இசைப் பதிவுகளுக்கு இடையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துவிட்டு போகலாம் என்றுதான் இந்தப் பதிவுக்கு வந்தேன் .
வாட்ஸப் இப்போது இளையோர் முதல் பெரியோர் வரை எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது . வாட்ஸப் பயன்படுத்தத் தெரியாவிட்டால் நம்மை ஒரு மாதிரியாக மற்றவர்கள் பார்க்கிறார்கள் .
ஊடகங்கள் இப்போது இதை பயன்படுத்தி உடனுக்குடன் சுடச் சுட செய்திகளை பெற முயல்கிறது. யார் அநியாயம் செய்தாலும் எங்கு அக்கிரமங்கள் நடந்தாலும் அதை யாராவது வீடியோ எடுத்து வாட்ஸப்பில்
பரப்பி விடுகிறார்கள் . ஊடகங்களும் ஒலி பரப்புகின்றன . அதை ஒரு சாட்சியாகக் கருதி நீதி மன்றமும் வழக்கை எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன . வாட்ஸப் சிலருக்கு கிலி ஏற்படுத்தி இருக்கிறது .
என் மனைவியுடன் சேர்ந்து பணியாற்றுபவர் ஒருவர் அவர் கணவரிடம் சென்று ' ஏங்க ...தடவுற போன் ஒன்னு வாங்கிக் கொடுங்க ...' என்று கேட்க அவர் சிறிது நேரங்கழித்து புரிந்து கொண்டு ' டச் போனா..? ' என கேட்டிருக்கிறார். ' ஆமா..மா ...அதேதான் எல்லோரும் வாட்ஸப் பயன்படுத்துறாங்க எனக்கு ஒண்ணும் தெரியலைன்னு கிண்டல் செய்றாங்க ..' என்று புதிதாக ஸ்மார்ட் போன் வாங்கி கற்றுக் கொண்டுவிட்டார். வாட்ஸப் கற்றுக் கொள்வதும் கையாள்வதும் எல்லோருக்கும் எளிதான விசயமாகிப் போனதால் எல்லா வயதினரும் பயன்படுத்துகிறார்கள் .
வாட்ஸப்பில் பாட்டு, போட்டோ, ஆடியோ , வீடியோ , கமெண்ட் என்று எதை வேண்டுமென்றாலும் அனுப்பலாம் என்பதால் நக்கல், நையாண்டி , கிண்டல் , கேலி, ஆச்சரியம், அதிசயம் , அசிங்கம் ...etc வருகிறது; போகிறது. கட்டுப்பாடுகளே இல்லை . வீட்டுக்குள் நுழைந்தால் பிள்ளைகள் எடுத்துப் பார்த்து விடுவார்களோ என்று பயப்பட வேண்டியிருக்கிறது. ஆரம்பத்தில் பார்ப்பதற்கு குஷியாக இருந்த வாட்ஸப் விஷயங்கள் போகப் போக , 'இன்னிக்கு எவன் என்னத்தை அனுப்பினானோ ...? ' என்று யோசிக்க வைக்க ஆரம்பித்து விட்டன . இந்திய அரசாங்கம் தடை செய்த கொடூரமான மனிதத் தலையை வெட்டி எறியும் காட்சிகள் கூட பரப்பப்படுகிறது. என் நண்பர் ஒருவருக்கு அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு மயக்கம் வந்து விட்டதாம் . எப்படியோ சமாளித்துவிட்டார். இப்போது வாட்ஸப் உள்ளே செல்ல தயங்குகிறார். மனுசனை அது என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!?
