரு இசையமைப்பாளரிடம் உங்கள் பாடல்களில் எது நல்ல பாடல் என்று கேட்பீர்களேயானால் ' எல்லாமே ' என்றுதான் சொல்வார் . ஒரு ரசிகனிடம் கேட்டால் அவனுக்குப் பிடித்த இசையமைப்பாளரின் பாடலைதான் சொல்வார். இசையை விரும்பாதவரிடம் கேட்டால் அவர் திரு திருவென முழிப்பார் . அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும் . தீவிர பக்திமான்கள் அப்படித்தான் இருப்பார்கள் . யாரைக் கொண்டு அல்லது எதைக் கொண்டு நீங்கள் நல்ல பாடலுக்கான அளவுகோல் சொல்லப் போகிறீர்கள் ? எழுதுங்கள். உங்கள் பதிவிற்கு நாங்கள் வருகிறோம்.
\\ஒரு இசையமைப்பாளரிடம் உங்கள் பாடல்களில் எது நல்ல பாடல் என்று கேட்பீர்களேயானால் ' எல்லாமே ' என்றுதான் சொல்வார் . ஒரு ரசிகனிடம் கேட்டால் அவனுக்குப் பிடித்த இசையமைப்பாளரின் பாடலைதான் சொல்வார். இசையை விரும்பாதவரிடம் கேட்டால் அவர் திரு திருவென முழிப்பார் . அப்படிப்பட்ட ஆட்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும் . தீவிர பக்திமான்கள் அப்படித்தான் இருப்பார்கள் . யாரைக் கொண்டு அல்லது எதைக் கொண்டு நீங்கள் நல்ல பாடலுக்கான அளவுகோல் சொல்லப் போகிறீர்கள் ?\\
ReplyDeleteஒரு நல்ல பாடலுக்கான அளவுக்கோலென்பது உங்களிடமே இருக்கிறது. ஒரு இசையமைப்பாளரைக் கேட்டால் என்ன சொல்லுவார், ரசிகனைக் கேட்டால் என்ன சொல்லுவார், இசையை விரும்பாதவரிடம் கேட்டால் என்ன சொல்லுவார் என்பது வரை மிகவும் தெளிவாகவே இருக்கிறீர்கள்.
இசைஞானியின் ஆத்மார்த்த சிஷ்யர்களுக்கெல்லாம் இசைஞானம் அபரிமிதமாகவே இருக்கிறது.
இந்த பதிலை நீங்கள் அந்த அனானிக்கு அப்போதேயே சொல்லியிருக்கலாம். நான் பதில் போடும்வரை எதற்காகக் காத்திருந்தீர்கள் என்பது தெரியவில்லை.
நான் என்ன எழுதினாலும் இதன் நீட்சியாகவே வந்து கருத்துச் சொல்லி நீங்களும் உங்கள் நண்பர் குழாமும் சமர் புரிவீர்கள் என்பது தெரிகிறது. நான் எழுத நினைத்ததைப் பிறிதொரு சமயம் எழுதிக்கொள்கிறேன்.
வீண் விவாதங்களுக்கு நான் தயாரில்லை.
ஒன்று செய்யுங்கள். வேறுவிதமான விவாதங்களையெல்லாம் ஏறக்கட்டிவிட்டு உங்கள் பாதையில் போய்க்கொண்டே இருங்கள். யாரும் குறுக்கே வரப்போவதில்லை. வந்தனம்.
ராட்சஷனை எங்கே காணோம்.....?
ReplyDeleteதருமி சார் அடுத்தது வந்தாச்சு!
Deleteஆங்கிலமோகி காரிகன் பாடும் வசைகளுக்கு பல்லக்குத் தூக்கும் அமுதவன் முதலில் கரிகனை திருத்த வேண்டும் . பிறகு வெட்டி நியாயங்களை பேசலாம்.
ReplyDeleteஇவர்கள் ராஜாவை வசை பாடுவது போல எம் எஸ் வீ யை ராஜா ரசிகர்கள் யாரும் வசை பாடுவதில்லை.
Vimal
வாங்க விமல்
Deleteமுதல் வருகை . நன்றி . நீங்கள் சொல்லும் அதே கருத்தை நான் இருவருக்கும் பலமுறை சொல்லி இருக்கிறேன் . இளையராஜா ரசிகர்கள் எம்.எஸ்.வி யை தரக் குறைவாக பேச மாட்டார்கள் . அவர்களின் வசையை நாம் இளையராஜாவின் இசையால் திருத்துவோம் .
சால்ஸ் இளையராஜா இசை குறித்து உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருக்க அதைப் பாராட்டியோ அல்லது ஒரு சிறிய வார்த்தையோ அதைப் பற்றி பேசாமல் இங்கும் வந்து என்னை விமர்சித்து புரளி பேசுவதுதான் விமல் போன்ற ராஜா ரசிகர்களின் பண்பு போல. நடத்துங்க..பாவம் சால்ஸ் அவருக்கு இது கூட மூளையில் உறைக்கவில்லை.
ReplyDeleteகாரிகன் சார்
ReplyDeleteஉங்களின் எழுத்து அவரை பாதித்ததினால்தான் விமர்சனம் செய்கிறார் . ஒருவகையில் உங்களுக்கு வெற்றி . ஆனால் உண்மை மறைத்து எழுதுவதுதான் அவரை என்னைப் போன்றோரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை . வாருங்கள் வாதிடலாம் !