அறிவியல் ஆக்கத்திற்கே
மறுப்பதற்கில்லை - ஆனால்
அது செய்யும் மாயம்தான் என்ன !
கைபேசி ......
கைக்குள் உலகமே அடங்கிடினும்
கைக்கு எட்டாதூரத்தில் உறவுகள் !
தொலைகாட்சி .....
தொலைதூரத்து நிகழ்வுகளை
வீட்டிற்குள் கொணர்ந்து
விருந்தோம்பலை
புறக்கணிக்கும் மாயை !
தகவல் வலை.....
எண்ணிலடங்கா தகவல்கள்
அள்ளித் தந்த போதும்
அருகிலிருப்போரை
அந்நியமாக்கும் ஜாலம்!
முக நூல்....
தெரியாத முகங்களுக்காக
உடனிருக்கும் உறவுகளை
தள்ளிவைக்கும் கண்ணாடி!
இவை இல்லாதபோது
கூடிக் களித்திருந்த மனிதன்
அனைத்தும் அடைந்தபோது
அந்நியப்படுத்தப்படுகிறான்
தனிமையில் திக்கற்றவனாய்
தூக்கம் தொலைத்தவனாய்
எதையோ தேடித் தேடி
எல்லாம் தொலைக்கின்றான்.
இதுதான் அறிவியல் செய்யும் மாயமோ!?
(புதிதாய் கணினி வாங்கி இயக்கக் கற்றுக் கொண்டு இணையத்தை இணைத்து வலையப் பதிவுக்குள் நுழைந்து பற்பல செய்திகளும் தகவல்களும் வாசித்து பல அறிவார்ந்த விஷயங்கள் அறிந்து படைப்பாற்றல் புடைக்க நானும் படைக்கிறேன் பேர் வழி என புகுந்து படைப்பது எப்படி பகர்வது எப்படிஎன பலரிடம் விசாரித்து பல மணி நேரங்கள் இதற்காக செலவு செய்து
பதிவராக ஆவதற்குள் , பல குறிப்புகளை எழுதி வைத்திருக்கும் எனது டைரியை எடுத்து எனக்கே தெரியாமல் என் மனைவி எழுதி வைத்த கவிதை நீங்கள் மேலே வாசித்தது!)
ஹலோ புதிய காற்றே,
ReplyDeleteநல்ல "ஜீவனுள்ள" கவிதையைத்தான் உங்கள் துணைவி எழுதியிருக்கிறார். வாழ்த்துக்கள்.கொஞ்சம் நீங்கள் துதிபாடும் அபிமானவரைப் பற்றியும் எதாவது எழுதலாமே ?
திரு சார்ல்ஸ்
ReplyDeleteகர்ரிகனுக்கு நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள்.இனிஒருவில் சௌந்தர் என்பவர் "காப்பியடித்தல் " சம்பந்தமாக அருமையான தொடர் எழுதியிருக்கின்றார்.எம்.எஸ்.வீ., ரகுமானின் நீண்ட பட்டியல் போட்டுள்ளார்.நான் தற்போது தான் பார்த்தேன்.தொடர் கட்டுரை அது.
"தமிழ் சினிமா இசையில் அகத்தூண்டுதல் 4 : T .சௌந்தர்"
என்ற தலைப்பில் கட்டுரை வந்துள்ளது.
காரிகனை இந்த முறை விடுவதாக இல்லை.
நட்புடன் விமல்.
இந்தப்பதிவை பிரசுரிக்கவேண்டாம்.
நல்ல சிந்தனை நறுக்குகள்...
ReplyDeleteதொடர்க...