சின்னப் பசங்கள் கையில் அது அதிகம் விளையாடுகிறது. எதையாவது பார்த்துக் கொண்டே அலைகிறார்கள் . பத்து பேர் சேர்ந்து கொண்டு அரட்டை அடிக்கிறார்கள் வாயை திறக்காமலேயே! கேட்டால் 'குரூப் சாட் ' என்கிறார்கள். அவர்கள் பார்ப்பது மறுக்கப்பட்டால் கோபம் தலைக்கேறுகிறது. என்ன செய்ய? உள்ளறையில் படுத்திருக்கும் என்னை என் மகள் ' அப்பா டீ குடிக்க ஹாலுக்கு வாங்க ' என்று வாட்ஸப்பில் செய்தி அனுப்புகிறாள். நானும் அந்த வாட்ஸப்பில் மேய்ந்து கொண்டிருப்பதால் உடனே செய்தி என்னை எட்டுகிறது.
சில பேர் பக்கம் பக்கமாய் எழுதி அனுப்புகிறார்கள் . வாசிக்க பொறுமை இல்லை. ஒரு முறை அமெரிக்காவில் இருக்கும் என் நண்பனுக்கு ஒரு பெரிய செய்தியை பகிர்வதற்காக அனுப்பினேன். எனக்கு போன் செய்து திட்ட ஆரம்பித்துவிட்டான். ' வாட்ஸப் சின்ன சின்ன செய்தி அனுப்பத்தானே ஒழிய இப்படி ' எஸ்ஸே ' அனுப்புறதுக்கு இல்ல . அமெரிக்காவில் எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா ?....' என்று வசை பாட ஆரம்பித்துவிட்டான் . வாட்ஸப்பினால் அமெரிக்காவிலிருந்து நான் திட்டு வாங்க வேண்டியதாகிவிட்டது. அதன் பிறகு, ' ஹாய் ...நலமா ...பிள்ளைகள் நலமா ...ஹவ் ஆர் யூ ...ஹி ...' என்ற வார்த்தைகள் தவிர வேறு எதையும் அவனுக்கு அனுப்புவதே கிடையாது.
வாட்ஸப்பில் சிக்கிக் கொண்டு நிறைய பேர் பைத்தியம் பிடித்து அலைகிறார்கள் . எனக்கு அந்த அளவுக்கு பைத்தியம் இல்லை. அளவோடு பயன்படுத்துகிறேன். அதனால் நிறைய விசயங்களை பார்க்காமலேயே அழிக்க ஆரம்பித்து விட்டேன். திறந்தால் போதும் நூறு விஷயங்கள் வந்து கொட்டும் . அத்தனையும் பார்த்து முடிக்க ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாகவே ஆகும் . என் நேரத்தை தின்று தீர்த்துவிடும் . நானே சென்சார் செய்து விடுகிறேன் .
சமீபத்தில் ஆசிரிய நண்பர் ஒருவர் , ' சார் ...வேண்டியவங்களுக்கு பழைய வினாத் தாளை வாட்ஸப்பில் அனுப்பக் கூட பயமாயிருக்கு ... எதுக்கு உள்ள தூக்கி வைப்பான் என்றே தெரிய மாட்டேங்குது ' என்று அங்கலாய்த்தார் இப்படி நமது பின்னணியில் ஒளிந்திருக்கும்ஏகப்பட்ட பிரச்சனைகளோடுதான் வாட்ஸப்பிலும் நாம் மகிழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அப்படி நான் ரசித்து மகிழ்ந்த விசயங்களில் சில ஆடியோப் பதிவுகள் நகைச்சுவையாக இருந்தன . பார்ப்போம்.
ஆடியோப் பதிவு ஒன்று
( ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து ஒரு பெண் ஊழியர் பேசுகிறார் . எதிர் முனையில் ஓர் ஆண் பதில் சொல்கிறார். )
பெண் : சார் ரா.... சாருங்களா ?
ஆண் : ஆமா ...நீங்க?
பெண் : சார் ...நாங்க இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து பேசுறோம் ...ஏற்கனவே உங்களுக்கு சொல்லி இருந்தோம் இல்லியா ...நீங்க வாங்க வரேன்னு சொல்லி இருந்தீங்க இல்லியா ...
