பிடித்துப் படித்தது
* விவாத ரத்து செய்தவர்கள்
விவாகரத்து செய்வதில்லை.
* போதிக்கும் போது புரியாத விஷயங்கள்
வாழ்க்கையை பாதிக்கும் போது புரிகிறது
*எல்லா பிணங்களும் புதைக்கப்படுவதில்லை.
சில நடமாடிக்கொண்டிருக்கின்றன.
*வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை.
அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாகச் செய்கிறார்கள்.
*அன்பு நேரம் காலத்தை மறக்க வைக்கும்.
நேரம் காலம் அன்பை மறக்கடிக்கும்.
*அரசியலில் பணி செய்பவர்களை விட
பணியில் அரசியல் செய்பவர்கள் அதிகம்.
*முதல் குழந்தை பெண் பிள்ளை எனில்
இரண்டாம் குழந்தைக்கு இரண்டு தாய்.
*கடைசியில் எல்லாம் சரியாகும் என்று நம்புங்கள்
சரியாகவில்லை என்றால்
இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.
*புத்தகங்களை பின்பற்றுங்கள் ஆனால்
அதன் ஆசிரியரை பின்பற்றாதீர்கள்
*தூக்கத்தில் வருவது கனவல்ல
தூங்கவிடாமல் செய்வதே கனவு.
நன்று. இதில் ஒன்றும் ஏழும் அருமை.தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeletet.parameswaran
ReplyDeleteவாழ்த்துக்கள்.
காரிகனுக்கு அருமையான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.இசை பற்றி இனிஒரு [ WWW.INIORU.COM / தமிழ்த்திரை இசையில் ராகங்கள் : [ 8 ] : T.சௌந்தர் ] என்ற இணையத்தில் ஒருவர் அருமையாக பல கட்டுரைகள் எழுதி வருகிறார்.பார்க்கவும்.அமுதவன் மிகக் கொடுமை.
Hallo vimal thanks for coming . Tamil typing is not working suddenly now . This is why I am writing in English. I just read your all comments in kaarigan's blog . Thanks for introducing new blog . meet you often
ReplyDeleteகடைசியில் பார்த்தால் மற்றவர்கள் சொன்னதை காப்பி பேஸ்ட் செய்து பதிவு என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள்தான் அந்த "சார்லசா"? சரிதான். இங்கேயும் விமல் வந்து பத்தவச்சுட்டு போய்விட்டாரா? என்ன தொண்டு?என்ன ஒரு சேவை மனப்பான்மை? முதலில் சொந்தமாக எழுதுங்கள் சார்லஸ் அவர்களே. அதன் பின் நாம் உக்கிரமாக வாரத்தை விளையாட்டு நடத்தலாம்.
ReplyDeleteகாரிகன் வாங்கண்ணா ... வணக்கங்கண்ணா ... கடைசியில் என்னோட பதிவுக்குள்ளேயே வந்து விளையாட ஆரம்பிச்சாச்சா ? சரிதான் ..நான் காப்பி பேஸ்ட் செய்ற ஆள்தான் .. ஆனா ..நீங்க அமுதவன் சௌந்தர் பதிவுகளின் காப்பி பேஸ்ட் மாதிரிதான் பதிவு போட்டிரிக்கீங்க ..உங்க பதிவை உள்ள போய் பார்த்தேன் . அவர்கள் சொல்லாத என்னத்தை நீங்க சொல்லிட்டீங்க ?
ReplyDeleteபுதிய காற்று புண்ணியவானே,
ReplyDeleteஉங்கள் சொந்த எழுத்தில் ஒரு பதிவை வெளியிட்டபிறகு என்னை குற்றம் சொல்லியிருந்தால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.மேலும் எதைப் பற்றி எழுதினாலும் அதற்கு ஒரு முன்னோடி இருப்பதை தவிர்க்க முடியாது."புதிய ராகம் படைப்பதாலே நானும் இறைவனே" என்று சுய புராணம் பாட நானென்ன உங்கள் இளையராஜாவா?