ஆண் : நான் ஆபிசில் இருக்கேன் ... நீங்க சொல்லுங்க .. என்ன இன்சூரன்ஸ்?
பெண் : அப்புறம் பேசவா ...?
ஆண் : இல்ல ... சொல்லுங்க என்ன இன்சூரன்ஸ்ங்க ...?
பெண் : லைப் இன்சூரன்ஸ்.. ஏற்கனவே சொல்லியாச்சு ..உங்க வீட்டில அவங்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு
பெண் : இல்லை இன்சூரன்ஸ் பாலிசி ப்ரீயா விழுந்திருக்கு
ஆண் : எங்க விழுந்துச்சுங்க ...?
பெண் : இன்சூரன்ஸ் ஆபிஸ்ல .. ஆயிரம் நம்பர் குலுக்கியதில அவங்களுக்கு இன்சூரன்ஸ் பாலிசி விழுந்திருக்கு சார் ..நீங்க வந்து
வாங்கிக்கறேன்னு சொன்னீங்க ...
ஆண் : அவர் உங்க ஆபீஸ்ல தெரியாம விட்டுட்டு வந்திருப்பாரு ...எடுத்து
வைங்க ...அவருகிட்ட சொல்றேன்
பெண் : வருவாங்களா அவங்க ...ஏன்னா கவருமென்டுல இருந்து வந்து
கொடுக்கிறாங்க...மேனேஜர் வந்து கொடுப்பாரு
ஆண் : மேடம் அவரு விட்டுட்டு வந்திருப்பாருன்னு
சொன்னீங்கல்ல எடுத்து வைங்க மேடம்...
பெண் : அவர் விட்டுட்டு வந்தாருன்னு நான் சொல்லலை .
ஆண் : நீங்கதானே மேடம் விழுந்திருச்சுன்னு சொன்னீங்க
பெண் : சார் நான் சொல்ல வருவதை புரிஞ்சுக்குங்க ..அவங்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி
விழுந்திருக்குன்னுதான் சொன்னேன் ..
ஆண் : ஒரு லட்சம் மதிப்புள்ள பிரிஜ்ஜா ....?
பெண் : பிரிஜ் இல்ல ... பாலிசி சார் ..
பெண் : வைங்க சார் போனை... பாலிசின்னு சொல்றேன் ...பிரிஜா ..பால்
பாக்கெட்டானு கேட்டுகிட்டு ...ஆளைப் பாருங்க
ஆடியோப் பதிவு இரண்டு
( எர்வா மாட்டின் என்ற ஒரு product விற்பனை சம்பந்தமான பரிவர்த்தனை )
பெண் : அதை யூஸ் பண்ணீங்களா ?
ஆண் : நான் மூணு நாலு பாட்டில் யூஸ் பண்ணிட்டேன்.
பெண் : ஒரு பாட்டில்தானே வாங்கியிருக்கீங்க .
ஒரு பாட்டில்தான் இருக்கு
ஆண் : ஒண்ணுதான் இருக்கா ...என்கிட்டே நாலு பாட்டில் இருக்கே
பெண் : ஒரு பாட்டில்தான் நீங்க வாங்கியிருக்கீங்கன்னு இருக்கு .
ஆண் : உங்க கம்ப்யூடரில் ஏதோ பிரச்னை ...நான் நாலு பாட்டில்
எர்வா மாட்டின் வாங்கினேன் .
பெண் : இன்னொன்னு வேணுமா சார்
ஆண் : முதல் பாட்டில் வாங்கி யூஸ் பண்ணதுல கொஞ்சம் முடிதான்
போயிருந்துச்சும்மா
பெண் : எப்படி நீங்கயூஸ் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா ...?
ஆண் : அவங்க எப்படி சொன்னாங்களோ அப்படிதான்மா யூஸ் பண்ணேன்
எனக்கு முதல்ல நல்லா முடி இருந்துச்சும்மா ...கொஞ்சம் முடி
போச்சு ...எல்லோரும் சொன்னாங்கன்னு டிவியில பார்த்துட்டு
உங்க ஆயில் வாங்கி தேச்சேன் .. கூடுதலா முடி போச்சு ...
பெண் : ஓ . கே சார்
ஆண் : அடுத்தடுத்து வாங்கி தேச்சதுல எல்லா முடியும் கொட்டிப் போயி
இப்ப மொட்டை மண்டையா நிக்கிறேன் ...ஒரு போட்டோ
வேணுமின்னா எடுத்து அனுப்பட்டுமா ...?
பெண் : சார் புரோட்டின் ரொம்ப கம்மியா இருந்தா அப்படி கொட்டும் சார் ..
ஆனா எங்க பிராடெக்ட் யூஸ் பண்ணா வேரில போயி முடி நல்லா
வளரும் சார்..யூஸ் பண்ண பண்ண கண்டிப்பா உங்களுக்கு முடி
வரும் சார் ...
ஆண் : எப்ப வரும்னு சொல்றீங்க ...?
பெண் : யூஸ் பண்ணிகிட்டே இருந்தா வரும் சார் ...
ஆண் : தேய்க்க தேய்க்க எல்லாம் கொட்டிப் போச்சு..
போனதுக்கப்புறம் இனிமே தேய்ச்சா
முடி வருமா...?
பெண் : கண்டிப்பா வரும் .
ஆண் : ஒருவேளை மழை பெய்ஞ்சா வருமோ...? வெயில் காலம் அதனால
வர மாட்டீங்குதோ ..?
பெண் : அப்படி இல்லை சார் ... கண்டிப்பா வளரும் சார்
ஆண் : ஒரு பாட்டில் தேச்சப்ப கொட்டிப் போச்சு .. ரெண்டாவது மூணாவது
தேய்ங்கன்னு சொன்னாங்க ...மொத்தமா போச்சேம்மா ...
பெண் : முதல் பாட்டில் தேய்க்கும்போது பொடுகு போகும் ...அடுத்தடுத்து
தேய்ச்சா வளரும்
ஆண் : இது எங்கிருந்து வருது ....பிரேசிலா ...:
பெண் : அமேசான் காட்டிலிருந்து மூலிகை மூலம் தயார் செய்றாங்க சார்
ஆண் : அமேசான் பிரேசிலில்தானே இருக்கு
பெண் : ஒரு நிமிசம் ...( யாரிடமோ கேட்கிறார் )... சவுத் ஆப்பிரிக்காவில்
இருக்கு சார் .
ஆண் : அப்படியா ...? அங்க இருக்கிறவங்களுக்கு இதை விக்கிறீங்களா ...?
அங்க இருக்கறவங்க தலை சொட்டையா இருக்குறதா என் பிரண்டு
சொல்றாரு .
சொல்றதில்லை சார் ...
ஆண் : என் பிரன்ட்ஸ் நாலு பேரு இதே மாதிரி எல்லாம் கொட்டிப்
போச்சுன்னு சொல்றாங்க ...அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது நாலு பாட்டில் வேஸ்ட் பண்ணிட்டேன் ...நாலாயிரம் போச்சு ..முடியும்
போச்சு
பெண் : கண்டிப்பா நான் கம்பிளைன்ட் பதிவு பண்றேன் சார் ..
ஆண் : என்னை கம்பிளைன்ட் பண்றீங்களா
பெண் : இல்ல சார் உங்க கம்பிளைன்ட்ட கம்பெனிக்கு சொல்றேன்
ஆண் : அது சரி ...போன முடிக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க ...இதில
இன்னொரு பாட்டில் வாங்கச் சொல்றீங்க
பெண் : ஆமா சார் யூஸ் பண்ணா கண்டிப்பா வளரும் சார் .. பொல்லுசன்
ஏதாவது இருந்ததுனா பிராபிலம் இருக்கும்
ஆண் : அப்ப தேய்ச்சுட்டு வீட்டுக்குளேயே கிடக்கச் சொல்றீகளா .. வேலை
வெட்டிக்கு போக வேணாமா ...?
பெண் : இல்ல சார் கண்டிப்பா வளரும் சார் . கர்சீப் கட்டிக்கிட்டு ஹெல்மெட்
போடுங்க சார் .
ஆண் : சொட்டை தலையாப் போச்சு ....அதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க ...நாலாயிரம் ரூபாய்க்கு ஒரு விக் வாங்கி கொடுங்கம்மா
வெளியில தலை காட்ட முடியில
பெண் : உங்க தரப்புல கம்பிளைன்ட் பண்றேன் சார் .. கால் வரும் சார்
ஆண் : கால் வந்து என்ன பண்ண... முடி வரணுமே ...நாலாயிரம் ரூபா
திருப்பி தருவதா சொன்னா கூட எனக்கு முடி வளந்திரும்னு
தோணுது ..அந்த ஆறுதல்லேயே ...
பெண் : யூஸ் பண்ணுங்க சார் ...உங்களுக்கு கண்டிப்பா வளரும் சார்
ஆண் : திரும்பவும் யூஸ் பண்ணவா ....அம்புட்டும் போச்சுன்னு
சொல்லிகிட்டு இருக்கேன் ...திரும்ப யூஸ் பண்ண சொல்றீங்களே
ஹா... ஹா... இப்படி பதில் சொன்னால் பல தொல்லைகளிடமிருந்து தப்பிக்க முடியும்....!
ReplyDeleteவலைச் சித்தரே வாருங்கள். நீங்கள் சொல்வது உண்மை . இப்படி வாயடிப்பது ஒரு கலை . எல்லோருக்கும் வராது . நம்மால் இப்படி பதில் சொல்ல முடியுமா?
Deleteநல்ல சம்பாஷனைகள். ரசித்து சிரிக்க வைத்துவிட்டது. வாட் சப் என்னிடம் இல்லை. நிம்மதியாக இருக்கிறேன். ராஜா சார் பாட்டெல்லாம் பரிமாரிக்கொள்ளுவார்களா?
ReplyDeleteகுமார் சார் செல்போனே கையில் இல்லை என்றால் இன்னும் சந்தோசமாக இருப்பீர்கள் . எல்லா பாடல்களும் பரிமாறப்படுகின்றன. திடீரென அதற்கெல்லாம் தடை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாட்சப் மோகத்தை கூட்டிவிட்டு திடீரென பைசா பிடுங்கப் போகிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்று அப்போது தெரியும்.
Delete--உள்ளறையில் படுத்திருக்கும் என்னை என் மகள் ' அப்பா டீ குடிக்க ஹாலுக்கு வாங்க ' என்று வாட்ஸப்பில் செய்தி அனுப்புகிறாள்.----
ReplyDeleteகொஞ்சம் குறும்புக்காரப் பெண்தான் போல.
தடவுற போன் என்று நேர்மையான தமிழாக்கம் கொடுத்திருக்கிறீர்கள் டச் போனுக்கு. சரிதான். வித்தியாசமான பதிவு.
வாங்க காரிகன்
Deleteஇதில் இளையராஜா பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அதனாலேயே இந்தப் பதிவை நீங்கள் ரசித்திருக்கலாம் . வருகைக்கு நன்றி.
அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சென தெரியாமலா பெரியவர்கள் சொல்லிவைத்திருக்கிறார்கள்.எதையுமே முறையாக பயனபடுத்தினால் நலமே.வித்தியாமான பதிவு .நன்றாக. இழக்கிறது .
ReplyDeleteஅருள் ஜீவா
Deleteவாட்ஸப் பயன்பாடு அளவுக்கு மீறினால் இளம்தலைமுறையின் நல்லுறவு, கல்வி எல்லாம் குறைந்து போகும் அபாயம் உண்டு .
அருள் ஜீவா சார்,
ReplyDeleteஎதுக்கு இத்தனை எக்கோ?